பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Kulanthaikalidam sendradaivathu ikkaala nagaichcuvai mattumalla,irattai arththa vasanaggaltmthaan.

அனைவருக்கும் வணக்கம்! அக்கால நகைச்சுவைக்கே என் ஓட்டு. இப்ப உள்ளதில் பலவும் இரட்டை அர்த்த வசனக்களும் ஆபாசமும் அதிகம். அக்கால நகைச்சுவையில் அது இல்லை இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே. சிறு குழந்தைகளுக்கு வடிவேலு நகைச்சுவை பிடிக்கிறது என்கிறார்கள். அவரின் நகைச்சுவையில்(?!) பெரும்பாலும் அவர் அடி வாங்குவார். அதைபார்த்து நாம் சிரிக்க வேண்டும். ஒருவர் அடி வாங்குவதைப் பார்த்து சிரிப்பதா நகைச்சுவை? வருத்தமாக இருக்கிறது நடுவர் அவர்களே!

கல்யாணபரிசு படத்தில் தங்கவேல் அவர்களின் காமடிக்கு ஈடாகுமா இவர்களுடையது? காதலிக்க நேரமில்லையில் நாகேஷின் நகைச்சுவைக்கு ஈடேது?
எங்கள் ஊர்க்காரரான என்.எஸ்.கே அவர்களின் நகைச்சுவைக்கு பக்கத்தில் நிற்கமுடியுமா இவர்களால்? இதுல இப்ப உள்ளவர்களில் ஒருத்தர் சின்னக்கலைவாணர்னு தன்னை சொல்லிக்கறார். ஏன்? அக்கால நகைச்சுவை சிறந்ததாக இருந்ததால்தான் அவர் கலைவாணை. இவர் பேருக்கு மட்டுமே சின்ன கலைவாணர்

இன்னும் வாதங்களோடு வருகிறேன் நடுவரே! ஓணம் அதனால் கொஞ்சம் பிசி. பாலடைபிரதமன் ரெசிபி அனுப்பிட்டு வரேன் :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இரட்டை அர்த்த வார்த்தைகளும் இக்கால குழந்தைகளை சென்றடைகிறது நகைச்சுவையோடு அப்படின்னு ரேணு சொல்றாங்கப்பா.... இதுக்கு என்ன சொல்ல வர்றீங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கரகாட்டக்காரன் என்ற படம் காமெடிக்காகவே ஒரு வருடம் ஓடியது....பட்டிதொட்டி எல்லா இடங்களிலும் மாபெரும் வெற்றி!

அந்த வாழைப்பழ காமெடி தெரியாதவர் தமிழ் நாட்டில் யாரும் இருக்கமுடியாது...

அந்த காமடியை நீங்கள் பார்க்கமலேயே கேட்டாலே சிரிப்பு வரும்.

அப்படி ப்ழைய படங்களில் எந்த காமெடி இருக்கிறது?ஏதோ ஏழைவீட்டு கல்யாணத்தில் பாயாசத்தில் கிடைத்த ஒன்றிரண்டு முந்திரிபோல் சிலபடங்கள் மட்டுமே அந்த காலத்தில் இருந்தது நாகேஷ் படம் உட்பட.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வாங்க கவிசிவா
திருவோணம் வாழ்த்துக்கள்..
அக்காலம் தான் சிறந்ததுன்னு சொல்லி வாதாட வந்திருக்காங்க... சீக்கிரம் சமையல் வேளையை முடிச்சுட்டு வாதங்களோட வாங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

Santhi Illam 'padam paarththu vittu kulanthaigluku nagaicuvai senradaimthathaa illaiya? Enru kuurasollungal ethir aniyinarai.,

வேலை பளு..அப்புறம் வருகிறேன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ராதாஹரி பட்டிமன்றம் சிறப்பாகசெல்ல வாழ்த்துக்கள், ராதா என்னுடைய வாதம் நகச்சுவையில் சிறந்தது அக்காலத்து நகச்சுவையே

அன்புடன்
நித்யா

சாந்தி நிலையம் படத்தின் நகைச்சுவை குழந்தைகளை எந்த அளவு நல்ல விதமாக சென்றடைந்தது. அதில் குறை சொல்ல முடியுமா எதிரணி... அப்படின்னு ரேணு சொல்றாங்க.. வாங்க எதிரணி.... இப்ப என்ன சொல்லப்போறீங்க..

ஷேக் அண்ணா நேரம் கிடைக்கும் போது வாங்க....

வாங்க நித்யா.. நீங்களும் அந்தகாலத்திற்கு தான் சப்போர்ட்டா.. சீக்கரம் வாதங்களோட வாங்க

நான்கூட அந்தகாலத்திற்கு அணி சேராதோனு நெனச்சேன்.. பரவாயில்லையே.. அந்த காலத்திற்கு சப்போர்ட் பண்ண கூட ஆள் இருக்காங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

என்னுடைய ஓட்டும் அக்கால நகைச்சுவைக்கே
//இக்கால திரைப்படத்தில் தான் நகைச்சுவை உணர்வு அதிகம்.அக்கால படங்களில் கதையின் ஓர் அங்கமாக நகைச்சுவை வரும்//
யாருப்பா சொன்னது அப்படினு காதலிக்க நேரமில்லை,சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் நகைச்சுவைக்காகவே ஓடியது

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மேலும் சில பதிவுகள்