அரட்டை அரங்கம் 2010 பகுதி ‍‍ 20

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...
இங்க வந்து தொடருங்க அரட்டையை...

மாமீ.. அரட்டை ஆரம்பிச்சாச்சு.. மன்னி ஆத்தில இருந்து எதாவது ஸ்பெஷலோட வாங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அனைவருக்கும் காலை வணக்கம்

மாமி..... இன்னைக்கு லீவு விட்டுட்டேளா.........கடைசி வெள்ளி ஸ்பெசல் சாப்பாடு போலருக்கு....... ம்ம்ம்.. ஜமாய்ங்கோ.....

இலா மேடம் அரட்டை ரொம்ப வேகமாக ஜெட் விமானம் ரேஞ்சுக்கு போகுது...... 20 ஆயிடுத்தே.........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆரம்பிச்சிடீங்களா... வாழ்த்துக்கள்

அன்புடன்
THAVAM

ஆத்துலே ஸ்பெஷல் அயிட்டங்கள் உண்டுன்னு சொல்லிட்டு எங்கள கூப்பிடமறந்துட்டேளே... சரி சரி நாங்களே வந்துடுறோம். எல்லோரும் சாப்பிடாம வாங்க, இன்று மாமி வீட்ல விருந்து, சீக்கிரமா வாங்க... தம்பி ஆஷிக் வண்டிய கொண்டு வாங்க.

அன்புடன்
THAVAM

ஹாய் தோழிகளே ஃபில்ட்ர் காபியை பற்றி கொஞ்சம் சொல்லுங்கப்பா. நான் 6மாதமாக பயன் படுத்திரேன் காபி கொட்டயை வாங்கி அங்கேயே அரைத்து வாங்கிட்டு வந்து பயன் படுத்துறேன் அப்ப்டி வாங்கும் போது காபி கொட்டை பார்த்து வாங்கனுமா?இதுல வெரைட்டி ஏதாவது இருக்கா?காபி இன்னும் டேஸ்டா வர என்ன செய்யலாம் இப்படி பல கேள்வி இருக்கு யாராவ்து ரொம்பா நாளா பயன் படுத்துறவங்க விள்க்கம் கொடுங்க எல்லோருக்கும் பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.

அன்புடன்
தோழிS.J

தவமணி அண்ணா

என்னை மறந்துவிட்டீா்களே... கவனிக்கவில்லையா? நலமா? மாமி கூப்பிடலைன்னா என்ன, நான் கூப்பிடறேன் வாங்க.... அண்ணா வந்தா ஸ்பெசலா கவனிக்க மாட்டோமா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தோழி சக்தி
நலமா? தாங்கள் எங்கு இருக்கிறீா்கள்?. இந்தியா என்றால் நரசுஸ், லியோ போன்ற காபிப்பொடி கிடைக்கும். தாங்கள் எங்கு உள்ளீா்கள் என்று கூறவும்... காப்பிக் கொட்டை அரைத்துப் பொடி செய்தால் வாசனையுடன் நன்றாக இருக்கும். ஆனால் திக்னஸ் கம்மியாக இருக்கும் டிக்காஷனில்... நார்மலாக கடைகளில் காப்பிப் பொடியுடன் சிக்கரி கலந்திருப்பார்கள். அது திக்காக இருக்கும் டிக்காஷன் போட்டால்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் ராதா ஹரி உங்கள் பதிலுக்கு நன்றி நாங்கள் இந்தியாவில் தான் இருக்கோம் பா. நான் நரசுஸ்,லியோ லாம் வாங்கினது இல்லை பா.காபி டே எனகிற ஷாப் எங்க வீட்டு கிட்ட இருக்கு சோ நான் அங்கே தான் வாங்கி அதை அவங்களே அரைத்து தராங்க நான் வாங்கும்போதே சிக்கரி இல்லாம தான் கேட்டு வாங்குவேன்.

அன்புடன்
தோழிS.J

ஒவ்வொரு கடையும் ஒவ்வொரு மாதிரியான காப்பிக்கொட்டை வாங்கி வைத்திருப்பார்கள். நிறைய பேருக்கு சிக்கரி இல்லாம இருந்தா தான் பிடிக்கும். அப்போ உங்களுக்கு என்ன மாதிரியான சந்தேகம்-னு சொல்லுங்க. தெரிஞ்சா சொல்றேன். என் அம்மா வீட்ல நரசுஸ் தான் எப்பவும். மாமனார் வீட்ல லியோ (சிக்கரி இல்லாம). காபி டே கேள்விப்பட்டிருக்கேன். ஆனா வாங்கினது இல்ல...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஓ அப்படியாப்பா. காபி கொட்டையில் வெரைடீஸ் இருக்கா?காபி பவுடர பிரிஜில் ஸ்டோர் பண்ணலாமா? பில்டர் காபி போடும் சரியான முறை சொல்லுங்க பா?

மேலும் சில பதிவுகள்