டிரஸ் டிப்ஸ்

ஹாய் தோழிகளே எல்லோரும் எப்படி இருக்கீங்க... இந்த பதிவு இங்கு உள்ள எல்லா தோழிகளுக்கும் உதவும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன்....
பெண்களுக்கு நிறைய டிரஸ் மாடல்ஸ் உள்ளது... ஆனா ஒரு சிலர் பார்த்திருக்கேன்.. அவர்களுக்கும் அவர்கள் போடும் டிரஸ்க்கும் மேட்சிங்கே இருக்காது.... உங்களுக்கு தோன்றும் ஐடியா இங்கு சொல்லுங்க தோழிகள்.. (குண்ட, குள்ளமா இருகுரவுன்களுக்கு மற்றும் ஒள்ளியவளத்தியா இருகுகுரவுங்களுகும் சூட் ஆகும் டிரஸ் டிப்ஸ் சொல்லுங்க)
முதல எனக்கு சொல்லுங்க....
நான் கொஞ்சம் குண்டாக, உயரம் கம்மியா, மாநிறமாக இருபேன்...
எப்போதும் சுடிதார் தான் போடுவேன்.. எப்போவாச்சும் சாரீஸ் கட்டுவேன்... (மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை தான், அல்லது விஷேசங்களுக்கு கட்டுவேன்) எனக்கு எதுமாதிரியான டிரஸ் சூட் ஆகும்...
(டார்க் கலர்ஸ் சூட் ஆகுமா, சுடிதார்ல காட்டன் சூட் ஆகுமா இல்ல சிந்தடிக் சூட் ஆகுமா, நெக் மாடல் எது நல்ல இருக்கும், சாரீஸ்ல சின்னது பார்டர் அல்லது பெரிய பார்டர் சூட் ஆகுமா)
நிறைய கேள்வி கேட்டுட்டேன்... மன்னிக்கவும்... வேணுமா ரெண்டு அடிவேனும்னா கூட அடிச்சுகொங்க... ஆனா எனக்கு பதில் மட்டும் போடாம போய்டாதீங்க....

ஸ்டெல்லா நானும் உங்க த்ரெட்லயே தேர்ந்துகுறேனே, நானும் இத பத்தி இங்க கேட்கனும்னு நினைச்சேன் ஸ்டெல்லா நீங்களே ஆரம்பிச்சு வச்சுட்டீங்க தாங்ஸ். நான் கொஞ்சம் உயரமா ஒல்லியா இருப்பேன் அதனால காட்டன் வெரைட்டி சுடிதார் தான் நிறைய போடுவேன். அது தான் சூட் ஆகும் கூட. ஆனா என் உயரைத்தை கம்மியா காமிக்க எந்த மாதிரியான டிசைன்ஸ் உள்ள டிரெஸ் போடனும்னு எனக்கு எந்த ஐடியாவும் இல்ல.
என்னால இந்த ஷாட் குர்தாஸ்லாம் போடவே முடியல ரொம்ப உயரமா காமிக்குது. இல்ல அப்படியான வெரைட்டி தேர்ந்தெடுக்கறனான்னும் தெரியல. ப்ளீஸ் யாராவது ஐடியா கொடுங்க.

அன்பு ஸ்டெல்லா...

//குண்டாக, உயரம் கம்மியா, மாநிறமாக இருபேன்//

உங்களுக்கு எனக்கு தெரிந்த சில அலோசனைகள்... ;)

1. பொதுவா குண்டா இருந்தா காட்டன் பொருந்தாது. சிந்தடிக் உங்களை கொஞ்சம் ஒல்லியா காட்டும்.

2. உயரம் கம்மியா இருக்கவங்க எப்பவுமே பெரிய பாடர் இருக்கும் புடவை, சுட்தார் டாப் போடுவது பொருந்தாது. சின்ன பாடர் தான் அவர்களை கொஞ்சம் உயரமா காட்டும்.

3. பூக்கள் உள்ள துணியாக இருந்தா சின்ன சின்ன பூக்கள், சின்ன சின்ன டிசைன் இருப்பது நன்று.

4. கோடுகள் உள்ளதாக இருந்தால் குறுக்கு கோடு வேண்டாம், நேர் கோடுகள் இருப்பது நலம்.

5. நிறம் குறைவாக இருப்பவர்களுக்கு எப்போதும் லைட் கலர்ஸ் தான் நல்ல பொருத்தம். சிலருக்கு ப்ரைட் கலர்ஸ்'ம் பொருந்தும். டார்க் டல் கலர்ஸ் உங்களை இன்னும் கருப்பா காட்டும். டார்க் ப்ரைட் கலர்ஸ் பார்ட்டி போன்ற அதிக வெளிச்சம் உள்ள இடங்களுக்கு பொருந்தும்.

6. உங்களுக்கு சுடிதாரை விட அழகான சிந்தடிக் புடவைகள் பொருந்தும். உங்களை ஒல்லியாகவும், அழகாகவும் காட்டும்.

7. நெக் டிசைன் குருகளானதா இருந்தா நல்லது. பெரிய, அகன்ட நெக் பேட்டர்ன்ஸ் வேண்டாம்.

8. சுடிதார் பேன்ட் கேதரிங் டைப் போடுங்க. ஒல்லியா காட்டும். பேரலல் வேண்டாம்.

9. புடவை அழகா சின்ன சின்ன மடிப்பு வைத்து கட்டுங்க... ஒல்லியா அழகா இருப்பீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நமக்கு பிடிச்சிருந்தாலும் நமக்கு பொருந்துர டிரஸ் போட்ட தான் பார்க்க நல்லா இருக்கும். நான் ஒல்லியா இருப்பேன் ஆனால் எனக்கு சேலை தான் நல்லாயிருக்கும்னு எல்லாரும் சொல்ராங்கா. அதனால நான் சுடிதார் அவ்வளவா போடுரது இல்ல.
குண்டா இருக்கிரவங்க சுடிதார் போட்ட நல்லா இருக்கும்.
ரொம்ப குண்டா இருக்கறவங்க பூணம் சேலை கட்டினா நல்லா இருக்கும்

குண்டாக இருப்பவர்களுக்கு குர்தா வித் ஜீன்ஸ் சரியாக இருக்கும். டார்க் கலர் இருந்தால் சூட் ஆகும்.
மெரூன்,கருப்பு போன்ற கலர் எடை குறையாக காட்டும். முடிந்த வரை டிசைன் இல்லாமல் ப்ளைனாக இருந்தால் பொருத்தமாக இருக்கும்
சின்ன பாடர் சேலை தான் சரியான சாய்ஸ்.

ஒள்ளியா உயரமா இருப்பவர்களுக்கு அனார்கலி, அம்பர்லா கட்டிங் சுடிதார்கள் பொருத்தமாக இருக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

யாழினி...

1. உயரமா ஒல்லியா இருந்தா எப்பவுமே பெரிய டிசைன்ஸ் உள்ள துணியை தேர்வு செய்யுங்க.

2. ஷார்ட் குர்த்தாலாம் சரிவராது, ஓரமா போடுங்க.

3. புடவை கட்டினா மடிப்பு வைக்காம சிங்கிலா விடுங்க. அப்போ உயரம் குறைவா தெரிவீங்க.

4. சுடிதார் தெச்சா கேதரிங் பேன்ட்'லாம் போடாதீங்க, ரொம்ப ஒல்லியா குச்சியா காட்டும். சாதாரண பேன்ட் உள்ள ரகத்தை தேர்வு செய்யுங்க.

5. காட்டன் உங்களுக்கு எல்லா வகைலயும் பொருந்தும். புடவை, சுடிதார் எல்லாமே கட்டன் நல்ல சாய்ஸ்.

6. பாடி ஹக் டைப் சுடிதார்ஸ் வேண்டாம். கொஞ்சம் ரெடிமேட் மாதிரி... ஷேப் இருந்தாலும் உடம்பை ஒட்டி வராத மாதிரி சுடிதார் நன்றாக இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க காட்டன் சுடிதார் கூட ட்ரை பண்ணி பாருங்களேன் வளர். சூட் ஆகும்னு நினைக்கிறேன். மிக்ஸ்டு வெரைட்டி காட்டன் சுடிதார் சூஸ் பண்ணுங்க வளர். நல்லா இருக்கும். இது ஜஸ்ட் ஒரு ஐடியா தான் சொன்னேன் கோவிக்க வேண்டாம்.

ஓ இப்ப தான் எனக்கு ஒரு க்ளியர் ஐடியா கிடைச்சு இருக்கு. நிச்சயம் ட்ரை பண்றேன் வனிதா. ஆமாம் நீங்க சொன்னது போல கேதரிங் மாடல் பேண்ட்லாம் ட்ரை பண்ணிட்டு நமக்கு சரி வராதுன்னு விட்டுடேன். ஷார்ட் குர்தா தான் கொஞ்சம் கவலையா இருக்கு அது எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நன்றி வனிதா.

நன்றி. இதுல கோவிக்கிரதுக்கு ஒன்னுமே இல்ல. என் கணவரும் சொல்லுவாரு காட்டன் சுடிதார் நல்லா இருக்கும்னு.

யாழினி ஷாட் குர்தா ரொம்ப இஷ்டம்'னா நான் சொல்லும் விதம் ட்ரை பண்ணுங்க. பேரலல் பேன்ட்ஸ் கூட முட்டுக்கு கொஞ்சமே மேல் நிக்குற ரக டாப்ஸ். [ஷாட் குர்தா'ல நிரைய வகை உண்டு. ஒன்னு ரொம்ப ஷாட் தொடையோட நிக்கும், ஒன்னு முட்டு வரை வரும். அதுலையும் அம்ப்ரெல்லா கட் மாடல்கள் வரும். ]

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா ஷாட் குர்தாஸ் போடும் போது பேண்ட் பேரலல் பேண்ட்(patiala) தான் போடறேன், ஆனா டாப்ஸ் தான் முட்டுக்கும் மேல இருக்கற மாதிரி வாங்கிட்டேன். இப்ப நான் க்ளியர் வனிதா. டாப்ஸ்ல அம்ப்ரெல்லா கட் வருமா வனிதா அதாவது ஸ்ரைட்டா இல்லாமல் அப்படியே கர்வ்வா வருமே அதுதான சொல்றீங்க. நன்றி வனிதா.

மேலும் சில பதிவுகள்