சிம்பிளா வரலக்ஷ்மி நோன்பு எப்படி கும்படலாம்...

வரலக்ஷ்மி நோன்பு எப்படி கும்படலாம்நு வந்து பகிர்ந்து கொல்லுங்கள் தோழிகளே... அதுவும் கொஞ்சம் சிம்பிளா கும்பிடனும்னா என்ன பண்ணலாம்...

பொதுவா நோன்பு செய்யும் வழக்கம் இருந்தால்தான் செய்வார்கள்.

புகுந்த வீட்டில் இல்லாமல் பிறந்த வீட்டில் இருந்தால் ஆவணியில் வரும் வரலட்சுமி தினத்தன்று நோன்பு அம்மா வீட்டிலிருந்து (மாமியார் அனுமதியுடன்) எடுத்துக்கொண்டு செய்யலாம்.

நோன்பு உண்டு, சிம்பிளாக செய்யவேண்டும் என்றால்.

அம்மன் முகத்தை இழை கோலம் போட்ட பலகையில் வைத்து உங்கள் வசதிபோல் அலங்காரம் செய்து புத்தகத்தில் போட்டிருப்பதுபோல் பூஜை செய்யலாம். நைவேத்தியத்திற்கு கொழுக்கட்டை, பச்சரிசி இட்லி, உளுந்து வடை (எந்த பூஜைக்குமே உளுத்தவடை தான் செய்வார்கள்.) அப்பம், பால் பாயசம் செய்ய வேண்டும்.

பக்திதான் முக்கியம். நீங்கள் கேட்பதிலிருந்தே பூஜை செய்ய நீங்கள் ஆவலாக இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. உங்கள் வசதிப்படி செய்யலாம்.

வேறு ஏதாவது விளக்கம் வேண்டும் என்றால் குறிப்பிட்டு கேளுங்கள் சரண்யா. பதில் சொல்கிறேன்.

அன்புடன்
ஜெமாமி

நன்றி ஜெமாமி...நான் வரலக்ஷ்மி நோன்புக்கு அம்மா வீட்டுக்கோ மாமியார் வீடுக்கோ போக முடியாது மாமி... வேலைக்கு செல்வதால்,காலையில் எல்லாவற்றையும் செய்து விட்டு கிளம்ப நேரம் குறைவாக தான் இருக்கும்... இருந்தாலும் எதாவது ஒரு இனிப்பு செய்து பூஜை பண்ணலாம்னு ஆசையாக இருக்கிறது... அம்மன் அலங்காரம் என்றால் கும்பத்தில் தேங்காய் வைத்து அலங்காரம் செய்வதய் தான் சொல்றீங்களா?

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

எங்கள் வீட்டில் இந்த நோன்பை இரவு தான் செய்வோம். இப்பலாம் சிலர் மதியமே செய்கிறார்கள். எனக்கு தெரிந்து இரண்டு முறை இருக்கு சரண்யா நீங்க சிம்பிளா கேட்டதுனால இத சொல்றேன்.
நோன்புக்கு, வீட்டை சுத்தம் செய்ங்க.(கூட்டுவது, துடைப்பது தான்) உங்க வீட்ல வரலெட்சுமி போட்டோ இருந்தா அதை துடைத்து பொட்டு, பூ எல்லாம் வைத்து அலங்கரிங்க. நீங்க இந்தியால இருந்தா நோன்பு கயிறு என்று கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிக்கோங்க. அப்படி இல்லைனா சாதாரண நூலை தேவையான அளவு நறுக்கிக் கொண்டு அதில் மஞ்சள் தேய்த்து வைத்துக் கொள்ளுங்க. பூஜையில் வைக்க வேண்டியது பழங்கள்(ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை மாம்பழம், கொய்யா), பூ, தாலிகயிறு, மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு(மஞ்சள் கயிறு), புது புடவை ரவிக்கை, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய். இது எல்லாத்தையும் வைத்து பூஜை போட்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடமிருந்து அல்லது உங்கள் கணவரிடமிரூந்து பூ, பூடவை வாங்கிக் கொள்ளனும். அப்பறம் அந்த பூஜையில் வைத்த கயறை கட்டிக் கொள்ளனும்.
நெய்வேத்தியத்திற்கு, அப்பவே இடித்து, பாகு காய்ச்சி செய்த அதிரசம் வைக்கனும், இல்லை என்றால் கடலைபருப்பு பூரணம் வைத்த கொழுக்கட்டை வைக்கலாம்.
நீங்கள் சிம்பிளா செய்யனும் நினைத்தால் பால் பாயாசாம், சர்க்கரை பொங்கல், இப்படி ஏதாவது ஒன்று வைத்து நெய்வேத்தியம் செய்யலாம் சரண்யா

k

மேலும் சில பதிவுகள்