குங்குமப்பூ பற்றி சொல்லுங்க??

நான் கமலா கீர்த்திகா போஸ்ட் பார்த்தேன்...எனக்கு இப்போது ஐந்தாவது மாதம் ஆகபோகிறது...நான் ஸ்பானிஷ் குங்குமப்பூ வாங்கி உள்ளேன். அதை எப்படி எடுப்பது??? தினம்தோறும் எடுக்கலாமா? எந்த அளவில் எடுப்பது?? கொஞ்சம் எனக்கு சொல்லுங்க ப்ளீஸ்....
செல்லா..
கத்தார்-டோஹா

சூடான பாலில் ஒரு பிஞ்ச் போட்டு கலந்து குடிக்கலாம்.

வாரம் ஒரு முறை, மாசம் ஒரு முறை என கூட உபயோகிக்கலாம். இப்போதெல்லாம் டாக்டர் குங்குமபூவில் பயனில்லை. குளிர்ச்சி மட்டுமே தரும். உபயோகிக்க வேண்டாம் என சொல்கிறார்கள்.

இருந்தாலும் நம் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமென்ற ஆசையில் உப்யோகிக்கின்றனர். என் பையனுக்கும் சாப்பிட்டேன். நல்ல கலராக தான் பிறந்தான். ஆனால் என் தோழி குழந்தை புதுநிறத்தில் இருக்கிறான்.

வாரிசு படி வருவது தான் தவிர குங்குமப்பூவிற்கும், பிறக்கும் குழந்தைக்கும் சம்மந்தமில்லை என பல ஆராய்ச்சிகள் சொல்கிறது.

உங்கள் மன திருப்திக்காக உபயோகிக்கலாம்.

( எதுக்கு யூஸ் பண்றீங்கன்னு காரணத்தை சொல்லாததால் நிறம் வைத்து தான் சொல்கிறீர்கள் என கணித்துக்கொண்டு சொல்கிறேன்.)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா மேடமுக்கு நன்றி...

நான் நிறத்திற்கும் மற்றும் குளிர்ச்சிற்கும் தகவல் கேட்டேன்....மேலும் குங்குமப்பூவை தினம்தோறும் எடுக்க கூடாதா? என் நண்பி தினம் எடுக்கலாம் என்று சொன்னார்கள் மேலும் சொல்லுங்கள்....

ஐந்தாவது மாதம் கர்பமா இருக்கேன் என்று சொன்னீங்க.

குங்குமப்பூ ஏழாம் மாதத்திலிருந்து தினமும் இரவு பாலில் சேர்த்து காய்ச்சி குடிக்கனும்.
அதில் இருந்து 3 அல்லது 4 இதழ் எடுத்து பாலை சூடாக காய்ச்சி அதில் குங்குமப்பூவை சேர்த்ட்து கரைத்து குடிக்கனும்.( ஒரு ஸ்பூன் சூடான பாலில் நன்கு உரைத்து பாலில் சேர்த்து தேவைக்கு சர்க்கரை சேர்த்து குடிக்கவும்,
கர்பிணிகளுக்கு சளி ஏற்படுவதை தடுக்கும், இரவில் நன்கு தூக்கம் வரும்.
(சளி தொல்லைக்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை இதை குடிக்கலாம்)

ஜலீலா

Jaleelakamal

செல்லா நீங்கள் கன்ஷிவாக இருப்பதால் எதை செய்தாலும் உங்கள் டாக்டரிடம் கேட்டு அதன் படி செய்யுங்கள்.ஏனெனன்றால் எல்லோருக்கும் எல்லாம் ஒத்துகொள்வதில்லை.நாம் ஒன்று செய்ய அது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி விட கூடாது. இது கவனமாக இருக்க வேண்டிய நேரம்.(எனது சொந்த அனுபவத்தில் எழுதுகிறேன்) தவறாக என்ன வேண்டாம் உங்கள் குழந்தை கலர் கிடைக்க வேண்டுமென்றால் மாதுளை நிறைய பழமாக எடுத்து கொள்ளுங்கள் தவறில்லை ஜுஸ் வேண்டாம் (சுகர் ப்ராப்ளத்தை உண்டு பண்ணிவிடும்)
அழகான குழந்தை பெற்றெடுக்க
அன்பான வாழ்த்துகளுடன்
அனிதா

தங்களின் உடனடியான பதில்களுக்கு நன்றி....

அனிதா மேடம் நான் டாக்டரிடம் கேட்டேன்...அவர்கள் வாரம் ஒரு முறை எடுத்தால் நல்லது சொன்னார்கள்....மேலும் நான் மாதுளையை ஜுஸ் ஆக எடுத்தால் சுகர் வருமா என்ன??? ஆனால் நான் ஜுஸ்ல் சுகர் இல்லாமல்தான் சாப்டுவேன்..ஆதனால் சுகர் வரதுல்லா???

ஜலீலா மேடம்,டாக்டர் இந்த மாதத்தில் இருந்தே எடுக்க சொன்னார்கள்...எடுக்கமில்லையா???

என் பெயர் திவ்யா .எனக்கும் இப்போது 5மாதம்தான் ஆகிறது .நீங்கள் கேட்ட கேள்வி எனக்கும் உபயோகமாக இருந்தது .உங்களுக்கும் பதில் கொடுத்த தோழிகளுககும் மிக்க நன்றி .எனக்கு ஒரு சந்தேகம், இந்த சமயத்தில் படிக்க வேண்டிய நல்ல புத்தகங்கள் ,கேட்க வேண்டிய நல்ல விஷயங்கள் என்ன ,என்பது பற்றி ஆலோசனை கூறுங்கள் தோழிகளே ,மேலும் எது சம்பந்தமான website address இருந்தால் கொடுத்து உதவுங்கள் .

அந்த காலத்து பாட்டி மார்கள் சொன்னது 7 மாதத்திலிருந்து என்று அதன் படி தான் நாங்க சாப்பிட்டோம்.

மாதுளை ஜூஸ்,கிரேப் ஜூஸ் செய்யும் போது குளுமையாகம இருக்க சாப்ரான்,(குங்குமபூ) இரண்டு முன்று இதழ் சேர்த்து குடிக்க்கலாம்.

எல்லாமே என் குறீப்பில் இருக்கிறது.

ஜலீலா

Jaleelakamal

divya
தாயாக போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள். melodious மியூசிக் கேளுங்கள். கடவுள் நம்பிக்கை இருந்தால் நிறைய சாமி பாடல்கள் , கதைகளை கேளுங்கள். நீதி கதைகள், தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்கள் படியுங்கள். உங்களுக்கு பிடித்த எதாவது ஒரு பாடலை திருப்பி திருப்பி கேளுங்கள். அது வயிற்றிலிருக்கும் உங்கள் குழந்தைக்கும் பிடிக்கும். நான் கர்ப்பமாக இருக்கும் பொது மயில் போல பொண்ணு ஒன்னு அந்த பாடல் கேட்டு கொண்டே இருப்பேன். இப்போ என் பையனுக்கு 9 மாதம். அவன் அழும் போதும் அவனை தூங்க வைக்கவும் இந்த பாடலை பாடி கொண்டே தட்டி கொடுத்தால் தூங்கி விடுவான். அவனுக்கு தாலாட்டே இந்த பாடல் தான், நான் பாடும் பொது அவனும் கூடவே hum பண்ணுவான்.

காமெடி பாருங்கள், படியுங்கள். நல்ல விசயங்களையே கேளுங்கள், பேசுங்கள். 5 மாதம் ஆகி விட்டது அல்லவா தினமும் மாலையில் மெதுவாக நடந்து கொண்டே வயிற்றில் கை வைத்து உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். உங்கள் குழந்தைக்கு நல்ல கதைகளை சொல்லுங்கள்.உங்கள் கணவர் உங்கள் அருகில் இருக்கும் பொது அவரையும் பேச சொல்லுங்கள். ப்ரீய இருக்கும் பொது drawing பண்ணுங்கள்.
www.babycenter.com இந்த சைட் லாகின் பண்ணிடிங்கன்ன weekly growth of fetus , pregnancy guidelines பற்றி உங்களுக்கு வாரா வாரம் மெயில் வரும். இதில் உங்கள் கணவரின் மெயில் id யும் லாகின் பண்ணிவிடுங்கள். குழந்தையின் வளர்ச்சியை பற்றியும், கணவரின் பங்களிப்பை பற்றியும் அவரும் தெரிந்து கொள்வார். ungal kulanthai eppadi valara vendum endru niniakireergalo athai ippothirunthe ungal kulanthaiyidam sollungal. enjoy ur pregnancy period and i wish you to hava a healthy and cute baby.
take care

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

வழக்கமா குங்கும பூ ஏழாம் மாதத்தில் இருந்து தான் சாப்பிட சொல்லுவார்கள். சூடான பாலில் ஒரு pinch குங்கமபூவை போட்டு ஆறவைத்து குடியுங்கள். ஏழாம் மாதத்தில் இருந்து தினமும் குடிக்கலாம். வாழ்த்துக்கள். take care.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

உங்கள் கருத்துகள் எனக்கு பயனாக இருக்குது அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்
செல்லா

மேலும் சில பதிவுகள்