பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் காலை வணக்கம்!

எப்ப பார்த்தாலும் என்கிட்ட வம்பிளுக்கிறதே எதிரணிக்கு வேலையா போச்சு...

எதிரணிக்கு நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன்...டேய் எட்றா வண்டிய.....

உங்களுக்கு தைரியமிருந்தா என் சங்கத்து ஆளு அடிச்சு பாருங்க..,,

இந்த மாதிரி டையலாக் பழைய படத்தில் பார்க்க முடியுமா?

சிரிப்பு என்பது தானாகவே வரவெண்டும்..சிரிப்பை சங்கலி போட்டு இழுக்கக்கூடாது..

இயல்பான சிரிப்பு இந்த காலத்தில் மட்டுந்தான் நடுவர் அவர்களே!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரெட்டை அர்த்த வசனம் என்று வார்த்தையை தவிர்த்து எதிரணிக்கு ஏதும் தெரியாதா?

நான் வேண்டுமானால் சொல்லித் தருகிறேன்.அந்த காலத்திலும் ரெட்டைஅர்த்தம் தரும் பாடல்கள் சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு இலைமறைக்காயாகவே இருந்து வந்தது..அது அந்த காலம்..நான் சொல்றது இந்த காலம்...

எம்.ஜீ.ஆர் படங்களை கவனிச்சிங்கன்னா தெரியும் ஆபாசம் என்பது அப்பவே தொடங்கிடுச்சின்னு....ஆபாசத்தை பெரியத்திரையில் துவங்கிவைத்த புகழ் பழைய படங்களேயே சாரும்.

அதைதான் நாங்கள் பின்பற்றுகிறோம்...ஏங்க உங்கள் தலைல ரத்தம் வந்தா தக்காளி சட்னி..எங்க தலைல வந்தா ரத்தமா?என்னக் கொடுமை இது?

குறிப்பாக இதயக்கனி என்ற படம் பார்த்தவர்கள் பாடல்களில் ஆபாசம் இல்லை என்று சொல்ல்த்தயாரா?

அடி வாங்குற விஷ்யம் கூட பழைய படங்களிலிருந்து பரவியதுதான்...நாகேஷ் மற்றும் தங்கவேலு படாத அடியா வடிவெலு பட்டுவிட்டார்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்


//மொத்தத்தில் களவாணி நம் (என்) மனதை களவாடி விட்டான்//.

இது நம்ம அறுசுவைல ’’களவாணி ‘’ படத்தை பத்தி வந்த விமர்சனம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

///அந்த காலத்துல மாமா மாப்ளேன்னு கூப்பிட்டுகிட்டு, அதுக்கு ஒரு பாட்டு, அது பத்து நிமிடம் ஓடும். அப்போ யாருக்கும் வேலை அதிகமில்லை. உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்///

சரியாக சொன்னார் என் அணித்தலைவர்...

நடுவர் அவர்களே "மேயாத மான்"அப்படின்னு ஒரு பாட்டு பழைய பாடாதி படத்தில் உண்டு...
மதியம் பாட ஆரம்பித்தால் மறுநாள் காலைலதான் முடியும் பாடல்....இதெல்லாம் உங்களுக்கே நல்லதா படுதா?

நகைச்சுவை என்கிற பெயரில் ஆளை கொன்றுவிடாமல் கழுத்தை அருத்துக்கொண்டே இருப்பார்கள்.....
பழைய படத்தின் நகைச்சுவைதான் சிறந்தது என்று சொல்பவர்களை மொத்தமாக ஒரு ரூமில் கட்டிபோட்டு விடிய விடிய அந்த கொடுமையை பார்க்கச்சொன்னால் புரியும் அது எவ்வளவு பெரிய கொடுமை என்று!

இந்த கலத்து நகைச்சுவை அப்படி அல்ல நடுவர் அவர்ட்களே!அப்படி கட்டிபோட்டாலும் சிரிச்சிக்கிட்டே தானிருப்போம்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அறுசுவை நண்பர்களுக்கும் எனதருமை ( தோழி) நடுவர் அவர்களுக்கும் எனது முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.நான் பழைய திரைப்பட காமெடி பற்றியே பேச இருக்கிறேன். ஏனெனில் முதலில் இப்பொழுதுள்ள காமெடிகளில் நகைச்சுவை என்ற பேரில் ஆபாச வசனங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ,ஒருவரது உடல் குறைபாட்டையோ காமெடி செய்கிறேன் பேர்வழி என்று மிகவும் அசிங்கமாக பேசுகிறார்கள் இதை பார்த்து அனைவரும் சிரிக்கவும் செய்கிறோம் இதுவே வேதனை குரிய விசயமாகும். வுதாரனமாக ஆணழகன் படத்தில் சூர்யாவின் உடல் ஊனத்தை விவேக் மிகவும் கேவலமாக பேசுவார். இந்த படத்தை பார்க்கும் ஊனமுற்றோர் மனதளவில் எவ்வளவு பாதிப்படைவார்கள் என்று தெரியுமா நடுவர் அவர்களே.

பழைய படங்களில் படங்களை பார்த்தீர்களானால் படத்துடன் காமெடி சேர்ந்து வரும், காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.கலைவாணர் N .S கிருஷ்ணன் அவர்களின் காமெடியில் ஒரு sense of humour இருக்கும். யாரின் மனதையும் புண்படுத்தாத காமெடியாக இருக்கும். நாகேஷ் அவர்களின் காமெடியில் அவர்வுடலையே அவர் வளைத்து அவர் செய்யும் காமெடி நினைத்தாலே சிரிப்பை வரவழைத்துவிடும்.அப்பொழுதுள்ள காமெடியில் அடுத்தவரை துன்புறுத்தி சிரிப்பை வரவழைக்க மாட்டார்கள். ஒரு கருத்தை கொண்டு காமெடி செய்வார்கள். இது இப்போழ்துள்ள காமெடியில் இல்லை என்பதே வுண்மை. மேலும் என்னுடைய வாதத்தை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

நடுவர் அவர்களே
காலை வணக்கம்,

//குறிப்பாக இதயக்கனி என்ற படம் பார்த்தவர்கள் பாடல்களில் ஆபாசம் இல்லை என்று சொல்ல்த்தயாரா?//

எனக்கு ஒரு சந்தேகம் தலைப்பு காமெடி பற்றி தானே, எதிரணியினர் பாடல்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் பழைய படங்களில் ஆபாசம் இல்லை என்று கூறவில்லை, நகைச்சுவையில் இப்போ இருக்கிற மாதிரி ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லை என்பதே எங்கள் அணியின் வாதம்.

//உங்களுக்கு தைரியமிருந்தா என் சங்கத்து ஆளு அடிச்சு பாருங்க..,,//

இததான்ங்க நாங்களும் சொல்றோம், இந்த மாதிரி அடிக்கறது உதக்கறதுங்கற காமெடியால குழந்தைகள் சீரழிகிறார்கள்

//நான் வேண்டுமானால் சொல்லித் தருகிறேன்.அந்த காலத்திலும் ரெட்டைஅர்த்தம் தரும் பாடல்கள் சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு இலைமறைக்காயாகவே இருந்து வந்தது..அது அந்த காலம்..நான் சொல்றது இந்த காலம்...//

சங்க இலக்கியத்தில் இருந்தது, அதை நாங்களும் படித்திருக்கிறோம், நான் சொல்வது என்னன்னு கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். திருவள்ளுவர் கூட காமத்துப்பால் தனியா ஒரு அதிகாரத்தில் தான் காமம் பற்றி சொல்லியிருப்பார், அன்புடைமையிலோ, அறிவுடைமையிலோ காமம் பற்றி சொல்ல மாட்டார்.

அப்படி இருக்கும் போது நீங்கள் ஏன் காமெடியில் போய் ரெட்டை அர்த்தத்தை கலக்க வேண்டும், ரெட்டை அர்த்தம் இல்லாமல் காமெடி செய்யவே முடியாதா என்ன?

நடுவர் அவர்களே!சில காமெடி பார்த்தால் சீ என்று சொல்லத்தோன்றுகிறது, இன்று காலை கூட மிளகா என்ற படத்தின் காமெடி பார்க்க நேர்ந்தது, கொடுமையிலும் கொடுமை, இதெல்லாம் காமெடியா சிரிப்பு வரவே இல்ல.மாறாக படத்தை பார்க்கவே வேண்டாம் என்ற எண்ணம் தான் வந்தது.

எனவே தான் சொல்கிறோம், அக்காலமே சிறந்தது சிறந்தது சிறந்தது.

மீண்டும் வருவேன்.

அன்புடன்
பவித்ரா

நடுவர் அவர்களே, பார்த்தீங்களா எங்கள் அணியை? புத்திசாலி தனத்திற்கு எடுத்து காட்டு எங்கள் அணிதான். ஒரு சிக்கல்ல வடிவேலு மாட்டிகிட்டார்னா அவரோட கோஷ்டி இருக்கிற இடம் தெரியாம காணம போய்டுவாங்க. அதே மாதிரி எங்கள் அணித் தோழர் திடீர்னு என்னை எங்கள் அணிக்கு தலைவர் ஆக்கிட்டார். இதெல்லாம் வடிவேலுவை பார்த்து கற்றுக் கொண்டதாக அவரே சொன்னார். இது போல எதிர் அணியினருக்கு தப்பிக்க தெரியுமா???.

அன்புடன்
THAVAM

அந்த கால நகைச்சுவையிலிருந்து இந்த கால நகைச்சுவை வரை ஆபாசம் இருக்கத்தான் செய்கிறது அந்த காலத்தில் சுருளிராஜன் காந்திமதி காமெடிகளில் இல்லாத ஆபாசங்களா?. எதிர் அணியினரே இதை விட்டு மேலே வாங்க இன்னும் நீங்க பேச வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றது அதை விட்டு ஆபாசத்தை மட்டுமே பிடித்து இழுத்து கொண்டிருக்கிறீர்கள். ரொம்ப இழுத்தால் அறுந்து விடும். ரஜினி படங்கள்ல அவரின் நகைச்சுவைகள் மோசமா?. சச்சின் படத்தில் விஜயும் வடிவேலுவும் கலக்குவாங்களே நீங்க யாருமே ரசிக்கவில்லையா?. இம்சை அரசன் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவையை பார்த்தால் உங்களுக்கு சிரிப்பே வரவில்லையா?, கருத்துக்கள் இல்லையா?. இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் லாரன்ஸ் செய்யும் குறும்புகள் நகைச்சுவை இல்லையா?. நகைச்சுவைன்னா என்னங்க?. இயல்பில் இருந்து மாறுபடும்போது சிரிப்பை வரவழைப்பது நகைச்சுவை. அது காலத்திற்கேற்ப சிறிது மாறுபடும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள், நாங்கள் அந்தகால நகைச்சுவை நடிகர்களை அவர்களின் திறமைகளை குற்றம் சொல்லவில்லை நடிகர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களின் நகைச்சுவை பாணி காலத்திற்கேற்ப மாறியுள்ளது. அதில் அந்தகால நகைச்சுவையைவிட பார்த்ததுமே சிரிப்பு வரவழைப்பது இந்த கால நகைச்சுவையே!!!.

அன்புடன்
THAVAM

////எனக்கு ஒரு சந்தேகம் தலைப்பு காமெடி பற்றி தானே, எதிரணியினர் பாடல்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் பழைய படங்களில் ஆபாசம் இல்லை என்று கூறவில்லை, நகைச்சுவையில் இப்போ இருக்கிற மாதிரி ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லை என்பதே எங்கள் அணியின் வாதம்./////
பழைய பாடல்களில் ஆபாசம் இருக்கிறது என்று ஒத்துக்கொண்ட எதிரணிக்கு முதல் நன்றி!அது எங்கள் முதல் வெற்றியும் கூட.

நாங்கள் எதைபற்றி பேசுகிறோம் என்பதில் நினைவு தப்பவில்லை...அமைதியாக இருக்கிறோம் அவ்வளவே!ஏனென்றால் பொய்க்கு எப்போதும் முரசடித்தே பழக்கம்!உண்மை என்றும் அடக்கி வாசிப்பதே வழக்கம்!

நான் பழைய பாடல் களில் ஆபாசம் என்று குறிப்பிட்ட காரணம்..நீங்கள்தான் ஆபாசம் என்னும் கலையை எங்களுக்கு கற்று தந்த ஆசான் என்று உணர்த்தவே!

பாடல்களில் ஆபாசம் என்பது செக்ஸ் கல்வி படிக்கின்ற குழந்தைகளுக்கு கூட அவசியம் என்னும் நிலையில் உள்ள நம் நாட்டு குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டிய கட்டாயத்தில் அப்படியே அந்த கிளையிலிருந்து நகைச்சுவை என்னும் கிளைக்கு இப்போது தாவி உள்ளது.காரணகர்த்தா நீங்கள்தான்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///இததான்ங்க நாங்களும் சொல்றோம், இந்த மாதிரி அடிக்கறது உதக்கறதுங்கற காமெடியால குழந்தைகள் சீரழிகிறார்கள்///

அப்போ நாகேஷ் தங்கவேலு மனோரம்ம ஆச்சியிடம் அடிவாங்கியபோது சீரழிய வில்லையா?

///சங்க இலக்கியத்தில் இருந்தது, அதை நாங்களும் படித்திருக்கிறோம், நான் சொல்வது என்னன்னு கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். திருவள்ளுவர் கூட காமத்துப்பால் தனியா ஒரு அதிகாரத்தில் தான் காமம் பற்றி சொல்லியிருப்பார், அன்புடைமையிலோ, அறிவுடைமையிலோ காமம் பற்றி சொல்ல மாட்டார்.////

வள்ளுவர் மட்டும் புத்திசாலித் தனமாக வாழ்க்கையை நெறியை விளக்குகின்ற புத்தகத்தில் அதெற்கென்றே ஒரு பகுதி பிரித்து சொன்னால் அது சரி...நாங்கள் நகைச்சுவையில் சொன்னால் தவறா?

சரி பழைய பாடல் என்றாலே அர்த்தம் உள்ளது ஆஹோ ஓஹோ என்று சொல்கின்ற பாடல்கலில் ஆபாசம் கலந்தது தப்பில்லையா?
அது தப்பில்லையென்றால் நாங்கள் நகைச்சுவையில் கலந்ததும் தப்பில்லை.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்