idea குடுங்கப்பா

அஸ்ஸலாமு அலைக்கும்

நாலைக்கு எங்க வீட்ல இப்தார் பார்ட்டி இருக்கு. 50 பேருக்கு மேல் வராங்க. யாராவது என்ன செய்யாம்னு idea குடுங்கப்பா.

நோம்பு கஞ்சி
ரோஸ் மில்க்
கடல் பாசி
சமோசா
பராத்தா -ஆடு கறி குழம்பு - சண்ணா மசாலா
வெர என்ன idea குடுஙப்பா

அந்த 50 ல என் பேரு இருந்திருந்தா இந்நேரம் இங்க ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டிருப்பேன்.. ம்ஹூம்.. குவைத்தில பார்ட்டி கொடுக்கிறதுக்கு இங்க ஐடியா கேக்குறாங்கப்பா.. இதில லிஸ்ட்டை வேற போட்டு ஸ்டமக்கை பர்ன் பண்றாங்க.. :-(

அதுசரி, சென்னையில இஃப்தார் பார்ட்டியெல்லாம் யாரும் கொடுக்க மாட்டாங்களா? அடுத்த வாரம் சென்னை ட்ரிப் இருக்கு.. யார் யார் பார்ட்டி கொடுக்குறீங்கன்னு இப்பவே சொல்லிடுங்க.. என்ன ஷேக் சார்.. இந்த முறை வீட்டுக்கு வந்துடலாமா?? :-)

அடுத்த கெட்டு கெதர் அதுக்குள்ளையும் வைக்கிறீங்க? கொஞ்சம் மாச கடைசில வச்சா நாங்களும் பாபு அண்ணா பர்ஸை காலி பண்ணுவோம்ல!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இது அண்ணன் கொடுக்கிற பார்ட்டி இல்லையாக்கும்.. அண்ணனுக்கு கொடுக்கிற பார்ட்டி.. நாங்க பர்ஸ்ஸையும், வயிறையும் காலியா வச்சுக்கிட்டுத்தான் வருவோம். :-)

சேக் அண்ணா

உங்களை பாபு அண்ணா கூப்பிடுறாங்கோ!

ஆமி எஸ்கேப்......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹஹஹா.... கடைசிவரைக்கும் பார்ட்டிக்கு யாரும் ஐடியா குடுக்கலயா??? அண்ணா வாங்க வாங்க... புதுசா பாட்டி ஆன ஒருத்தர் எனக்கும் பார்ட்டி தராங்கலாம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஏற்கனவே ஷாதிகா அக்கா அழைப்பு கொடுத்துட்டாங்க. ஒருநாள் நோன்பு துறப்பு விருந்து அவங்க வீட்டில.. என்னென்ன அயிட்டம்னு போய் வந்த பிறகு போட்டோவோட போடுறேன். :-)

ஷேக் கும் ரொம்ப நாளா கூப்பிட்டுக்கிட்டு இருக்காரு. ஒரு நாள் அவர் வீட்டிலதான். இந்த முறை நாங்க குடும்பத்தோட வர்றோம். இப்பவே சொல்லிட்டேன். :-)

50 பேருக்கு நீங்க சமைக்கறீங்களா? வெளிய வாங்கறீங்களா??

சமைப்பதுன்னா பராதா சரி வருமா? யோசிங்க. பூரி'னா ஓகே, சீக்கிரம் ஆகும், இல்லன்னா பென்ட் நிமுந்துடும்.

எதாவது நெய் சாதம், புலாவு ரெடி பண்ணலாம்.

கூடவே எதாவது ஃப்ரை, ரோஸ்ட், salad, raithaa சேர்க்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப கஷ்டமான ஐடெமாகவே செய்யாமல் லிஸ்ட் போட்டு சுலபமாக அதே சமயம் சுவையாக இருக்குமாறு எழுதி வைக்கவும்..
எங்கள் வீட்டில் என்றால் என் லிஸ்ட் இப்படி இருக்கலாம்
1)க்ரேப் ஜூஸ்
2)தரி கஞ்சி அல்லது பாயாசம்
3)நோன்பு கஞி

ஸ்னேக்ஸ்
======
பேரீச்சம்பழ பால்
கேரலா பழ கேக்
ஸ்ப்ரிங் ரோல்
பஜ்ஜி வகைகள்
ஃப்ரூட் சாலட்
சைனா க்ராஸ் புட்டிங்

மெயின் கோர்ஸ் கு
=============
வெளியில் கொஞ்சம் பரோட்டா வாங்குவேன்
வெஜிடபில் ஃப்ரயிட் ரைஸ்
எதாவது குருமா
எதாவது வறுவல் அல்லது ரோஸ்ட்
சாலட்
மகரோணி(குழந்தைகளுக்காக)

அது முடிந்து ஸ்வீட்டுக்கு
குலாப் ஜாமுன்
குழந்தைகளுக்காக ஜெல்லி
மற்றும் பாயாசம்

இதில் எனக்கு எல்லாமே சுலபம் தான்..சில டிப்ஸ் வேண்டுமெனில் சொல்கிறேன்...ஸ்ப்ரிங் ரோல் போன்றவற்றை முன்வே செய்து ஃப்ரீசரில் வைத்து விடுவேன்.
அதற்கான ஸ்டஃபிங் சுலபமானதாக பார்த்து செய்வேன்.
குவைத்தில் தானே நல்ல போன்லெஸ் சிக்கன் கிடைக்குமே வாங்கி மசாலா சேர்த்து வேக வைத்து வற்றவிட்டு உடைத்து வெங்காயம்,மசாலா சேர்த்து சிக்கன் வதக்கி உள்ளே ஸ்டஃப் செய்யலாம்
இது கஷ்டமா வெறும் முட்டை,வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்துமல்லி சேர்த்து சிக்கி உள்ளே ஸ்டஃப் செய்யலாம்
விருப்பம் போல் வெஜிடபில்ஸ் கூட வைக்கலாம்

பிரியாணியா அதற்கான வதக்கும் பொருட்களை முந்தின நாளே செய்து விருந்தன்று தண்ணீர் உலைவைத்து அரிசி போட்டால் போதும்
குருமாவா அதுக்கும் மசாலாவை முந்தின நாள் செய்து வைத்து விடுவேன் அடுத்த நாள் சிக்கனோ மட்டனொ சேர்க்க வேண்டும்.சுலபம்
ஸ்வீட்ஸ் எல்லாம் முந்தின நாள் தான்

கூடுமானவரை பழையதாக இருக்காதவாறும் புதிய சுவையோடும் முந்தின நாள் மசாலா செய்து உடனுக்குடன் தயாரிக்கலாம்.
எனக்கு அன்றைய வேலை என்பது முக்கியமாக டிஸ்போசபில் பாத்திரங்களை கைக்கெட்டும் இடத்தில் வைப்பது.கார்பேஜ் கு சவுகரியம் செய்து விடுவது..இல்லையென்றால் பிள்ளைகள் அசிங்கமாக்கி விடுவார்கள்..அவர்கள் சாப்பிடும்போதே டைனிங் ரூமிற்கு வெளியில் கதவருகேயே சுவற்றில் கார்பேஜ் பெரிய பேகை செல்லோ டேப் அடித்து ஒட்டி விடுவேன்.
நல்ல ப்லேன் பன்னி செய்தால் அருமையாக செய்யலாம்.எந்தென்த பாத்திரத்தில் பரிமாற என்பதை கூட முன்கூட்டி ஆலோசித்து வைத்தால் ரொம்ப சுலபம்
இதில் ஸ்னேக்சில் பேரீசம்பழ பால் என்பது பேரீஇச்சம்பழம் மசித்ததும் தேங்காய் துருவலும் சேர்த்து மசித்து மைதா கலவையில் முக்கி பஜ்ஜி போல் வறுப்பது
கேரளா பழ கேக் என்பது
கேரளா பழத்தை லேசாக வதக்கி,முட்டை,நட்ஸ் ,இனிப்பு சேர்த்து சுட்டெடுப்பது

பாபு சார் என்னைபோய் சார் மோர்னுகிட்டு..ஏன் இந்த ஃபார்மாலிடிஸ் நமக்குள்?
நீங்கள் வரும் முன் ஜஸ்ட் ஒரு மெசேஜ் கொடுத்தாபோதும்!
யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் சார்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்