அருசுவை தோழிகளுக்கு திருவோணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்

திருவோணத்திருநாளில் எல்லோரும் எல்லா நளமும் வளமும் பெற்று சிறப்பாய் வாழ வாழ்த்துகிறோம்,வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த திருவோணத் திருநாள் வாழ்த்துக்கள்!

//சிறப்பாய் வாழ வாழ்த்துகிறோம். வாத்துக்கள்.//

உங்களை கொத்தி தண்ணிக்குள்ள கூடிட்டு போனா நாங்க பொறுப்பில்ல நித்யா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நானும் 'வாத்தப்' பார்த்தேன். ;))) சிரித்ததில் வாழ்த்த முடியவில்லை. இம்முறை வேறு யாராவது மணி கட்டட்டும் என்று விட்டுவிட்டேன். ;) வந்ததும் நித்யா சரி செய்து விடுவாங்க ஆமினா.

அனைவருக்கும் திருவோணம் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்


நீங்கோ மின்னடி போங்கோ!

ஒங்க அடி ஒற்றி நான் பின்னாடி வாரேன்!

அனைவருக்கும் திருவோணம் வாழ்த்துக்கள்.!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எல்லோருக்கும் பொன்னோண ஆஷம்சகள்! 23ம் தேதிதான் ஓணம் :).

எங்க வீட்டுக்கு வந்தால் ஓணசத்யா(ஓண விருந்து) கிடைக்கும் :).

ஓண ஸ்பெஷல் பாயசம் : பாலடைப் பிரதமன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்போ சரி செஞ்சாச்சு ஆமினா அந்த வாத்து என்ன கொத்திட்டு பொய்டுசு இப்ப தான் மன்னிப்பு கேட்டு விட்டுடுனு சொல்லி தப்பிச்சு வந்தேன்.

இமா மேடம் நீங்க மலயாலியா?

அன்புடன்
நித்யா

கவிசிவா இந்த வார்த்தையை தான் தேடிகிட்டிருந்தேன்(பொன்னோண ஆஷ்மசங்கள்) உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

நன்றி நித்யா! வாத்து மன்னிச்சு விட்டுடுச்சா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


//ஓண ஸ்பெஷல் பாயசம் : பாலடைப் பிரதமன் :)//

எங்காத்துகார் ’’திருவோண நஷ்ஷத்திரம்’’.

அதனால நேக்கு ஓண ஸ்பெஷல் உண்டோல்யோ!

(சரியான பரக்காவட்டி நான்!ஹிஹிஹி)

ஙான் மலையாளம் அறிஞ்சிட்டிலா!

எந்தா ஞான் பறஞ்சது சரியோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கவி... எனக்கு 'சுந்தரி நீயும்' பாட்டு நினைவுக்கு வந்தது. ;) ஓணத்திருநாள் பற்றிச் சொல்லுங்களேன். அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

அறுசுவை தோழர் தோழிகள் அனைவருக்கும் பொன்னோணம் வாழ்த்துக்கள்.

இந்த பண்டிகை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏனோ தெரியல. ஆஹா நாம இந்த ஒரு நாள் மட்டும் மலையாளியா பிறந்திருக்கலாமேன்னு தோணும். அந்த பூக்கோலம், ஓணம் சத்யா, அவர்களுடைய அந்த சேலை. அதுலாம் நான் டிவிலயும், மேகசின்ஸ்லயும் தான் பார்த்து இருக்கேன் அத பார்க்கவும் கேட்கவுமே ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிச்ச பண்டிகைகள்ல இதுவும் ஒன்னு. இத பற்றி இன்னும் சில தகவல்களை தெரிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளுங்களேன் கேட்க ஆர்வமா இருக்கேன்.

மேலும் சில பதிவுகள்