அரட்டை 2010 - பாகம் - 25

"ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழி காட்ட வேண்டும் என்று வணங்குவோம்"

இன்றைய நாள் அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அறுசுவையின் அனைத்து தோழி - தோழர்களுக்கும் என் இனிய காலை வணக்கம் :)

கோழிகளே, இன்னைக்கு ஆத்துக்காரரோட தோழருக்கு 11வது திருமண நாள். அதனால எங்களை விருந்துக்கு கூப்டிருக்காங்க. நான் போய்ட்டு வர்றதுக்குள்ளே எல்லோரும் சமத்தா, அமைதியா அரட்டை அடிச்சுட்டு இருங்க. நான் சொன்னபடி கேட்டா ஆளுக்கு பாதி பல்லி மிட்டாய் தருவேன். அதை பத்திரமா வச்சு ஒரு வாரத்துக்கு சாப்பிடனும். சரியா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அரட்டை அரசி! ’’அறுசுவை’’ விரும்பி! கவிதை திலகம்! போட்டோவில் பூச்சாண்டி!

மாமி வரேன் பராக்!பராக்!பராக்!

(யாரும் நேக்கு புடிச்ச பட்டம் கொடுக்காததால நானே நேக்கு கொடுத்த பட்டங்கள்
இதெல்லாம் ;-) ஹிஹிஹி)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம் எல்லோரும் நலமா?
எங்களை வர சொல்லிட்டு கல்பனா மட்டும் விருந்து சாப்பிட போயிடாங்க, "கல்பனா இது சரி இல்லை" நாங்க உங்க வீட்டு வாசலில் வந்து அழப்புமணி அடிச்சுகிட்டு இருக்கோம் உங்கள மட்டும் காணோம் "ம்ம்ம்ம்ம்ம்ம்.... நடக்கட்டும் நடக்கட்டும் விருந்து, நான் வந்து தரேன் உங்களுக்கு இனோ மருந்து"

மாமி
எப்படி இருகீங்க? நலமா? பட்டங்கள் அருமை நான் ஆரம்பதில் படிக்கும் பொழுது கல்பனாவதான் பாராடுறிங்கனு நினத்தேன்.. ஆனா உங்களோட பட்டமா.... பட்டம் சூப்பர் வச்சிருபிங்களா இல்லை பரக்க விட்டிடுவீங்களா

அன்புடன்
நித்யா

தோழிகள் எல்லாம் விடுமுறையை கொண்டடுகிறீர்களா ம்ம்ம்ம் கலக்குங்க.... யாராசும் வந்து அரட்டையை தொடருங்கப்பா ஆல் தோழிஸ் வாங்கோ வாங்கோ... தோழிகள் யாரவது மெது பக்கோடா குறிப்பு தெரிஞ்சா சொல்லுங்களேன்..... அதை மைதாமாவில் செய்வார்கள்.

அன்புடன்
நித்யா


என்னை கூப்புடல்ல!

ஒங்க கூட நான் டூஊஊ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி உங்களைதான் முதல்ல கூப்பிட்டேன் நல்லா பாருங்க மாமி மாமி..........

அன்புடன்
நித்யா

அரட்டை இருபத்தைந்தில் இருப்பதில் மகிழ்கிறேன். சண்டே அன்று அரட்டையுடன் சண்டையா ?.

அன்புடன்
THAVAM


இதெல்லாம் எங்க ஊரு “சிக்கன சின்ன சாமியின் சி(ரி)றப்பான யோஜனைகள்.’’

1 காத்தால சுருக்க ஸ்னானம் பண்ணிட்டு மொட்ட மாடில பக்கத்தாது ஸ்பிலிட் ஏசி மிஷ்ன்ல வர காத்துல தலை முடிய காய வெச்சுடனும்.

2. பக்கதாத்துக்கு போய் அவாளோட ஏசி தான் ஒசதினூ புகழ்ந்து பேசிண்ட்டேருந்தேள்னா அவா தலை கால்புரியாம ஒங்களை ஏசில ஒக்கார வெச்சு
டிஃபன், காஃபி யெல்லாம் கொடுத்து நன்னா கவனிச்சுப்பா.

3. வழைபழம் விக்கற வெலேல பழம் சாப்புட நமக்கு கட்டு படிஆகாது!
அதுக்காக பழம் சாப்புடாமையும் இருக்க முடியாது!
அதனால ஆத்துல 4 பேர் இருந்தா 3 வாழைபழம் வாங்கி பழத்தை 3 பேர் சாப்புடனும்.
அந்த தோலில கொஞ்சம் ஒட்டிண்டு இருக்குமே! அதை நகத்தால சுரண்டி சாப்புடலாம்!
இப்படி 4 பேரும் மாறி மாறி சாப்புட்டா நமக்கு காசு மிச்சம்தானே;-)ஹிஹிஹி!
இன்னும் வரும்...................................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அம்மாடியோவ் மாமி என்னாது இது?! உங்க வீட்டுக்கு வரும்போது நாங்களே சமைச்சு எடுத்திட்டு வந்திடணுமா :-))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மாமி,
1) உங்காத்துலே புதுசா ஏசி போட்டுருக்கேள்.2) நீங்க வெச்சிருந்த வாழைப்பழத்தை யாரோ சாப்டுட்டு போட்ட தோலை சுரண்டி... சுரண்டி... சாப்ட்டுருக்கேள் சரிதானே!.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்