மறந்துவிட்டீர்களா மாமனிதர்களை?

காலங்கள் அந்த நாட்களை
புரட்டிப்போட்டாலும்
கறைகள் இன்னும் படிந்தேயிருக்கின்றன.

"வீரம் என்பது பயமில்லாதபடி
நடிப்பது "என்பதில் எனக்கு
நம்பிக்கையில்லை
இல்லையென்றால் லெனினின்
புரட்சி பற்றிய
புத்தகத்தை மரணத் தருவாயிலும்
பகத்சிங்
படித்துக் கொண்டிருந்திருப்பானா?

மயிருக்குச் சமமாய் உயிரை மதித்து
மரித்திருப்பானா அந்த கொடிகாத்த குமரன்?

அக்னி கவிதைகளால்
ஆங்கிலேயர்களுக்கு சூடு வைத்திருப்பானா
பாரதக்கவி பாரதி?

இல்லையெனில்
ஆங்கிலேயர்களுக்கு
திப்புசுல்தானின் இராணுவப்படை
ஆப்பு வைத்திருக்குமா?

சுதந்திரம் என்பது
அரசு விழாக்களும் பள்ளிகளின்
அவசர ஒத்திகை நாடகங்கள் மட்டுந்தானா?

இந்தவிழாவுக்கு எத்தனை
தலைகளை காவுகொடுத்தோம் என்பதில்
கவனமின்றி இருக்கிறோமா?

தேசியக் கொடியின்
சிவப்பு வண்ணம் நமதுவேங்கைகள்
சிந்திய இரத்த்ததின்
கறை என்பதில்
கவனம் இருக்கட்டும்

காந்தியின் ஆத்மா இன்னும்
சாந்தியடையவில்லை என்றே
நினைக்கிறேன்
நடுஇரவில் பெண்கள்தனியாக
நடந்துபோகலாம் என
இன்று வரை தகவலேதுமில்லை

காலங்கள் அந்த நாட்களை
புரட்டிப்போட்டாலும்
கறைகள் இன்னும் படிந்தேயிருக்கின்றன.

எனவே சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்பதை அரசு விழாக்களும்,சில நாடகங்களும் பட்டிமன்றமும் மட்டும் சொல்லக் கூடாது...
ஒவ்வொரு இந்தியனின் சொல்லிலும்,செயல்களிலும் அது வெளிப்படவேண்டும்! ஜெய் ஹிந்த்!
அறுசுவையின் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த சுதந்திரதின நல்வாழ்துக்கள்!

ஷேக் அறுசுவைக்கு என்னுடைய முதல் பின்னூட்டம். நல்ல கவிதை. சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது. அறுசுவை தோழிகள், தோழர்களுக்கு என்னுடைய சுதந்திரத்தின நல்வாழ்த்துகள்.


கப்பலேரி போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்ட நடு ராவாச்சு
நட்ட வெடை பூவாச்சு பொன்னம்மா
விடியும் வரையில் போராடினோம்
உதிரம் நதியாய் நீராடினோம்
வெட்க்கமெல்லாம் வாலாச்சு
துக்கமெல்லாம் தூலாச்சு கண்ணம்மா
கண்ணம்மா...
நம்ம வாசல் தேடி சாரல் வரும்
எதிர் வானம் தூவும் தூரல் வரும்
வாழ்வில்... சூழ்ந்த..ஸ்
சோகம்... யாவும்... இப்ப
(கப்பலேரி)

வாலி சார் எழுதிய இந்தியன் பட பாடல்

வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!

எல்லாருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி...
நோகாமல் நொங்கு திங்குறதுங்கிறது
இதானோ?
அன்புடன்
ஆஷிக்

முதல் பதிவே தேசப்பற்றோடு தொடரட்டும் ஸ்வேதா மேடம்.வாழ்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மாமி நோக்கு கவிதை தெரியாதா?நீங்கள்தான் பெரிய கவியாச்சே!ஏன் சினிமாபாட்டை காப்பிபன்னி போட்றேள்..மனசுக்கு கஸ்டமாய்டுத்து கேட்டேளா...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அனைவருக்கும் இதயம் கனிந்த சுதந்திரதின நல்வாழ்துக்கள்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கவிதை எழுதுவதே பெரிய திறமை, நீங்கள் எல்லாவற்றை பற்றியும் எழுதறீங்க, வாழ்த்துக்கள் அண்ணா.

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

ஷேக் அண்ணா
புரட்சிகரமான கவிதை... விடுதலை பெற்ற நாடு இன்னும் வீறுகொண்டு எழாமலே இருக்கிறது.... அந்த நாள் என்றோ........

அழகான சுதந்திர தின வாழ்த்து... நன்றி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்