தேதி: August 16, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
1. பால் - 2 கப்
2. கேரட் துருவல் - 3 தேக்கரண்டி
3. உருளை துருவல் - 3 தேக்கரண்டி
4. கோதுமை மாவு - 2 தேக்கரண்டி
5. சர்க்கரை - தேவைக்கு
பாலை காய்ச்சி, அதில் துருவல் சேர்த்து நன்றாக வேக விடவும்.
இதில் கோதுமை மாவை கரைத்து ஊற்றி கைவிடாமல் கலக்கவும்.
மாவு பாதி வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
விரும்பினால் கடைசியாக மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்றாக கலந்துகொடுக்கலாம்.
Comments
வனிதா மேடம்
வனிதா மேடம்,
நல்ல எளிமையான குறிப்பு
18 மாத குழந்தைக்கு தரலாமா?
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கவிதா
கவிதா.. மிக்க நன்றி :) 18 மாத குழந்தைக்கு தாராளமா கொடுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா