கத்தரிக்காய் சாலட்

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய கத்தரிக்காய்கள் - அரைக் கிலோ
வெள்ளை எள் - கால் கப்
எலுமிச்சம் பழம் - ஒன்று
பூண்டு - 3 பல்
உப்பு - ஒரு சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

எலுமிச்சையை நறுக்கி, விதைகளை நீக்கி, பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காய்கள் ஒவ்வொன்றாய் தணலில் காட்டி சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு கத்தரிக்காயின் உட்புற சதைகளை மட்டும் எடுத்து கட்டியின்றி பிசையவும்.
இத்துடன் வெள்ளை எள், எலுமிச்சை சாறு, பூண்டு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மசிய அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அத்துடன் ஆலிவ் எண்ணெய் கலந்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த கத்திரிக்காய் சாலட்டின் படம்

<img src="files/pictures/aa206.jpg" alt="picture" />