இரட்டை குழந்தை தான் வேணும் !!!!!!!!!!

அன்புள்ள தோழிகளே ,

எனக்கு ரெட்டை குழந்தை மேல் தான் கொள்ளை விருப்பம் , எந்த level nu சொல்ல தெரியல.ரெட்டை குழந்தை னு யாராவது ஒரு வார்த்தை சொன்னாலே , அந்த நாள் முழுசா சந்தோஷமா இருப்பேன் !!!!!!!!!!!! ரெட்டை குழந்தை உருவாவது ரொம்ப கஷ்டம் னு சொல்லுவாங்க . செயற்கை முறைல ரெட்டை குழந்தை உருவாக்க முடியுமா ? நான் கோயம்புத்தூர் ல இருக்கேன் , இங்க எந்த டாக்டர் , எந்த hospital போனா, என் ஆசை நிறைவேறும் ?

எங்க குடும்பத்துல ரெட்டை குழந்தைகளே இல்ல, அதுனால இயற்கையா கண்டிப்பா , ரெட்டை குழந்தை எனக்கு கிடைக்காது . யாராவது நல்ல வழி சொல்லுங்களேன், Plz plz plz plz !!!!!!!!!!

Imma,
சமாளிப்பது பெரிதல்ல , செலவு மற்ற விஷியங்களும் பரவாஇல்லை . ஆனால் உடல்நிலை தான் கொஞ்சம் பயமா இருக்கு !!!!! இறைவனை வேண்டுவோம் ....வேறென்ன சொல்ல !!!!!!!!! என்ன இம்மா சரியா ???

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஷாபானு,

உங்களுக்கு இரட்டை குழந்தையா!!!!!!!!!! கொடுத்து veshavanga . உங்க செய்தி படிக்கும் போதே எனக்கு பயங்கர சந்தோசம் !!!!!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்க reply கடைசி ரெண்டு லைன் பாத்த உடனே வானத்துல பறக்கற மாதிரி இருக்கு!!!!!!!

ஆனால் குழந்தைகள் இறந்தது கேட்பதற்கு ,மிகஊம் கஷ்டமா இருக்கு..... நல்ல Dr பாத்து முடிஊ பண்ணனும்!!!!!!!!!! இரட்டை குழந்தை மட்டும் பிறந்துட்டாள், உங்களை தேடி வந்து ஸ்வீட் தரேன் !!!!!!!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

;) என்னிடம் என்ன கேள்வி!! உங்கள் ஆசை. உங்கள் முடிவு. ;) நாங்கள் ஆளாளுக்கு அபிப்பிராயம் சொல்வோம்.
ஆனாலும் குட்டிப்பெண் மாதிரி யோசிக்கிறீங்க. ;))

‍- இமா க்றிஸ்

நன்றி இம்மா !!!!!!!!!!!!!!!!!! நீங்கள் அனுபவ சாலிகள் ..... நீங்கள் சொன்னால் அர்த்தம் இருக்கும் .

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அனைவருமே இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பார்கள். இப்போது இருக்கும் விலைவாசியில் ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவது பெரிய விஷயம் தான். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்து இன்னொரு குழந்தை பெற்று வளர்க்க அப்போதிருக்கும் விலைவாசி உயர்வு இடம் கொடுக்குமோ கொடுக்காதோ தெரியாது. எல்லோருக்கும் இது போல இரட்டை குழந்தை வாய்க்காது. எனக்கு வாய்த்த இந்த பேற்றை பெரும் பேறாக எண்ணுகிறேன். வரம் வாங்கி வந்தவளாகவே நினைக்கிறேன். இருவீட்டிலும் பெரியவர்களின் ஒத்துழைப்பு இருந்து, அதற்கேற்ற பணவசதியும், நிறைந்த கவனிப்பும் இருந்தால் இரட்டை குழந்தைகள் வளர்ப்பதில் எந்த சங்கடமுமில்லை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.


//ஒவ்வொரு நாளின் தொடகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு, ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஒரு அனுபவம்.//

காத்தால நீங்க எதிர் பாத்த அனுபவம் இப்போ கெடச்சுதா!!!!!!!!!!!;-)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எனக்கு கூட twins ரொம்ப இஷ்டம்.... நெறைய forums browse பண்ணேன்.... டாக்டர் கிட்ட consult பண்ணேன்... டாக்டர்ஸ் ரொம்ப risknu சொன்னாங்க... என் friendkku twins பிறந்து 3 months hospitala ரொம்ப கஷ்ட பட்டாங்க.... babies incubaterla 3 months இருந்துச்சு.... First , 1 baby தான் காப்பாத்த முடியும், இல்லைனா அம்மாவுக்கு risk னு சொல்லிட்டாங்க... ரொம்ப adamanta இருந்து எப்டியோ 2 babies deliver பண்ணிட்டாங்க... So , last minutela ஒரு baby thaan எடுக்க முடியும்ன்ற risk நெறையா இருக்கு.... அவளோ கஷ்டப்பட்டு twins aim பண்ணிட்டு கடைசில அப்டி ஆச்சுனா ரொம்ப கஷ்டமா இருக்கும்....... அதனால அந்த idea விட்டுட்டேன்..... Now I 'm preganant with a single baby and feel very happy ...... இருந்தாலும் நான் browse பண்ணது வச்சு சொல்றேன்....... Baby plan பண்றதுக்கு முன்னாடி 3 months daily Yam சாப்பிட்டா multiple births இருக்கும்னு researchla கண்டு பிடிச்சிருக்காங்க...... u have 2 decide abt it....

சுகந்தி,
உங்க ஆசையைத்தப்புன்னு சொல்லலை. 'ஆசைப்படுவதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு!

ஆனால், கடவுள் என்ன தர்ராறோ அதையே ஏத்துக்கோங்க!

இயற்கையில் இருக்கின்ற 'சக்தி, செயற்கையில் கிடைப்பதில்லை.

உங்க ஆசை நிறைவேற வாழ்த்தும் அதே வேளை; நல்லா யோசிங்க என்றும் சொல்றேன்.

ரொம்ப அதிகமா பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க ப்ளீஸ்

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

இரட்டைக் குழந்தைக்கு ஆசைப்படாதவங்க யாருமே இருக்க முடியாது. எப்பொ இரட்டைக் குழந்தைகளைப் பார்த்தாலும் மனதுக்கு ஒரு சந்தோஷமும் பூரிப்பும் ஏற்படுவது சகஜமே. இயற்கையாக இரட்டைக் குழந்தைகள் உருவாகும் பட்சத்தில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக பார்த்துக்கொள்ளலாம். ஆனால் செயற்கை முறையில் முயற்சி செய்யும்போது multiples உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. அது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லதல்ல. அதனால் இரட்டைக் குழந்தைக்காக செயற்கை முறையில் முயற்சி எடுக்காமல் இருப்பது நல்லது.

உங்களுக்கு இயற்கையாகவே இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்