முடி கொட்டுகிறது.......

hi all....
என் கணவரின் தலையில் சிறிய வட்டம் வட்டமாக (பூச்சி வெட்டு மாதிரி) முடி கொட்டுகிறது.வெங்காயம் தேய்த்து பார்த்தாலும் அந்த இடத்தில் திரும்ப முடி வரவில்லை.என்ன செய்தால் முடி வரும்?

இது சிலவேளை ஸ்கின் பங்கல் இன்பெக்சனாக(skin fungal infection) இருக்கலாம். நீங்கள் கட்டாயமாக வைத்தியரிடம் காட்டுங்கள் இல்லாவிட்டால் நாட்கள் செல்லச் செல்ல எல்லா இடமும் பரவிவிடும், அதற்குரிய மருந்து பாவித்தீர்கள் என்றால் நாளடைவில் மீண்டும் அவ்விடத்தில் முடி வளரும்.

ஹாய் கிருத்தி http://www.arusuvai.com/tamil/node/7709 இந்த த்ரெட் பாருங்க. சில டிப்ஸ் இருக்கு. டாக்டரிடம் போய் காட்டி வாருங்கள்.

என்னுடைய ப்ரண்டுக்கும் இதே பிரச்சைனை தான் இருந்தது அவங்க ஹோமியோபதி மருந்து எடுத்துகிட்டாங்க இப்போ முடிக் கொட்டிய இடத்தில் எல்லாம் அதன் சுவடு கூட இல்லாமல் நன்கு பழையப்படி முடி வளர்ந்து விட்டது. நீங்கள் முதலில் டாக்டர பார்த்து அதை எதனால் என்று தெரிஞ்சுக்கோங்க. நான் நண்பர் கிட்ட இன்னும் விபரமா கேட்டு சொல்றேன்.

டியர் kiruthika
செம்பருதிபூவை முடி கொட்டிய இடத்தில் தேய்துவர முடி வளரும். அனுபவத்தில் கண்ட உண்மை இது

டாக்டரிடம் காமித்தும் சரி வரவில்லை.செம்பருத்தியை try செய்து பார்க்கிறோம்.thank u friends for u'r useful tips.......

brighy light

மேலும் சில பதிவுகள்