பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏங்க எதிரணி மருதமலை படத்துக் காமெடிய பாத்து நீங்க சிரிச்சதில்லையா? கைதியை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போற சீன் பாத்தா எல்லாருக்கும் சிரிப்பு வரும் தானே?.... மாமிக்கு சிரிச்சு சிரிச்சு எழுத முடியாத அளவுக்கு ஆயிருக்கு... கருத்தை நேரடியா சொல்றதில்லை.. ஆனா செஞ்சே காமிக்கறார்///அப்டின்னு சொல்றாங்க..
எதிரணி சீக்கிரம வந்து பதில் கொடுங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இந்த காலத்து காமெடி நடிகர்கள் அந்த காலத்து காமெடி நடிகர்கள் பெயரை அடைமொழியா வைத்துக்கொண்டுள்ளனா்.. இதிலிருந்தே தெரியலையா.. அந்த கால நகைச்சுவைதான் சிறந்தது என்று.... எதிரணி.. ம்ம்ம்.. வாங்க..... சும்மா சிரிச்சுக்கிட்டே இருந்தா போதாது... உங்கள் எதிரணி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க..... கமான்........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அடடா.. கல்பனா அதிரடியா களத்துல இறங்கி சரியான பதிலடி கொடுத்திருக்காங்க..
///பைத்தியத்தை இன்னொரு பைத்தியம் துரத்திக் கொண்டு ஓடுமாம். கடைசியில் ஓடி முடித்தவுடன் நீ எதுக்கு என்னை துரத்துனன்னு முதல் பைத்தியம் கேக்குமாம், அதுக்கு ரெண்டாவது பைத்தியம் சும்மாதான் ஓடி பிடிச்சு விளையாடனும்னு இருந்துச்சி அதுக்கு தான் உன்னை துரத்தினேன்னு சொல்லுமாம். இதுக்கு பேரு நகைச்சுவையாம். இதுக்கு பின்னாடி ஒரு கூட்டமாம்.///
எதிரணி இப்படித்தான் கூட்டமா பின்னாடி திரியலாமா?.. இது ஒரு நகைச்சுவையா...
உங்கள மாதிரி ஆளுங்களுக்குதான் ஒரு குறள் போதாதுனு 1330 குறள் எழுதி வைத்திருக்காறாராம் திருவள்ளுவா்... ம்ம்ம் வாங்க வந்து சரியான பதிலடி கொடுங்க.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பொன்னி ரொம்ப அழகா கருத்துக்களை சொல்லிருக்காங்க..
///அடிவாங்குவதும், கருத்து சொல்றேன்ன்னு அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்வதும் நகைச்சுவை ஆகது./// இதுக்கு என்ன சொல்லப்போறீங்க....

உங்க நகைச்சுவை பாத்தா laughter exercise மாதிரித்தான் தெரியுதாம்.. நிஜமாவே சிரிப்பு வரைலையாம்... சீக்கரம் பதில் சொல்லுங்க.. உங்க காமெடி அப்படித்தானா?

பெரியவா்கள் முதல்ல பழைய காமெடி பாருங்கப்பா.. அதுல இருக்கற நகைச்சுவையை ரசிக்கணும்.. அப்ப தான் குழந்தைகளும் ரசிக்கும்....
கரெக்ட் தானங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஏங்க எதிரணி பைத்தியத்தை பாத்தா உங்களுக்கு சிரிப்பு வந்துடுமா... சர்க்கஸ்-ல கோமாளி ய பாத்தாகூட தான் கண்டிப்பா சிரிப்பு வரும்.. கோமாளிய வச்சே சர்க்கஸ் சமாளிச்சுடலாம்.. அதுக்காக கோமாளியை பைத்தியம்னு சொல்ல முடியுமா?... மாமி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஏங்க மாமா மாப்ளே க்கு ஒரு பாட்டா? அது பத்து நிமிஷம் ஓடும்..இந்தகாலத்துல அதுக்கெல்லாம் பொறுமையும் நேரமும் இல்லையே... மாமா -- மாம்ஸ், மாப்ளே -- மாப்பு, என்ன அழகா சுருக்கி சொல்றாங்க... அந்த காலத்து பலகாரத்தை இப்போ பண்ணிக்கிட்டா இருக்கோம் காலத்துக்கு தகுந்த மாதிரி மாறல... அதுமாதிரி நகைச்சுவை தோற்றம் தாங்க மாறிருக்கு.. சுவை மாறலைங்க...
வாங்க ரேணு மற்றும் எதிரணி..... இதுக்கு பதில் சொல்லுங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

குழந்தை கோமாஸ்டேஜ் ல இருந்ததாம்.. வடிவேலு காமெடி பாத்து சரியாயிடுச்சாம்க... இதுக்கு மேல இந்தக்கால காமெடிக்கு வேற என்ன சிறப்பு இருக்க முடியும்... எதிரணி பதில் சொல்லுங்க...

அடடா... மாமி என்ன அழகா சொல்லிருக்காங்க..
’அழகர் மலை’ ஏறினா கால் வலிக்கும்.

பாத்தா வயறு வலிக்கும்!

இதுக்கு என்ன சொல்லப்போறீங்க எதிரணி...
ம்ம்ம் மாமி சூப்பர்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

//அழகர் மலை’ ஏறினா கால் வலிக்கும்.

பாத்தா வயறு வலிக்கும்!//

"அதற்க்கு மேல சிரிச்சா நெஞ்சு வலிக்கும்"
எல்லாம் அளவோட இருக்கனும் ஒரு ஒழுக்கமற்ற போலீஸ்காரர் இப்படித்தான் இருக்கனும்னு உங்க இந்த காலத்து நகைச்சுவை சொல்லுது இது சரியா? அந்த திருடன தப்பிக்க விட்டு, மாமூல் வாங்கி, எடுபுடி வேலை செஞ்சு காமிடிபன்ராங்களாம் இத போய் எங்கச் சொல்ல?

அன்புடன்
நித்யா

அவர்களும் புரிந்து கொளளாமல் , குழந்தைகளும் சீரழிகிரார்களே என்று வறுத்தமாக இருக்கிரது.உடுத்த நேரமில்லையென்று அப்படியே செல்வோமா? பிரித்தரியும் குணம் வளர்ந்த நம்மாளே எது நல்லது,எது தேவையென்று உணரமுடியாத போது பக்குவப்படாத குழந்தைக்கு எப்படி தெரியும்?நடை,உடை.பாவனை, நடிப்பு,கலாட்டா, மாயாஜாலம் இப்படி எத்தனை பிரிவுகளில் மக்கள் மனதில் இடம் பிடித்துளளது அக்கால நகைச்சுவை. . . எதிரணியினர் வெரும் அடி வாங்கி சிரிப்பதையே பேசினால் எப்படி?

நானும் இக்கால இளைஞிதான். நேரமில்லை என்பதற்காக கெட்டுப்போனதை நம் குழந்தைக்கு கொடுப்போமா? நம் ரசிப்புத்தன்மையே நம்மை வெளிக்காட்ட உதவும். காதலியிடம் அக்காலத்தைப் போல நீ இல்லாமல் வாழ்வில்லை என்றாள் ஏற்றுக்கொள்வாள் மாராக இக்காலம் போல என்னம்மா கண்ணு நீ இல்லாங்காட்டி நாளைக்கே இன்னொருத்தின்னு சொன்னா துப்பிட்டு ஓடிட மாட்டாலா? எதிரணி கொஞ்சம் யோசிப்பாங்கன்னா வரும் தலைமுறை ரசனைக்கு நல்லது நடுவரவர்களே...யோசிப்பாங்களா?

மேலும் சில பதிவுகள்