குறும்பு கோழிகளே இங்க வாங்க!

தோழிகள், தோழர்கள் எல்லாரும் நலமா? நாம எப்பவுமே நினைச்சு ஏக்கப்படற பல விஷயங்கல்ல குழந்தைப்பருவமும் ஒன்னு. அத எப்ப நினைச்சாலும் சந்தோஷமா இருக்கும், நீ சின்னகுழந்தையா இருக்கும் போது அப்படி பன்னினே இப்படி பன்னினேன்னு சொல்லும்போது நம்மளையே அறியாம மனசுக்குள்ள ஒரு மகிழ்ச்சி வரும். பயங்கர குறும்பு பன்னி அம்மா அப்பாக்கிட்ட அடி வாங்கிட்டு கூட சும்மா தெம்பா சுத்திருப்போம்... அடிவாங்கியதை நண்பர்கள், சொந்தபந்தங்கள்கிட்ட கூட சொல்லி சிலசமயம் பெருமைப்பட்டு இருப்போம்... என்ன குறும்பு பன்னுனீங்க எதுல அடி வாங்குனீங்கன்னு சொன்னா எல்லாரும் சந்தோஷமா கேப்போம்ல??? அதமாறி விஷயங்களை இங்க தோழிகள் பகிர்ந்துக்கலாமே...

ஆக மொத்தத்துல “ சொந்த கால்ல சூனியம் வைக்க வாங்க” அப்படின்னு சொல்றீங்க சரி தானே லதா?

குறும்பு கோழிகள் வாங்க பா.....

(லதா தோழிகளை கோழிகள்ன்னு சொன்னா கோபம் வந்து கொத்திற போறாங்க:)

எஸ்கேப்பூ...........

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

லதா

ஆமி சொல்றது தான் எனக்கும் தோனுது ;) ஆமி சொன்னத பாத்து சிரிப்பு தான் போங்க ...
நான் செஞ்சது நிறையா இருக்கு.. சொல்லி மாளாது.. நாளைக்கு வந்து சொல்றேன் சரியா ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


கோழி சண்டை பாக்கனும்னு காத்தாலதான் நெனச்சேன்.!

என் கூட முத முதல்ல பேசின லதாவுக்கு டெலிபதி ஆகி குசும்பா சாரி குறும்பா கோழிகளை கூப்டுருக்காங்கோ!

இதான் FRIENT SHIP போலருக்கு!

அசைவம் சாப்பிடரவா எல்லாரும் இங்க வந்து கோழிகளின் குறும்பை குசும்ப சொல்லனும்.

ஏன்னா அவாளுக்குதான் அதுங்களோட பாஷை புரியும் ஹிஹிஹி............

இருங்கோ எங்காத்துலயும் ஒரு கோழி ஜோக் இருக்கு.

நேக்கு சிரிப்பு தாங்கலை..........

நாளய்க்கு சொல்றேன்பா

ஹஹஹாஆஆஆஆஆஆஆ

ஹிஹிஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

ஹுஹுஹூஊஊஊஊஊஊ

ஹெஹெஹெஏஏஏஏஏஏஏஏஏஏ

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

குறும்பு கோழி பத்திதான , உங்களுக்கு நான் சொல்றேம்பா!.

நாங்க சின்னதா இருக்கும் போது எங்க மாமா கோழி அடிச்சு குழம்பு வைக்கலான்னு சொல்லி ஒரு கோழியய் பிடிச்சு இறகு எல்லாம் எடுத்துட்டாரு. இத எங்க அக்கா கூடவே இருந்து பாத்துட்டு இருந்தாங்க. கத்தி எடுக்க உள்ள போனபோது கோழி எந்துருச்சு ஓடிருச்சு!. (அது மயக்கத்துலதான் இருந்துருக்கு).

அப்புறமென்ன, கோழி சாப்பிட்டா இப்படிதான் வயத்துல இருந்து வெளியே ஓடுமுன்னு பயந்து கோழி சாப்பிடறதையே நிறுத்திட்டாங்க.

பொல்லாத குறும்புக்கோழி இறக்கை எல்லாம் முளைச்சு திரும்பவும் ஒருநாள் வந்துருச்சு. கழுத்துல மட்டும் இறக்கை வரல. அப்புறம் அதுக்கு ஆயிசு கெட்டினுட்டு யாரும் ஒண்ணும் பண்ணல.

Don't Worry Be Happy.

நல்லாருக்கீங்களா? வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா? முதல் பதிவு கொடுத்ததற்க்கு நன்றிங்க. சொந்த கால்ல இல்லைங்க சொந்த காசுல சூனியம் வெக்கதான் கூப்பிடுறேன். ஹாஹாஹா

ரொம்ப குறும்பு பன்னரவங்களை எங்க பாட்டி குறும்புகோழின்னு தான் சொல்லுவாங்க நிறைய பேர் சொல்லிக் கேட்டுருக்கேன் அதான் நானும் அப்படியே தலைப்பு வெச்சுட்டேன், ஆனா பாருங்க கோழிகள்/தோழிகள் நல்லாருக்கு இல்லையா? கொத்துனா கூட பரவால்ல திட்டாம இருந்தா சரி தான்...

ஆமா என்னங்க எஸ்கேப்பூன்னு சொல்லிட்டு ஓடிட்டீங்க நீங்க சின்ன வயசுல பன்ன குறும்பு அதுக்காக யார்ட்ட அடி வாங்குனீங்க அதெல்லாம் சொல்லி எங்களை சந்தோஷப்படுத்துவீங்கன்னு பாத்தா....... இதெல்லாம் சரி இல்லைங்க வந்து சின்னதா ஒன்னாது சொல்லிட்டு போங்க... ஓகேவா...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஜெயலெட்சுமி

சூப்பர் கதை! வயிறு குழுங்க சிரிச்சுட்டேன்.

உங்க குறும்பு கோழி கதை கேட்டதும் எனக்கு எங்க வீட்டு குறும்பு கோழி ஞாபகம் வந்துவிட்டது!

நாங்களும் அது போல் 2 குறும்பு கோழி வளர்த்தோம். நாங்க ஊருக்கு போனா கூட எங்களுக்காக எங்க வீட்டு ஓட்டு மேல படுத்து காத்துட்டு இருக்கும். அந்த குறும்பு கோழிக்கு எங்க மேல அவ்வளவு பாசம்!
அதுனால அந்த குறும்பு கோழியை நாங்க அடிச்சு,கொழம்பு வைக்காம செல்லமா வளர்த்தோம்!

லதா இந்த குறும்பு கோழி கதை வேண்டுமா?
மிச்ச கதையை நாளைக்கு சொல்றேன்! உங்கலூக்கு ரொம்ப தான் குறும்பு போங்க!:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா கதையில்லபா உண்மைதான்.

இன்னொரு கதை இருக்கு, என் தங்கை சொல்றேன்னு சொன்னா!.

கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன்.

லதா! கோழி கதை மட்டும்தான் வேணுமா!.

நாய், பூனை,எலிக் கதைகூட இருக்கு.

Don't Worry Be Happy.

லதா

யானைக்கும் அடி சருக்கும்.இது வரைக்கும் இங்கிலீஸ்ல தான் தப்பு தப்பா சருங்குனேன். இன்னைக்கு உங்க தலைப்ப பார்த்துட்டு தமிழே வழுக்கிவிட்டுருச்சு!

லதா ஓபன் பண்ண த்ரெட் என்பதால் தான் இந்த மாறி எழுதுனேன். ஏன்னா அவங்க ரொம்ப நல்லவங்க :)
எதுவும் சொல்ல மாட்டாங்கன்னு;0
அதே மாறியே நீங்க என்னைய திட்டாம பதிவு போட்டதுக்கு உங்களுக்கு நன்றி!
அரட்டைய இதோட நிறுத்திக்கிறேன். நாளைக்கு என்னன்ன குறும்பு பண்ணேன்னு வந்து வெளாவரியா சொல்றேன். ஓக்கே வா மின்னல்?!:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்லாருக்கீங்களா? நிறைய இருக்குன்னு சொல்லிட்டு என்ன பன்னீங்கன்னு சொல்லாம இப்படி ஓடிட்டீங்களே நீங்க பன்ன குறும்பை கேக்க ஆவலாக இருக்கோம்... சீக்கிரம் வாங்க...

மாமி நல்லாருக்கீங்களா? வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா? உண்மையான அன்பு மனசுல இருந்தா நீங்க எந்த மூலைல இருந்தாலும் நான் நினைக்கும் போது என் நினைவு வரும் மாமி... கோழின்னு போட்டிருக்கறதால உங்களுக்கு சம்பந்தம் இல்லாததுன்னு நினைச்சுராதீங்க வந்து உங்க சிறு வயது குறும்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்...நீங்களும் நாளைக்கு சொல்றேன்னு இப்படி எஸ்கேப் ஆய்ட்டீங்களே? உங்களுக்கே நல்லாருக்கா... சரி சரி சீக்கிரமா வாங்க காத்துட்டு இருக்கோம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நல்லாருக்கீங்களா? என்னால சிரிப்பு தாங்கமுடியலை தனியா சிரிச்சுட்டு இருக்கேன் வினீ என்ன ஒருமாறியா பாத்துட்டு போறாங்க...ஹாஹாஹா. இப்பகூடவா நீங்க சாப்டரதில்லை? அப்பறம் குறும்புகோழின்னதும் கோழிச்சேட்டையை மட்டும் சொல்லாம உங்க சேட்டைகளையும் அவுத்துவிடுங்க... சரியா...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்