ஒரு விஷயத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.சமீபத்தில் நம் தமிழ் பெற்றோர் தான் இங்கு மூன்று வயதுக்குற்பட்ட இரண்டு குழந்தைகளை காரில் போட்டு பூட்டி விட்டு அருகில் ஷாப்பிங்கிற்கு போயிருக்கிறார்கள்..இங்குள்ள கொடுமையான வெயிலுக்கு குழந்தைகள் வரண்டு தினறி தவிக்கையில் அருகில் பார்க்க செய்ய வந்த ஒருவர் கண்டு போலீசில் சொல்லி குழந்தைகளை காப்பாற்றினார்கள்.
இம்மாதிரி பெற்றொர் பலரும் செய்வதை கண்டிருக்கிறேன்..இப்படியான கிறுக்குத்தனத்தை தயவாய் செய்யாதீர்கள்....எங்ஜினை ஆண் பன்னி விட்டு அருகில் நின்று ஃபோன் பேசுவது அல்லது குழந்தைகளை முன் சீட்டில் விளையாட விடுவது ஆபத்து..எதுவோ ஒரு நியாபத்தைல் நாம் மறந்து விடுவோம்..அவர்கள் கார் ஓட்டி விடுவார்கள்.
கவனம்
டீவி செய்தியில் பார்த்தது.
கார் உள்ளே பின்புறம் குழந்தை இருந்துள்ளது. சாலையில் போய் கொண்டிருக்கும் போது பின் கதவு திறந்து விட்டதால் குழந்தை சாலையில் விழுந்துவிட்டது. நல்லவேளையாக பின்னால் எந்த வாகனமும் வராததால் காயங்களுடன் குழந்தை தப்பித்தது.
கதவு சரியாக க்ளோஸ் ஆகாததால் வந்த விளைவு இது. பெற்றோர்கள் சற்று கவனமுடன் இருந்தால் நலம்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
கவனம்
தளிகா..
நானும் இதை பற்றிய பல செய்திகளை படித்தும், தொலைக்காட்சியில் பார்த்தும் இருக்கிறேன்..
மேலும்
குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டால், அடித்து மிரட்டுவது எல்லா நேரத்திலேயும் சரி வராது. நம்மிடம் மறைக்கும் அளவு அவர்களை மாற்றக் கூடாது. என் பக்கத்து வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். அவரின் அம்மா தான் குழந்தையை பார்த்துக் கொள்வார். சரியான அறுந்த வால் அந்த சுட்டி பையன். தவறு செய்தால் வெளியே தள்ளி கதவை சாத்திவிடுவார் அந்த பாட்டி. அவருக்கும் சமாளிக்க முடியாததே காரணம்.ஆனால் அப்படி செய்தால் அவன் பயந்து போய் கதறி அழ ஆரம்பித்துவிடுவான். ;(
ஒரு நாள் அவன் வீட்டில் உள்ள கோலப்பொடியெல்லாம் எடுத்து கொட்டி விட்டு திட்டுவார்கள் என பயந்து பக்கத்தில் கன்ஷ்ட்ரஷன் ஒர்க்குக்காக வெட்டிருந்த குழியில் சென்று இறங்கிவிட்டான்.. சுமார் 4 அடி உள்ள குழி.. அனைவரும் ஒரு இரண்டு மணி தேடி கடைசியில் அழுது புழம்பி அவனை கண்டுபிடித்தனர்.. ;)
வேலைக்கு செல்லும் பெற்றோர்களே கவனம்.
இனி பலரும் பலவற்றை பகிர்ந்தால் நல்லது..
நல்ல உபயோகமான தகவல்.. நன்றி
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
குழந்தைகள் கவனம்
நேற்று கூட இணையத்தில் படித்தேன். இரண்டு வயது குழந்தையை காரில் விட்டு விட்டு தந்தை எதிர் சைடில் இருக்கும் கடைக்கு ஏதோ வாங்கப் போனாராம். இந்த பையனும் பின்னாடியே இறங்கி ரோட்டின் குறுக்கே ஓடியிருக்கிறான். ஒரு டேக்சி ட்ரைவர் இதை கவனித்து காரை நிறுத்தி விட்டு இறங்கி கை காண்பித்து எதிர்திசையில் வரும் வாகனங்களை நிறுத்தியிருக்கிறார். அதனால் பையன் எந்த அடியும் இல்லாம தப்பித்தான். அந்த அப்பா வந்து பையனைப் போட்டு மொத்தினாராம். பாவம் குழந்தைக்கு என்ன தெரியும். தனியே விட்டுச்சென்றது அவர் தவறு. இது நடந்தது யுஏஇ யில்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
hai thalika
hai pa neenga gulfla enga irukinga
kuttireyama