ஹாய் தோழீஸ் உதவுங்கள்

ஹாய் தோழீஸ் உதவுங்கள். நான் வரும் ஞாயிறு அன்று இந்தியா போகிரேன். எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். என் மாமியார் வீட்டில் நெட் வசதி இல்லை. எனக்கு அங்கு போய் பிரியானி செய்ய வேண்டும். அருசுவை நெட் இருந்தால் தான் உபயோகிக்க முடியும். எனக்கு பிடித்த குரிப்புகளை நான் எப்படியாவது என் கம்பியூட்டரில் சேவ் பன்னி வைக்கலாமா. என்னிடம் லாப்டாப் தான் இருக்கு. அதனால் அதை நான் எடுத்து செல்வேன். என்னிடம் பிரிண்டர் இல்லை. நான் எப்படி எனக்கு விருப்ப பட்ட குரிப்புகளை சேவ் செய்து கொண்டு போவது. அங்க போய் திரு திருனி முழிக்க கூடாது பாருங்க. தயவு செய்து பதில் தாருங்கள். அட்மின் அண்ணா உங்களால் முடியும் என்று நினைக்கிரேன். உங்களை நம்புகிரேன் அண்ணா எப்படியாவது ஒரு ஆலோசனை சொல்லுங்கள்.

ஹாய் தோழீஸ் மைக்ரோ ஓவன் ல நாம் சமைக்கும் போதும் ரீகீட் பன்னும் போது திறந்து வைத்து பன்ன வேண்டும்மா அல்லது மூடி வைக்க வேண்டும்மா. அவன்ன இல்லைங்க நாம் சாமைக்கும் பொருளை கேட்டேன். என்னப்பா யாரும் பதில் தரல என்னாச்சி.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

என்னப்பா எனக்கு யாரும் பதில் போடல ரொம்ப வருத்தமாக இருக்கு.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியா நலமாபா.வெயிட் பண்ணுங்கபா கண்டிப்பா பதில் கிடைக்கும்.

அன்புத்தோழி
S.J

நினைக்க மறந்தாலும் மற்க்க நினைக்காதே

ஹாய் சக்தி நான் நலம். நீங்க நலமா. உங்க பதில் ஆருதலாக இருக்கு. அரட்டை அடிக்க மட்டும் கூப்பிட்டா எல்லாரும் ஓடி வருவாங்க. இங்க ஒரு பொன்னு (அதுவும் சின்ன பொன்னு) :-). ஒரு உதவி கேட்டா யாரும் வரது இல்ல. இங்க யாரும் எல்லாம் பதிவு போடலியோ அவங்களுக்கு நான் இந்தியால இருந்து வரும் போது ஒன்னும் வாங்கிட்டு வர மாட்டேன். சக்தி உங்களுக்கு ஒரு குச்சி மிட்டாள் எக்ஸ்ரா. ஏன்னா நீங்க தான் முதல்ல எனக்கு பதில் போட்டது.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

என்னங்க இதுக்கெல்லாம் வருத்தப் பட்டுகிட்டு இருக்கீங்க!!!
எல்லாரும் ரம்ஜான் கொண்டாட்டத்தில இருப்பாங்க அதான் பதில் போடல. எனக்குத் தெரிஞ்சத சொல்கிறேன்.

ஒவ்வொரு குறிப்புக்கும் கீழ அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம் இருக்கும் பாருங்க. அத ஓபன் பண்ணி அந்த குறிப்பை Computer-ல் save பண்ணிக்கலாம்.

மைக்ரோவேவ் - மூடி வைத்து செய்வதே நல்லது என கேள்விப்பட்டிருக்கிறேன்.

அன்புடன்,
இஷானி

ஹாய் இந்தியா வ்ரீங்களா வெல்கம் டூ இந்தியா.நாங்கள் நலம்..

அன்புத்தோழி
S.J

ஹேலோ சோனியா நான் ஆனந்தி
பிரியாணி செய்வது அப்படி என்று உங்கள் மெயில் id இக்கு பாஸ் பண்ணிவிட்டு பிறகு சேவ் ஆப்ஷன் போய் எக்ஸெல் இல் சேவ் பண்ணிபாருங்க. கரெக்டான்னு தெரியல பட் முயற்சி பண்ணுங்க . நான் இப்படிதான் கதை சேவ் பண்றேன்.

இப்பம் எப்படிபா பதில் வருது. குச்சி மிட்டாய் வாங்கி தரமாட்டேன்னி சொன்னதும் எல்லாரும் வந்து பதில் போடுரிங்களா. எபப்டி போட்டாலும் சக்திக்கு தான் அதிக் மிட்டாய்.இஷானி நீங்க சொன்னதை முயச்சி செய்து பார்த்துடு சொல்ரேன். சரி வரவில்லை என்றால் மருபடியும் கேட்பேன். பதிலுக்கு நன்றி.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹலோ ஆனந்தி நீங்க சொன்னது எனக்கு சரியா புரியல. மைல் ஐடிக்கு அனுப்பிடு அப்புரம் என்ன செய்ய வேண்டும் என்பதை எனன்கு கொஞ்சம் விளக்கமாக கூறவும். நான் கொஞ்சம் மக்கு தான். உங்கள் பதிலுக்கும் நன்றி.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹேலோ சோனியா , நான் ஆனந்தி
பிரியாணி செய்வது எப்படின்னு உங்க மெயில் இக்கு பாஸ் பண்ணிட்டு உங்க மைல் இக்கு போயி ஓபன் பண்ணி அந்த பைல் இக்கு முன்னாள் சின்னதா ரெட் கலர் பாக்ஸ் போயி எண்டர் பண்நா can you save or open என்று கேட்கும் நீ சேவ் என்று குடு எக்ஸெல் இல் சேவ் ஆயிடும். ஓ கே வா

மேலும் சில பதிவுகள்