கவிதா மற்றும் இந்திரா - வாழ்த்துக்கள்

அன்பு தோழிகளே...

முதல்ல நம்ம கவிதா(uk5mca), இந்திரா(Indra.S.Pillai)'கும் வாழ்த்து சொல்லுங்க. சொன்னா தான் காரணம் சொல்வேன்... ;)

இரண்டு பேரும் ரொம்ப சின்ன காலத்துலயே 25 குறிப்புகளுக்கு மேல் கொடுத்தவங்க(கவிதா - 37, இந்திரா - 27)!!! அது மட்டும் இல்ல... அவங்க குறிப்புகள் எல்லாமே விளக்கப்பட குறிப்புகள் என்பது விஷேஷம்!!!

அவங்க செய்தது ரொம்ப பெரிய விஷயம். இருவருக்குமே நல் வாழ்த்துக்களும், நன்றிகளும். :)

வாழ்த்த வாங்க தோழிகளே.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா


ஹனி கூப்டா வராம இருப்பேனா!

கவிதா(uk5mca), இந்திரா(Indra.S.Pillai)'கும் வாழ்த்து சொல்லரேன்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கவி,இந்திரா வாழ்த்துக்கள்.உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.நான் பின்னூட்டம் குடுக்க நினைப்பேன்,அதுக்குகூட சில சமயம் நேரமிருக்காது.உங்களுடய நிறைய குறிப்புகள், என் விருப்பப்பட்டியலில் உண்டு.நன்றிகள் பல.

கவிதா ,இந்திரா

இருவருக்கும் வாழ்த்துக்கள். இது போல் மேலும்,மேலும் அதிகமான விளக்கபட குறிப்புகள் கொடுத்து முதல் இடத்திற்கு வர வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிதா - இந்திரா ரெண்டு பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள் பா. இன்னும் நிறைய சமையல் குறிப்புகளை தந்துட்டே இருங்க. எங்க வீட்டு ஆளுங்கள அசத்த வேண்டாமா? :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா மேடம்,
ரொம்ப நன்றி
சந்தோஷமாக இருக்கு..
வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் மிக்க நன்றி
இந்திரா மேடம் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துக்கள் கவிதா, இந்திரா அக்கா. மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவிதா

வாழ்த்துகள்! அனேகமாக தினம் ஒரு குறிப்பு கொடுக்கறீங்க. அதே போல, உங்க குறிப்புகளுக்கு பின்னூட்டத்துக்கு பதில் பதிவும் கவனமாகக் கொடுக்கிறீங்க. பாராட்டுகள், வாழ்த்துகள்!

அன்பு இந்திரா,

வாழ்த்துகள்! பாராட்டுகள்! உங்களுடைய சுலப முறுக்கு குறிப்பு, இப்ப எங்க டாப் லிஸ்டில் இருக்கு. மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அறுசுவையில்
அருமையாக
அனைவருக்கும்
அனுபவ பூர்வமாக குறிப்பு சொல்லி
அன்புடன் பின்னூட்ட வழங்கி வரும்
தங்களின் குறிப்புகள்
மேலும் மேலும்
தொடர
என் வாழ்த்துக்கள்........

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து

குறுகியய கால அவகாசத்தில் நிரைய குறிப்புகள் கொடுத்து
அசத்தி இருக்கீங்க. இதுபோல இன்னமும் நிரைய குறிப்புகள்
கொடுக்கவும். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்