பிஸ்கட் சாப்பிடலாமா தோழிகளே???

ஹாய் பிரண்ட்ஸ்,நான் இப்பொழுது டயட்டில் இருக்கேன்,இடைவேளையில் பசிக்கும் பொழுது பிஸ்கட்ஸ் சாப்பிடலாமா,யாராவது சொல்லுங்களேன்,பிஸ்கட் சாப்பிட்டால் வெயிட் கூடுமா?

மஞ்சு டயட் இருக்கும் போது நார்ச்சத்து உள்ள பொருட்களை சாப்பிட்டால் வெயிட்டும் போடாது. பசியும் அதிகம் எடுக்காது.
பிஸ்கட் சாப்பிட்டால் வெயிட் கூடவே செய்யும். இடையில் பசித்தால் ஆப்பில் அல்லது ஏதேனும் சாலட் சாப்பிடுங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


கவி சிவா சொல்வதை நான் வழி மொழிகிறேன்!

சுண்டல் கூட சாப்பிடலாம்!

முளை கட்டிய பாசி பயறு+கேரட் துறுவல்+துறுவிய இங்சி+எலுமிச்சை சாறு

தினம் சாப்பிடுவது நல்லது!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்,இன்னும் எது சாப்பிடலாம்,எது சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுங்க பிளீஸ்

டயட் பிஸ்கட் சாப்பிடலாம்.ஆனால் பிஸ்கட் நிறைய சாப்பிட்டால் மலசிக்கல் உண்டாகும்.அதற்கு பதில் நீங்கள் பழங்கள் ,காரட்,வெள்ளரி ,சாப்பிடலாம்.சூப்,மோர்,வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம்.

டயட் இருக்கறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க! வாழ்த்துக்கள்.

முதல்ல நீங்க கவனிக்க வேண்டியது கலோரி.
உங்களுக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு கலோரி வேணும்னு கலோரி சார்ட் பாத்து தெரிஞ்சுக்குங்க. ஸ்னாக்ஸ் சாப்பிடும் போது கலோரி பாத்து சாப்பிடுங்க. அவ்வளவுதான். பட்டினியா இருக்கனுங்கறது இல்லை. சீக்கிரம் ஸ்லிம் ஆக மறுபடியும் வாழ்த்துக்கள்.

(நாம சாப்பிடற எல்லாமே கலோரிதான், ஜுஸ்,சாலட்,அரிசிப் பொரி இதில்லேயும் கலோரி இருக்கு, மறந்துடாதீங்க)

Don't Worry Be Happy.

ஹாய் ஜெயலக்ஷ்மி,ரொம்ப நன்றி,லேட்டா பதில் குடுத்ததுக்கு ரொம்ப சாரி,ரொம்ப நேரம் பசிக்காமல்,எடையும் கூடாமல் இருக்கிற மாதிரியான நார்சத்துள்ள உண்வுவகைகளை கூற முடியுமா பிளீஸ்

hi manju....udalai kuraika diet irundhala mattum pathadhu...adhu neenda naal needika xcercise avasiyam.......walkin rombavae help pannum seekiram kuraika.. ungaluk idaila pasicha biscuit sapidathinga...adhuku badhhila sugar podama apple juice,or lemon juice kudinga....infact lemon juice uppu pottu kudikradhu pasiyum theerum unga skinkum romba nalladhu..2 in one...

safinamubarak

மேலும் சில பதிவுகள்