பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொஞ்ஜம் இருங்கோ முனியம்மா ஊட்டுகாரன் முனிசாமி வந்துருக்கான்!

அவனும் பட்டில ஏதொ சொல்லனும்னு சொலறான்! PLS கேளுங்கோ!

‘ வணோக்கம் நடுவரே! எல்லாம் எங்கைல மினியம்மா சொன்னுச்சு!

(கலக், கலக், கலக் ) இன்னாது சவுண்டுனூ பாக்குறீங்களா!

மாமி நேத்து பவி பொண்ணு அனுப்புன ரவா இட்லியும், ராவா ஒரு பெக்கும் கொடுத்து வுட்டாங்கோ!

அதைதான் ஹிஹிஹி குடிச்சேனுங்கோ!

ஒன்னும் பயப்படாதீங்கோ! நான் எங்க வடி வேலு அண்ணாத்தே மாறி ஸ்ஸுடெடியா பேசுவேன்!

ஒரு படத்துல இன்னா படம்னு ஞாபகத்துக்கு வல்லிங்கோ!
( பெக்கு வேலை செய்ய ஆரம்பிசுடுச்சு போலக்கிதே)

நம்ம விவேக்கும், எங்க அண்ணாத்தையும் ஒரு பொண்ணை கரெக்டு பண்ண இன்னாமா கோல் மால் பண்ணுவாங்கோ தெரியுங்களா!

விவேக்கு கை இல்லேனு சொல்லிருப்பாரு! அதை பொய்யினு எங்க அண்ணாத்தே அதுங்கைல சொல்லி இன்னா அடியெல்லாம் வங்குவாரு!

அந்தகாலத்துல இந்தாமாறி தில்லா அடி வாங்குனவங்கோ இரூக்காங்களா!

எதிரணிய சொல்-------------------------------------’’

(டமார்)

அட ராமா! ஏதோ பேசனும்னு சொன்னையேன்னு பேச விட்டா
படுபாவி குடிச்சுட்டு விழுந்து கெடக்கையா!

அடியே! முனியம்மா சீக்கிரம் வந்து இவனை கூட்டிண்டு போ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஏம்மா மினியம்மா... இப்புடி தான் வூட்டுக்காரர குடிக்கவிட்டுட்டு வேடிக்க பாப்பியா.. அப்பால நீயும் ஒரு பெக்கு வாங்கி குடிச்சுட்டு குப்புற படுத்துட வேண்டியது தான.....

ஏம்பா எதிரணி, முனுசாமிக்கு பதில் சொல்லுங்கோப்பா..... அந்ந ஸிங் இன் த ரெய்ன்..... பாட்டுக்கு ஈடு உண்டா.......... எத்தன பேரு இந்த பாட்ட பாத்து குலுங்கி குலுங்கி சிரிச்சுருக்காங்க..........

மோகனா மேடம் இனிமே குடிகாரன எல்லாம் பட்டில விட்டா வீட்டுக்கு நான் புதுசா பண்ணின ஒரு ரெசிப்பிய அனுப்பி வச்சுடுவேன்.. ஆமா........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இங்கே பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு இருக்கும் அனைவருக்கும், நமது மேதகு நடுவர் அவர்களுக்கும், எனது காலை வணக்கங்கள்.

சரி ௦மேட்டருக்கு வரேன். நாங்க இளசுகளா இருந்தாலும் அந்தகாலம் support பண்றோம் அப்படீன்னு சொல்லிருக்கீங்க. இங்க அந்த காலம்னு பேசறவங்க எத்தனை பேர் அப்போதைய நகைச்சுவை நிறைய பார்த்து இருப்பாங்கன்னு சொல்லுங்க பாப்போம். எல்லாம் நம்ப பொதிகை சேனல்ல நல்லா இருக்குற சில காமெடி மட்டும் போட்டு காண்பிச்சிருக்காங்க, அதை பார்த்துட்டு வந்து அந்த காலம்தான் சிறந்ததுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க, அவளவுதான. நீங்க பார்க்காம விட்ட காட்சிகள, இங்க எடுத்து உடறேன், போய் பார்த்தது வந்து பேசுங்க.

ஒரு படத்தில் NSK, மதுரம் அம்மாவ வேணும்னே சண்டைக்கு இழுத்து, அவங்கள வெளிய அனுப்பிட்டு, வேறொரு பெண்ணை வீட்டுக்கு வர சொல்வார், போய் பாருங்க.

மகாதேவி படத்தில் ஒருத்தர் பொண்டாட்டிய சந்தேகபட்டு டெஸ்ட் பண்ண தன நன்பன அவ கிட்ட காதல் வசனம் பேச சொல்லி அனுப்பிவைப்பார் ஒரு கணவர்.

சரஸ்வதி சபதம், கந்தன் கருணை படங்களில் மனோரமா திக்கு வாய் மாதிரி பேசி இருப்பாங்க, அவங்கள உங்க தலைவர் நாகேஷ் என்னமா கிண்டல் அடிச்சி இருப்பார் தெரியுமா. இது திக்கு வாய் இருக்கவங்கள வறுத்த படுத்தாதுன்களா?????

அதே கண்கள் படத்தில், நாகேஷ் பெண் வேடம் போட்டு, இவரை பெண் என நினச்சு பழகற பெண்கள் கிட்ட, என்ன ஆட்டம் போட்டு இருப்பார், அதை பார்த்து எனக்கு சிரிப்பு வரலை, உங்களுக்கு வந்ததோ!!!!

சபாபதி படத்தில் ராமசந்திரன் அவர் வேலக்கரனா "bloody fool stupid idiot" (இங்க்ளிபீஸ்ல திட்டினா ஒருவேளை பெருசா தெரியாதோ) என்றெல்லாம் திட்டியிருப்பார், அதில் கூட தோசை ராம எனும் திக்கு வாய் கேரக்டர் வரும். அவனையும் கிண்டல் பண்ணுவார். அதே படத்தில் குண்டு கருப்பையா (நிரைய படங்களில் இவர் குண்டா இருப்பதை கிண்டல் பண்ணி காமெடி வந்திருக்கு) அவரையும் கிண்டல் பண்ணுவார், ஒரு செவிட்டு தாத்தாவை கிண்டல் பண்ணுவார். இந்த ஒரு படத்தில் இவ்வளவு சாம்பிள். அப்பெல்லாம் இத பார்த்த ஊனம் உட்ற்றவங்களுக்கு வருத்தமா இருந்து இருக்காதுங்களா. மாற, வடிவேல் அண்ணாச்சி "ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ, உடம்பில் உள்ள ஊனம் எல்லாம் ஊனம் இல்லீங்கோ" அப்படீன்னு பாட்டே பாடியிருக்காரே. அதை நீங்க கேட்டதில்லையோ. விவேக் அண்ணா கூட பேரழகன் படத்திலேயே, "சின்னாவ பத்தி நீங்க பேசாதீங்கடா, அவன் உழைச்சி சாப்பிடறான்" அப்படீன்னும், இன்னும் நிறைய பெருமையாவும் பேசியிருக்கார், இதெல்லாம் உங்க காதுகள்ல விழாதோ.

ஆகவே, நடுவர் அவர்களே, இவங்க சரியா அந்த கால படங்கள பார்க்காமலேயே சப்போர்ட் மட்டும் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஆனால், நாங்க இந்த கால படங்கள பார்த்துட்டு ஊறித்திளைத்து சப்போர்ட் பண்றோம். சோ, சரியாய் knowledge இல்லாம வெறும் சாம்பிள் பட்டும் பார்த்துட்டு அவங்க பேசறதை எடுத்துக்க வேண்டாம். என்னதான் அவங்க பில்டிங்க ஸ்ட்ராங்கா கட்ட பார்த்தாலும், அவங்க பேஸ்மட்டம் ரொம்ப வீகா இருக்கு. எங்க சைடு தான் ஸ்ட்ரோங்.

இதுவும் கடந்து போகும்.

நான் போன வாரம் ஒரு பழைய படம் பார்த்தேன்,
அந்த படத்தில் வரும் வசனத்தை இப்பொழுது காப்பியடித்து சில நடிகர்கள் பேசுகிறார்கள்.

மேலும் பலே பாண்டியா படத்தில் சிவாஜி அவர்கள் பண்ணின காமெடியை யாரும் பார்க்கவில்லை போலும்,

ஏன் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்வாரே சிவாஜியிடம்

"ஐயோ சொக்கா நான் எங்க போவேன் 1000 பொன்னச்சே,
பாட்டு எழுதித்தரச்சொல்லி உன்னை கேட்டனா இல்ல கேட்டன்னாங்கரங்,

சரி கேள்விகளை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்டுமா என்பார் சிவாஜி இல்ல வேணாம் வெணாம் நானே கேட்கிரேன் என்று சொல்லிவிட்டு சிவாஜி ஒவ்வொரு முறை பதில் சொல்லும் போதும் நாகேஷ் பண்ணும் சேஷ்டையை பார்த்தாலே சிரிப்புதான் வரும்
இது போன்று செய்கைனாலேயே சிரிக்க வைத்தவர் நாகேஷ் ஏன் சர்வர் சுந்தரம் ,காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை பார்த்து எதிர் அணியினர் சிரிக்கவில்லையா,இல்லை ரசிக்கவில்லையா சொல்லுங்கள் நடுவரே

கந்தன் கருணையில் மனோரம்மாவும் நாகேஷும் சேர்ந்து செய்யும் காமெடியை பார்த்ததில்லயா?அந்த திக்குவாய் காமெடியை இன்றும் ரசிக்காமல் இருக்கமுடியாது

தங்கவேல் ஒரு படத்தில் அவரது மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது மனைவி ஏன் என்கிறேன் என்று சொல்வதற்கு பேச்சு வழக்கில் என்கரங் நு சொல்வார் அதற்கு தங்கவேல் என்னது ஏங்கிரியா எதுக்கும்ம ஏங்கர என்று கேட்ப்பார்,

ஏன் ஒரு பெரிய பேச்சாளன் என்று சொல்லி அவர் மனைவியை ஏமாற்றும் நகைசுவை இன்றளவும் அடிக்கடி வானொலியில் கூட ஒளிபரப்புவார்கள்,
மற்றொறு படத்தில் நான் ஒரு பேச்சாலர்ன்னு தன் காதலியிடம் சொல்வார் அதற்கு காதலி என்ன நீங்க ஒரு பேச்சாளரான்னு கேட்ப்பார் அதற்கு இல்லமா நான் ஒரு பேச்சுலர்ன்னு சொன்னேன்.

இது போன்ற காமெடியை பின்பற்றிதான் இன்றைய காலத்து நகைச்சுவை வருகிறது என்பதை எதிர் அணியினருக்கு சற்று தெளிவாக எடுத்துச்சொல்லுங்கள்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அடேங்கப்பா.. யோகலஷ்மி,எதிரணிக்கு சரியான பதிலடி கொடுத்திருக்காங்கப்பா.....
//அந்தகாலம் support பண்றோம் அப்படீன்னு சொல்லிருக்கீங்க. இங்க அந்த காலம்னு பேசறவங்க எத்தனை பேர்............. //
ஏங்க எதிரணி அம்புட்டு பேரும் வடிவேலு விவேக் காமெடி பாத்துப்புட்டு அந்தக்காலம் தான் சிறந்தததுனு இங்க வந்து பதிவு போட்டுக்கிட்டு இருக்கீங்களா........

நிறைய பழைய படங்கள எடுத்துவிட்டுட்டாங்க யோகலஷ்மி...... இதுக்கெல்லாம் என்ன பதில் தரப்போறீங்க....
உங்களுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்கா?

பவித்ரா கமான் கமான்............(யாரோ கமான் கமான்னு கூப்பிட்டு ஆபிஸ் விட்டு போகவிடலைனு சொன்னாங்கோ.....இன்னைக்கு ஆபிஸே லீவோ?)
எதிரணி வாங்க வாங்க

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஏங்கப்பா எதிரணி அந்தக்காலத்து நகைச்சுவைய காப்பி அடித்தே இந்தக்காலத்து நகைச்சுவையை ஓட்டுறீங்களே.. என்னப்பா இது... உங்க நகைச்சுவை சிறந்ததுனா... உங்க சொந்த நடைல இருக்கணும்.. அத விட்டுட்டு இப்படித்தான் காப்பிஅடிக்கிறதா? (என்ன பண்றது நீதிபதிகளே காப்பி டீ எல்லாம் அடிக்கிறாங்கோ.......)

வரிசையா அந்தக்காலத்து காமெடி காட்சிகளை ரொம்ப அழகா சொல்லிட்டாங்க நம்ம ஹேமா.....
எதிரணியே அனைவரும் வேகமா வந்து பதில் சொல்லுங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எங்க வடிவேலு ஷேக் வேஷம் போட்டு நடப்பாரே ஒரு நடை!

அந்த நடை அந்த காலத்துல யாரு நடந்துருக்கா!

வில்லு படத்துல அவர் பண்ணற ளொள்ளு போல அந்த காலத்துல பண்ணிணாளா! அதுல ஒரு ஹேர் ஸ்டைல வைச்சுருப்பாரு!

அந்த ஹேர் ஸ்டைலை வைச்சுக்க கொழந்தேள்ளாம் கியூல நின்னா தெரியுமோ !

கந்த சாமில அவர் கூவினாமாறி கோழி கூட கூவாதுங்கோ!

அதை பாத்த பரவசத்துலதான் லதாவும், கல்பனாவும் நம்ம எல்லாரையும் கோழி கோழின்னு கூப்புடராங்கோ!

விவேக் செஞ்சா மாறி ’’வாட்டர்’’ பிஸினஸ் அந்த கால காமெடி நடிகராலால செய்ய முடியுமா?

என் கேள்விகென்ன பதில்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வடிவேலு ”ஷேக்”(அண்ணா இது உங்க வேஷம் இல்ல.....)வேஷம் போட்டு நடக்குற நடைக்கு ஈடாகுமா?
வில்லு படத்துல பண்ற லொள்ளுக்கு ஈடாகுமா
அந்த ஹேர் ஸ்டைல் இருக்கே.........அடா அடா அடா........ அது மாதிரி அந்தக்காலத்துல யாராவது வச்சிருக்காங்களா........
கந்தசாமில வடிவேலு கோழி மாதிரி கூவுனதை உலகத்திலயே கோழியால கூட கூவ முடியாதுங்கோ.........
ஓஓஓஅதுனால தான் லதாவும் கல்பனாவும் கோழி கோழினு கூப்பிடுறாங்களோ.........
விவேக் பண்ணின வாட்டர் பிஸினஸ் வேற யாராலயாவது பண்ண முடியுமா......... வாங்க எதிரணி
வந்து மாமியின் கேள்விக்கு பதில் சொல்லுங்க...........

என் கேள்விக்கென்ன பதில்-னு மிடுக்கா கேள்வி கேக்குறாங்கோ...........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இப்போது வரும் படங்களில் சில படங்கள் மட்டுமே இயல்பான நகைச்சுவையாக இருக்கிறது. அந்த காலத்து படங்களில் நம் எதிரணியினர் சொல்வது போல் ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லை, அப்படியே இருந்தாலும் அது இலை மறையாகவே இருந்தது, சிலருக்கு மட்டுமே புரியும்.

ஒரு படத்தில் திரு. நாகேஷ் அவர்கள் பெண் வேடமிட்டு வருவதாய் நமது எதிரணியினர் கூறியிருந்தனர். ஆனால் அதில் அவருடைய பேச்சும், நகைச்சுவையும் மக்களுக்கு சிரிப்பையே வரவழைத்தது. இப்போது ஒரு படத்தில் திரு. விவேக் பெண் வேடமிட்டு திரு. சி.ஜே.பாஸ்கரை ஏமாற்றும் கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருப்பார், அதில் அவருடைய ஆடை காண்போரை சிரிக்க வைக்கவில்லை. சரோஜா தேவி மாதிரி அவர் பேசும் வசனங்களும் அவருடைய நடை, உடை, பாவனை ரசிக்கும் விதமாக இல்லை.

நகைச்சுவை செய்ய எத்தனையோ வழிகள் இருக்கும் போது, பெண்களை எதற்காக கேலிப்பொருட்களாக சித்தரிக்க வேண்டும். அதே மாதிரிதான் அரவாணிகளை பற்றி சித்தரிக்கின்றனர். எதற்காக இதெல்லாம் என்பது புரியவில்லை. அவர்கள் அவர்களாகவே நடிக்கலாமே நடுவர் அவர்களே, எதற்காக மற்றவர்களை போல IMITATE செய்து, காயபடுத்தணும்.

எதிரணியினர் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படங்கள் என்று சில எடுத்துக்காட்டுகளை அள்ளித்தந்தனர், ஆனால் தினமும் அந்த மாதிரி நல்ல நகைச்சுவையை ஏன் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை, ஒரு வேளை அது நல்ல நகைச்சுவை என்பதாலோ அதை போட மறுத்துவிட்டனரோ. நகைச்சுவை சேனல்களில் பெரும்பாலும் காணமுடிவது, வடிவேலு அல்லது விவேக்கின் காமெடிதான். புலிக்கேசி படத்தில் வடிவேலுவை கரடி காரித்துப்புமே இதெல்லாம் காமெடியா, பார்க்கவே அறுவெறுப்பாகத்தானே இருக்கிறது நடுவர் அவர்களே!

தமிழ்ப்படம் என்று ஒரு படம், அப்பப்பா, பார்க்கவே முடியல, அதுவும் ஒரு முழு நகைச்சுவை படம்தானா, பார்த்தால் அப்படி தெரியவில்லை நடுவர் அவர்களே!

அந்த காலத்தில் திரைப்படத்துறையை ஒரு கலைத்துறையாக கண்டார்கள். இப்போதெல்லாம் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாக மட்டுமே அதை கருதுவதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நகைச்சுவை என்பது என்பது ஒரு அரிய கலை, அது யார் மனதையும் புண்படுத்தாமல் வர வேண்டும். அதையே அந்த கால நகைச்சுவையாளர்கள் தம் பணியை செவ்வனே செய்து வந்தனர்.காளி என் ரத்தினம் என்ற பெயரில் ஒரு நகைச்சுவையாளர் உண்டு. சபாபதி படம் போல இன்னொரு படம் இந்த காலகட்டத்தில் எடுக்கவே முடியாது.

எதிரணியினர் சொல்வது போல், வடிவேல் இப்படியேல்லாம் செய்யக்கூடாது என்பதை செய்து காட்டுகிறாராம், ஆனால் மக்களுக்கு அது அவ்வாறு சென்றடையவில்லை, மக்கள் அவர் செய்த மாதிரியே செய்துவிட்டு அவர் சொன்ன வசனத்தையே சொல்லுகின்றனரோ தவிர, வடிவேலுக்கு இவ்வாறு நேர்ந்தது நாம் செய்யக்கூடாது என்று விடுவதில்லை நடுவர் அவர்களே!

இதிலிருந்து என்ன தெரிகிறது நடுவர் அவர்களே! இந்த கால நகைச்சுவை மக்களை சென்றடையவில்லை, இந்த கால நகைச்சுவை என்பது மக்களுக்குள் திணிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஒரு விஷயத்தை அடிக்கடி போட்டு காண்பித்து மக்களை சீரழித்து வருகிறது என்பது தான் உண்மை.

சதிலீலாவதி சதிலீலாவதி என்ற பெயரே பழைய படத்தின் பெயர் தான். படத்தில் திரு.கமலஹாசன் யாரும் செய்யாததை செய்தார் என்கிறார்களே, படத்தின் பெயரை மட்டும் ஏன் காப்பி அடிக்க வேண்டும் நடுவர் அவர்களே! ஒரு படத்திற்கு முக்கியமானது படத்தின் பெயர் தானே, அதுவே ஒரு பழைய படத்தின் பெயரைதான் எடுத்து வைத்திருக்கிறார்கள், அப்போது அது எப்படி யாரும் செய்யாததை செய்ததாக கருதப்படும்.

எனவே தான் சொல்கிறேன், அக்கால நகைச்சுவையே சிறந்தது, சிறந்தது, சிறந்தது!

அன்புடன்
பவித்ரா

நடுவர் அவர்களே நல்லா கவனிங்க இலைமறை காய்மறையா இருந்தா அது அசிங்கம் இல்லீங்களா?. அந்த காலத்தில் இலைமறை காய்மறையா இருந்த நகைச்சுவை ஒரு சில மாற்றங்களாகி இந்த கால நகைச்சுவையாக உரு மாறியுள்ளது. அப்போ இனிமே ஆபாசம்ங்கற வார்த்தையை பேசாதீங்க. சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை குணங்களை இக்கால நடிகர்கள் நடித்து காண்பிப்பது தவறா?.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்