பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

///சிவாஜி நடப்பதை அந்த அழகை நினைத்ததுமே நடுவருக்கு சிரிப்பு வருகிறதாம். இதுதாங்க அந்த கால நடிகர்கள் அந்த கால நகைச்சுவை! ///

சிவாஜி நடந்ததை நினைத்து நடுவர் சிரிக்கவில்லை..அது காமடியென்று நீங்கள் சொன்னதை நினைத்து நடுவர்சிரித்தார் நானும் சிரித்தேன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///காசு, பணம் இருந்தாபோதும் நம்ம வீட்டுள்ள ஒரு நபரை வைத்து படம் எடுக்க சொன்னால் கூட எடுத்து விடுவார்கள். படம் ஓடினாலும் சரி, ஓடாவிட்டாலும் சரி அதைபற்றி கவலை கிடையாது. ///
இன்னைக்கு நிலமை அப்படித்தானங்க இருக்கு... யார்வேணும்னாலும் நடிக்கலாம். காசு இருந்தா போதும்னு ஆகிடுச்சு.. அந்தக்காலத்துல கொஞ்ச நடிகர்கள் இருந்தாலும் சிறப்பா நடிச்சுருக்காங்க..... உண்மை தானங்க இது.. இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க எதிரணி...
என்னப்பா எதிரணி பக்கம் வாதம் பண்ண யாருமே இல்லைனு சொல்லி சிரிக்கறாங்க.. புயலென புறப்பட்டு வந்து பதிலடி கொடுங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அய்யா சாமி நான் தெரியாம சிரிச்சுட்டேன்...... எல்லாரும் நான் சிரிச்சத வச்சே பட்டிய முடிச்சுடுவீங்க போல இருக்கே....

உங்க பக்கம் தான் வாதம் பண்ண யாரும் இல்லைனு சொல்றாங்க... வாங்க முதல்ல... காலைல படையா வந்து கலக்குனீங்க.. இப்ப ஒருத்தரையும் காணோம்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

//உலக நாயகன் அறிமுகமானதும் களத்தூர் கண்ணம்மாதான், அவரும் அந்த காலத்து நடிகர்தான். அன்று முதல் அவர் நடித்து வருகிறார் என்று வேணா சொல்லுங்கள்.///

நடுவர் அவர்களே எதிரணியின் நிலைமையை பார்த்தால் பாவமாக இருக்கிறது..அதனால்தான் கொய்ந்த வேடத்தில் நடித்த கமலகாசனை துணைக்கு அழைக்கிறார்கள்..பாவம் வேறென்ன செய்யமுடியும்?இப்படித்தான் சிந்திக்க முடியும்..நல்ல வேலை சிவாஜியும் எம்.ஜீ.ஆரும் மண்டையை போட்டுவிட்டர்கள்..இல்லையென்றால் நானும் பதிலுக்கு இருவரும் இந்த காலத்து நடிகர் என்று சொல்லியிருப்பேன்..நடுவரே இன்றுகூட உயிரோடிருக்கும் மனோரம்மா ஆச்சியை இவர் இந்த காலத்துக்கெ சொந்தம் என்று கேவலமாக வாதாட மாட்டேன்.. இதெல்லம் ஒரு பிழைப்பா?
//அதை நீங்க சொல்ல வேணாமுங்கோ, நடுவர் சொல்லுவாருங்கோ!நடுவர் அவர்களே கேட்டுக்கோங்க, நடிகர் திலகத்தை விட கமல் சிறந்தவராம்ப்பா, புதுசா புதுசா சொல்றாங்கய்யா///
அதை நீங்களும் சொல்லத் தேவையில்லிங்கோ..நீங்க சிறந்தது சிறந்ததுன்னு நூறு பக்கத்துக்கு பதிவுபோட வேண்டாம் என்றுதான் நாங்க அப்படி போட்டோமுங்கோ..

சிவாஜியை விட கமல் உயர்ந்தவரென்று நான் சொல்லவில்லை
..அவர் செய்யாத அந்த பெண் கதாபாத்திரத்தில் படம் முழுக்க வந்து கமல் நகைச்சுவைசெய்து வெற்றி பெற்றார் என்றே சொன்னேன்..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///சிவாஜியை விட கமல் உயர்ந்தவரென்று நான் சொல்லவில்லை
..அவர் செய்யாத அந்த பெண் கதாபாத்திரத்தில் படம் முழுக்க வந்து கமல் நகைச்சுவைசெய்து வெற்றி பெற்றார் என்றே சொன்னேன்..///

அவரு அந்த படம் முழுக்க கமல் நகைச்சுவையா நடிச்சு நம்மள வயிறு குலுங்க சிரிக்க வச்சிருப்பாருன்னு தானங்க சொன்னாரு...

சரி வாங்க உங்க பக்கம் குலுங்க குலுங்க சிரிச்சு சந்தோஸமா பாத்த ஒரு நல்ல படத்தை பத்தி எடுத்து விடுங்க.. பட்டில இது வரைக்கும் சொல்லாத படமா சொல்லுங்க.. அப்ப தான் எதிரணிய கவுக்க முடியும்...வாங்க.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஏங்க நடுவர் சாமியோவ், நாங்க படிக்கபடாதுங்களா, வடிவேலு ஷாமி எங்க குறவர் வேஷம் போட்டு அவரு மவன காலேஜ்ல படிக்க வெக்கற மாதிரி நடிச்சிருக்காரு சாமி. அவர யாரும் திட்டாதிங்க சாமி. மனசில ஒன்னு வாயில ஒன்னா பேசாதிங்க சாமி. உங்க மனசில வடிவேலு சாமிக்கு கண்டிப்பா ஒரு இடம் வைச்சிருப்பீங்க சாமி. அவர திட்டறவங்க வீட்ல பத்து நாள் டேரா போடப் போறோம் சாமியோவ். நடுவர் சாமி நல்லா யொசனை பண்ணி நல்ல தீர்ப்பு சொல்லுங்க சாமியோவ். போய்ட்டு மறுபடி வருவேன் சாமியோவ்.

அன்புடன்
THAVAM

கரெக்ட்டா சொன்னிங்க நடுவர் அவர்களே எதிர் அணியினர் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்காங்க. எதாவது புதுசா ஒரு படத்த பத்தி சொல்லச் சொல்லுங்க

அந்த காலம் என்று சொல்லிக் கொண்டு சிறந்த நடிகர் சிவாஜி அவர்களை எதிர் அணியினர் கிண்டல் செய்வதை உன்மையிலேயே தாங்க முடியவில்லை நடுவர் அவர்களே. நான் சிவாஜியின் ரசிகன் அல்ல அதைவிட அதிகம் பற்றுள்ளவன்.

அன்புடன்
THAVAM

///உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் நாகேஷுக்காகவே ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர் அவர்கள், அந்த அளவுக்கு நாகேஷின் நடிப்பு இருக்கும்.காதலிக்க நேரமில்லை படத்தில் சாதாரணமாக ஒரு கதை சொல்லும் காட்சியில் எத்தனை உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்.///

இதுவரை தமிழக வரலாற்றில் எந்த ஒரு பெரிய நாயகனும் செய்யாததை கமல் செய்தார் சதிலீலாவதி படத்தில் நகைச்சுவை நடிகரான கோவைசரளாவுடன் ஜோடியாக சேர்ந்து காமடி செய்து வெற்றிபெற்றார்...இந்த மனப்பான்மை எந்த நடிகருக்கு வரும்?
///நடுவரே, சிவாஜியின் நடையை நினைத்ததும் நீங்களும் சிரிச்சிட்டீங்களே அப்புறம் என்ன நடுவர் அவர்களே///
அதைபோய் நகைச்சுவைன்னுசொன்னா சிரிக்கத்தான் செய்வார்கள்..அழவா முடியும் இந்த கொடுமைய கேட்டு!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தவமணி சாமியோவ்... குறவன் கதை எல்லாம் சொல்றீங்கோ சாமியோவ்...

ஏங்க எதிரணி...
// வடிவேலு ஷாமி எங்க குறவர் வேஷம் போட்டு அவரு மவன காலேஜ்ல படிக்க வெக்கற மாதிரி நடிச்சிருக்காரு................//

வாயில ஒன்னு மனசுல ஒன்னு வச்சு பேசுறீங்களாம் எதிரணி.......... அப்படியா?... வந்து பதில் கொடுங்க...

கலைவாணியும் புதுசா ஒரு படம் கேக்குறாங்கப்பா.... நல்லதொரு பழைய படத்தை எடுத்துவிடுங்கப்பா..........

///இதுவரை தமிழக வரலாற்றில் எந்த ஒரு பெரிய நாயகனும் செய்யாததை கமல் செய்தார் சதிலீலாவதி படத்தில்................//

உண்மையிலேயே பெரிய விஷயம் தாங்க... திரைப்பட உலகில் நம்பர் 1 நடிகராக வாழ்ந்துகொண்டிருந்த சமயத்துல இப்படி ஒரு காமெடி ஹீரோயின் கூட யாரு ஒத்துப்பா... அந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற காமெடி படம் தானுங்க.... எதிரணி வந்து உங்க தரப்பு நியாயத்தை எடுத்துவிடுங்க பாப்போம்.......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்