ரவா இட்லி

தேதி: August 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (24 votes)

 

வெள்ளை ரவை - 1 டம்ளர்
கேரட் - ஒன்று (துருவியது)
பெரிய வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் - சிறிது
பச்சை மிள்காய் - காரத்திற்கு ஏற்ப
தயிர் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
கடலை பருப்பு - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு


 

கேரட்டை துருவி வைக்கவும், பச்சை மிளகாய் மட்டும் தனியாக காரத்துக்கு ஏற்ப மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும், பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய் போட்டு வாசம் போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் அதோடு ரவையை கொட்டி 5 நிமிடம் வதக்கவும்.
பின் வதக்கிய அனைத்தையும் ஆற வைக்கவும், ஆறிய பிறகு தயிர், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ளவும்.
இட்லி தட்டில் துருவிய தேங்காய், கேரட் வைத்து அதன் மேல் இந்த மாவை ஊற்றி, இட்லியை போல வேக வைத்து எடுக்கவும்.
சுவையான ரவா இட்லி ரெடி. இதற்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பவி

பார்க்கவே செம கல்ர்ஃபுலா சூப்பரா இருக்கு..;) நல்ல குறிப்புகள் மேலும் பல கொடுக்க வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆஹா...

அழகான கலர்....பாக்கவே அவ்வளவு அழகு

அசத்திட்டீங்க போங்க!

செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.

வித்தியாசமான குறிப்பு!

வாழ்த்துக்கள்...........!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஓ இதுதானா அன்னைக்கு நீ சொன்னது?ஓக்கே..இதுக்காகவே மனைவிகிட்ட சொல்லி நாளை ட்ரை பன்னி பார்கிறேன்..
நான் பார்க்காமலேயே சொல்கிறேன் பவி...இது ஐயங்கார் சமையல் ஆச்சுதே..ரொம்ப நன்னா இருக்கும்..நேக்கு நம்பிக்கை இருக்கு உனக்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங் கொடுத்தது வேறுயாருமில்லலை.நானேதான்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

உங்க அண்ணி நாளைக்கு செய்யப் போறாங்க. நாம் சாப்பிடப் போறோம். சாப்பிட்டவுடன் மறு பதிவு செய்கிறேன்.

அன்புடன்
THAVAM

பவி... சம கலர்ஃபுளான சுவையான குறிப்பு :) சாப்பிட வரலாமா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா


ரவா இட்லி 100 பார்சல்!

நேக்கு மட்டும்தான்!

கொரியர் சார்ஜ் நான் கொடுத்துடரேன்.!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என் குறிப்பை வெளியிட்டதற்கு நன்றி.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்
பவித்ரா

உங்க வாழ்த்துக்கு நன்றிப்பா, ஏதோ எனக்கு தெரிஞ்சதை கொடுக்கிறேன். ஆனா கொடுக்கறதுக்கு முன்னாடி தேடி பார்ப்பேன் ஏற்கனவே இருக்கான்னு, ரவா இட்லி இல்லை அதான் கொடுத்தேன்

அன்புடன்
பவித்ரா

உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, ட்ரை பண்ணி பாத்துட்டு பதிவு போடுங்க

அன்புடன்
பவித்ரா

முதலில் சமையல் குறிப்பு பக்கம் வந்ததற்காகவும் 5 ஸ்டார் கொடுத்ததற்காகவும் நன்றிண்ணா, அண்ணிய செய்ய சொல்லி சாப்டுட்டு பின்னோட்டம் கொடுங்க.

அன்புடன்
பவித்ரா

பொதுவா ஆண்கள் சமையல் பக்கம் வரமாட்டாங்க, தங்கைக்காக வந்து பதிவும் போட்டு செஞ்சும் பார்க்கிறேன்னு சொல்லிருக்கீங்க, நன்றி அண்ணா,

அன்புடன்
பவித்ரா

நன்றி அக்கா, வாங்க சாப்பிடலாம்.

இதுல பட்டாணிய ஊறவைத்துக்கூட போடலாம் (தேவைன்னா), சொல்ல மறந்துட்டேன்.

அன்புடன்
பவித்ரா

நன்றி மாமி

100 இட்லி போதுமா, கொரியர் தானே உங்களுக்காக செலவை நானே ஏத்துக்கறேன்.

அன்புடன்
பவித்ரா

பவி, சமையல்லயும் கில்லாடியா. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சும்மா கலக்கு.
நளைக்கு பண்ணி பாத்துட்டு எப்டி இருந்ததுன்னு சொல்ரேன்.

நன்றி கோம்ஸ்,
ட்ரை பண்ணுங்க நல்லாதான் இருக்கும். அப்படியே எனக்கும் ரெண்டு அனுப்புங்க சரியா

அன்புடன்
பவித்ரா

நீயே கொடுதத ரெசிப்பி யை உனக்கே கொடுக்கனுமா. என்ன ஜோக்கா?

பவி
கலர்fஉல் ஆ இருக்கு...
நான் இதை செய்து பர்க்கிரேன்.........

பவி, ரவா இட்லி நல்ல கலர்புல்லா இருக்கு. இன்னும் நிறைய ரெசிப்பிகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
வாணி

பவித்ரா மிகவும் அருமை, நல்ல சுவையான ரவா இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. 5 மார்க் கொடுத்தாச்சு

அன்புடன்
THAVAM

பவி,
நல்லா இருக்கே
இதே போலே தான் நானும் செய்வேன்
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாணி, கவிதா

உங்க வாழ்த்துக்கு நன்றி.

தவமணி அண்ணா
செஞ்சு பார்த்துட்டு பின்னோட்டம் கொடுத்ததற்கு நன்றி.

அன்புடன்
பவித்ரா

ஹய் பவி உங்கள் ரவா இட்லி சூப்பர் வித்யாசமா கலர்புல்லா இருக்கு வாழ்த்துக்கள் இட்லி மாவு சேர்க்காமலே இப்படி செய்யலாமா கண்டிப்பா செய்து பார்த்துவிட்டு சந்தேகங்களை கேட்பேன் நன்றி பவி, மேலும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

உங்க வாழ்த்துக்கு நன்றி.
இட்லி மாவு சேர்க்காமலேயே செய்யலாம். எந்த சந்தேகம் என்றாலும் கேளுங்கள்.

அன்புடன்
பவித்ரா

Hai பவி நான் ரவா இட்லி செய்தேன். கொஞ்சம் வழவழப்பாக இருந்தது.என்ன செய்வது?

நிஷா

முதலில் செய்து பார்த்ததற்கு நன்றி.

நீங்க கொஞ்ச நேரம் ஜாஸ்தியா வேக வச்சுருப்பீங்கன்னு நினைக்கிறேன், நான் கரெக்ட்டா பத்து நிமிஷம்தான் வைப்பேன், அடுத்த முறை ஒரு நிமிடம் முன்னாடி எடுத்துப்பாருங்க,

அன்புடன்
பவித்ரா

15 நிமிஷம் வைத்தேன். அடுத்த முறை 10 நிமிடம் வைத்து பார்த்து சொல்கிறேன்.நன்றி பவி

நிஷா

ரவா இட்டி சூப்பரா வந்திச்சு பவி. நன்றி பவி உங்களுக்கு. இந்த குறிப்பு இப்போ என் விருப்பப்பட்டியலில். இனி மேல் தேவையில்லைமா ஏன் ரவா இட்லி மிக்ஸ்லாம் வாங்கிட்டு அதான் பவியோட குறிப்பு இருக்கே.

10 நிமிஷம் போறும் நிஷா.

கௌரி
நன்றி செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு. இந்த மாதிரி ஊக்கம் தான் இன்னும் நிறைய குறிப்பு அனுப்பனும்ன்னு தோன்றுவதற்கே காரணம், நன்றி.

அன்புடன்
பவித்ரா

அன்பு பவித்ரா

நேத்திக்கு என் மகள் உங்க குறிப்பைப் பார்த்து, ரவா இட்லி செய்தாளாம். "YUMMY"யா இருக்கு, சான்ஸே இல்லம்மா, சூப்பர் டேஸ்ட், செய்யறதுக்கும் சுலபமாக இருந்தது, சீக்கிரமாக செய்ய முடிஞ்சது, அப்படின்னு ஏகப்பட்ட பாராட்டுகள் தந்தா, அப்படியே அந்தப் பாராட்டுகளை இங்கே குடுத்துட்டேன்.

அருமையான குறிப்பு தந்திருப்பதற்கு பாராட்டுகள்!

தாங்க்ஸ் பவி,

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மகிழ்ச்சி!!உங்க மகளிடம் ரொம்ப சந்தோஷம் என்று சொல்லுங்க. அவங்களும் அறுசுவை உறுப்பினரா சீதாம்மா?? ரொம்ப ரொம்ப நன்றி சீதாம்மா:)))

அன்புடன்
பவித்ரா

பவி நான் இன்னக்கி ரவா இட்லி செய்தேன் ஏனோ தெரியல இட்லி கொஞ்சம்கல்லு மாதிரி ஆகிட்டு. மற்றபடி டேஸ்ட்லாம்சூப்பரா இருந்துச்சு. ஏன் பவி கல்லு மாதிரி ஆச்சு எனக்கு காரணம் புரியல நான் என்ன தவறு செய்தேன்னு.

அடடா, என்ன செய்தீங்கன்னு தெரியலையே. ஒரு வேளை வறுத்தது ஆறுவதற்கு முன்னாடியே தயிரில் கலந்திட்டீங்களோ, இல்லைன்னா அது இட்லி பதமில்லாமல் இருந்திருக்கும். அடுத்த முறை செய்தால் இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடியே இறக்கிடுங்க யாழு. முடிந்தால் தைரியத்தோடு இன்னொரு முறை ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க:)

அன்புடன்
பவித்ரா

நலமா பவி? ரவா இட்லி நல்ல மெதுமெதுன்னு இருந்தது தேங்காயும் கேரட்டும் இல்லாமல் செய்தேன் சூப்பர் ...இத்தனை நல்ல குறிப்புகளை கொடுத்த செல்வி பவித்ராவுக்கு என் அன்பான ஒரு மல்லிகை ரோஜா கலந்த பொக்கே ..பிடிங்க மல்லிகை வாசத்தில் மயங்கிடாதிங்க ...நன்றி

வாழு, வாழவிடு..