லெமன் பிஷ்

தேதி: August 18, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

பிஷ் பில்லட் - 2
சோளமாவு - 1/4 கப்
மிளகு தூள் - 1 tsp
லெமன் ஜெஸ்ட் (எலுமிச்சையின் மேல் தோல்) - 1 tsp
எலுமிச்சை சாறு - 3 tsp
வெண்ணை - 2 tsp
பார்ஸ்லே இலை - அலங்கரிக்க
உப்பு - தேவையான அளவு


 

மீனை சுத்தம் செய்து ஒரு திசு பேப்பரால் ஈரப்பதத்தை ஒத்தி எடுக்கவும். பிறகு சிறிதளவு உப்பு தூவி தனியே வைக்கவும்.
மாவுடன் தேவையான அளவு உப்பு (ஏற்கனவே சிறிதளவு உப்பு தூவி உள்ளோம்) மிளகு தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.
பெரிய பானில் வெண்ணை உருக்கி மீனை மாவில் பிரட்டி பானில் இடவும்.
2 நிமிடம் கழித்து சிறிதளவு லெமன் ஜெஸ்ட் மீன் மேல் தூவி எலுமிச்சை சாற்றையும் ஊற்றி 2 நிமிடம் மேலும் வேக விட்டு திருப்பி போடவும்.
4 நிமிடம் ஆனபின் இறக்கி பார்ஸ்லே தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா மேடம்,
என் மகளுக்கு ஏற்ற நல்ல குறிப்பு
மேலும்பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா மேடம்

ப்ளீஸ் என்னை மேடம் என்று கூப்பிடாதீங்கோ.......
வாழ்த்துக்கு நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!