பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

//இப்போது வரும் படங்களில் சில படங்கள் மட்டுமே இயல்பான நகைச்சுவையாக இருக்கிறது.//

என்னாது சில படங்களிலா
மொழி - பிரகாஷ் ராஜ் நகைச்சுவை கொஞ்ச நஞ்சமா. நான் சிரிக்கவே இல்லைன்னு சொல்லுங்க பாப்போம்.
வானமே எல்லை - மடன் போப் சிரிப்பு மறந்துபோச்ச.
வானத்தை போல - லக்ஷ்மி பாட்டி இனாமா சிரிக்கா வச்சிருக்காங்க. அவங்க மட்டுமா இந்த படத்தில்.
பூவே உனக்காக - சார்லிய மறந்துட்டீங்களா.
இதயத்தாமரை - ஜனகராஜ் காமெடி ஒரு தடவை பார்த்து நினைத்து நினைத்து இன்னிக்கு வரைக்கும் சிரிக்க முடியுதே (புடலங்காய், பட்டாசு, ஐ லவ் யு, தற்கொலை)
சூர்யவம்சம் - நம்ம மணிவண்ணன் சார் என்னமா கலக்க்கே இருப்பார்.
அபியும் நானும் - ஆரம்பம் இருந்து கடைசி வரை கதையோடு காமெடி இழையோடி இருக்குமே.
மாயாவி - சூர்யா ஜோதிகா படம் முழுக்க சிரிக்க வச்சிருப்பாங்களே.
குடும்பம் ஒரு கதம்பம் - "பைத்தியத்துக்கு வைத்தியம் பார்குற பைத்தியகார வைத்தியருக்கே.........." எப்பா இப்ப நினைச்சா கூட கண்ணை கட்டுதே விசு சார் காமெடி.
கேளடி கண்மணி - கனவு கண்டு சிரிக்க வைத்தார் ஜனகராஜ், அந்த கேரக்டர் மறக்க முடியுமா.
தம்பிக்கு எந்த ஊரு - பாம்பு ஜோக் நியாபகம் வருதா.
அரங்கேற்ற வேலை - ரேவதி என்ன என்ன டகால்டி வேலை எல்லாம் பண்ணியிருப்பாங்க.
மணல் கயிறு - கிஸ்மு, மனோரமா, தனபால், SV சேகர்.
Friends - Paint contract
கில்லி - விக்கல் காமெடி ஒன்னு போதாது.
ராம் - கஞ்ச கருப்பு வாழவந்தானா வழ்ந்திருக்காரே.
நந்தா - லோடுக் பாண்டி.
கஜினி - நம்ம அசின் அக்கா என்ன பீலா விட்டிருப்பாங்க.
காதலுக்கு மரியாதை - சிரிக்கலைன்னு பொய் சொல்லாதீங்க ஆமா.
வெண்ணிலா கபடி குழு - பரோட்டா ஜோக் போடுமேங்க.
பிதா மகன் - சூர்யா லைலா நினைத்தாலே சிரிப்பு தான் போங்க.
தசாவதாரம் - கொஞ்ச நஞ்சமா சிரிக்க வைத்தார் நம்ப கமல் சார்.
சென்னை - 28, சரோஜா - சீரியஸ் சீன்ல கூட இயல்பா சிரிப்பா கொடுத்திருப்பாங்க. சின்ன பசங்க கூட கிரிக்கெட் மேட்ச்.
நாடோடிகள் - சிம்பிள்லா சிரிக்க வச்சாங்களே
பசங்க - சிரிக்கலன்னு சொல்லுங்க.
நளதமயந்தி - சிரிச்சதில்லை
சிந்திக்கவும் வச்சிருப்பன்களே.
மைக்கில் மதன காம ராஜன் - படம் முழுக்கு சிரிப்பு சிரிப்பு, சிரிப்பை தவிர வேறு ஒன்றும் இல்லையே.
அன்பே சிவம் - எவ்வளவு சின்சீர் படம், அதுல மாதவன் கமல் நகைச்சுவை சிரிக்கவும் நிறையவே

கண்ணா, இது வெறும் ப்ரோமோ தான், மெயின் பிச்சர் இங்க அடிச்சா இடம் பத்தாது.

என்னமா கண்ணுங்களா. மறக்ககூடிய காமெடியா இதெல்லாம்.

WHAT ....
WHAT ....
"MARANDUTTIYAA"

நியாபகம் வருதே, நியாபகம் வருதே, நியாபகம் வருதே.... இப்பயாவது வருதா.

//திரைக்கு வந்த சில மாதங்களே ஆன படம் நடுவரே. விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அந்த காலத்து காமெடி நடிகர் ஹீரோவாக நடித்து வெற்றி கொண்ட படம் ஏராளாம்.//

அந்த காலத்தில் படம் ஓடுவது சுலபமுங்கோ, பெரிய சாதனை இல்லை. ஏன்னா அப்போ வேற ஊடகங்கள் கிடையாது. ஆனால், இன்று திருட்டு VCD, TV, FM, என பல போட்டிகள் சினிமாவுக்கு, இப்பொழுது தியட்டரில் ஒரு படம் சில மாதங்களே ஓடினாலும், அது மிகப்பெரிய வெற்றியே, சாதனையே.

எனவே, இயல்பான நகைச்சுவை நிறையவே இருக்குங்க இந்த காலத்தில். உங்கள் ஜன்னலை நீங்கள் அழுக்காக வைத்துக்கொண்டு, சுத்தமாக இருக்கும் ஊரை அழுக்காக இருக்கிறது என கூறாதீர்கள்.

ஆகமொத்தத்தில் திரைப்படங்களில் இந்தகால நகைச்சுவையே சிறந்தது, உயர்ந்தது, best என நம் நகைச்சுவையின் பிறப்பிடம், ஞானத்தின் உறைவிடம், சிந்தனையின் இருப்பிடம் என பல "டம்" களுக்கு தன் இடம் இடம் கொடுத்துள்ள நடுவரிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவும் கடந்து போகும்.

///இருந்தாலும் அது இலை மறையாகவே இருந்தது, சிலருக்கு மட்டுமே புரியும்///
காய்க்குள் இலையோ இலைக்குள் காயோ..பிரச்சனை அதுவல்ல..இருந்தது என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி!
///அதில் அவருடைய ஆடை காண்போரை சிரிக்க வைக்கவில்லை. சரோஜா தேவி மாதிரி அவர் பேசும் வசனங்களும் அவருடைய நடை, உடை, பாவனை ரசிக்கும் விதமாக இல்லை.///
காமாலை உள்ளவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம்...ஆபாசம் என்ற காமலை கண்களுடன் பார்த்தால் அங்கு நகைச்சுவை தெரியாது...
பழைய பாடல்களில் உள்ள ஆபாசம் கண்களுக்குத்தெரியாமல் வரிகள் மட்டும் தெரிந்ததாம்!ஆனால் இப்போது நகைச்சுவை தெரியவில்லையாம் ஆபாசம் தெரிகிறதாம்..முரண்பாட்டு மூட்டைகளை கவனித்தீர்களா நடுவர் அவர்களே!
//எதற்காக மற்றவர்களை போல IMITATE செய்து, காயபடுத்தணும்///
imitate என்பது காயப்படுத்தும் நோக்கில் காண்பிப்பது அல்ல..ஏன் பின் நாகேஷ் பெண்ணை imitate செய்ய வேண்டும்?ஒரு படத்தில் தங்கவேலு கூடத்தான் பெண்வெடம் போட்டு கேவலபடுத்துவார்..அவரைபார்த்தலே அரவாணி போல்தான் இருக்கும் அந்த படத்தில்..அந்த கொடுமையை நாங்கள் எங்கே போய் சொல்ல?
//அந்த காலத்தில் திரைப்படத்துறையை ஒரு கலைத்துறையாக கண்டார்கள். இப்போதெல்லாம் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாக மட்டுமே அதை கருதுவதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது///
பேருக்குதான் அப்படி..எல்லோருடைய நோக்கமும் பணம் சம்பாதிப்பதுதான்.யாரும் ஓசியில் நடிக்கவில்லை..படம் இயக்கவில்லை...பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில்தான் பழைய பாடல்களில் ஆபாசம் கலக்கப்பட்டது..அது இலைமறை காயாக இல்லை..இலைக்குமேல் காய்போல் அப்பட்டமாகவே தெரியும்..
///எதிரணியினர் சொல்வது போல், வடிவேல் இப்படியேல்லாம் செய்யக்கூடாது என்பதை செய்து காட்டுகிறாராம், ஆனால் மக்களுக்கு அது அவ்வாறு சென்றடையவில்லை, மக்கள் அவர் செய்த மாதிரியே செய்துவிட்டு அவர் சொன்ன வசனத்தையே சொல்லுகின்றனரோ ///
மக்களை சென்றடையாமலா குழந்தைகள் கூட வடிவேலுவை தெரிந்து வைத்திருக்கிறது?படத்தின் மேசேஜை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளவா படம் பார்க்க மக்கள செல்கிறார்கள்?நகைச்சுவைக்காகத்தானே!மேசேஜை மனதில் வைத்து நகைச்சுவையை செயலில் காட்டுகிறார்கள்.
///பழைய படத்தின் பெயரைதான் எடுத்து வைத்திருக்கிறார்கள், அப்போது அது எப்படி யாரும் செய்யாததை செய்ததாக கருதப்படும்.////
யாரும் செய்யாதது என குறிப்பிட்டது படத்தின் பெயரை அல்ல..காமடி ஹீரோயினை கதாநாயகியாக ஒரு நட்சத்திர நடிகர் தன் முழூ படத்திலும் நடிக்கவைத்து வெற்றிகண்டது..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஏங்க எதிரணி பவித்ரா சொல்றதுல என்ன தப்புங்கறேன்..........அந்தக்காலத்துல நாகேஷ் பெண் வேடமிட்டு நகைச்சுவையா நடிச்சதுக்கும், இந்தக்காலத்துல விவேக் பெண்வேடமிட்டு நடிச்சதுக்கும் எவ்ளோ வித்யாசம்.... வந்து உங்க பதில போடுங்கோ........

///வடிவேல் இப்படியேல்லாம் செய்யக்கூடாது என்பதை செய்து காட்டுகிறாராம், ஆனால் மக்களுக்கு அது அவ்வாறு சென்றடையவில்லை, மக்கள் அவர் செய்த மாதிரியே செய்துவிட்டு அவர் சொன்ன வசனத்தையே சொல்லுகின்றனரோ////

என்னதிது சின்னப்புள்ளதனமா இருக்கு.......சீக்கிரம் வந்து பதில் சொல்றது கிடையாதா........எதிரணி.......கைப்புள்ள துாங்குனு......கைக்கு நேரா ஆள்காட்டி விரல காமிச்சு துாங்கிட்டீங்களா............

ஏங்க சதிலீலாவதி படம் பத்தியே பேசுறீங்களே.........பழைய படத்தோட பேரத்தான கடன் வாங்கி வச்சிருக்காங்க.....கமான் பதில் சொல்லுங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஏங்க தவமணி அவா்கள் சொல்ற மாதிரி பலதரப்பட்ட இன்றைய கால கட்ட மக்களின் குணங்களைத்தான இந்தக்கால நடிகர்கள் நடித்து காண்பிக்கிறாங்க....
அதப்போய் ஏங்க குறை சொல்றீங்க........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஷ்.............ஷப்பா.........இப்பவே கண்ணக்கட்டுதே...........
யோகலட்சுமி ஒரு பெரிய லிஸ்டே போட்டுட்டாங்கப்பா.....(யோகா வீட்டுக்கு மளிகை லிஸ்ட் அடிக்கடி போட்டு பழக்கமோ.....)எத்தன படங்கள்.. எவ்வளவு நகைச்சுவை காட்சிகள்... இத்தனை நகைச்சுவையையும் நீங்க பாத்ததேயில்லையா எதிரணி.........நீங்க இது மாதிரி லிஸ்ட் போடுங்க பாப்போம்.....யார் அதிக லிஸ்ட் போடுறாங்களோ அவுங்க டீமுக்கு போனஸ் மார்க் கொடுக்கப்படும்... இன்னும் 1 நாள் தான் பாக்கி....

///அந்த காலத்தில் படம் ஓடுவது சுலபமுங்கோ, பெரிய சாதனை இல்லை. ஏன்னா அப்போ வேற ஊடகங்கள் கிடையாது..........// இது உண்மைங்கோ அப்பட்டமான உண்மைங்கோ... இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்கோ.....எதிரணி வாங்கோ வந்து போனஸ் பாயிண்ட் வாங்க ட்ரை பண்ணுங்கோ

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பவித்ராக்கு சரியான பதிலடி கொடுத்திருக்காரு நம்ம ஷேக் அவா்கள்... பவித்ரா மற்றும் அந்தக்கால அணி எங்க போனீங்க...

அடடே... காமாலை உள்ளவனுக்கு பாக்குறதெல்லாம் மஞ்சளாத்தான் தெரியுமாம்....புதுசா இருக்கே.........

ஏங்க ஒரு படம் பாக்க போறோம்னா அதுல என்ன மெஸேஜ் சொல்லப்போறோம்னா எதிர்பார்த்து போறோம்... எந்த அளவு நகைச்சுவைல நம்மள சிரிக்கவைக்கப்போறாங்கனு தான் பாக்கப்போறோம்....நியாயம் தானங்க....

ஏங்க சதிலீலாவதி படம் பத்தி சொன்னது அந்த படத்தின் தலைப்பு பத்தி இல்லைங்கோ... அதுல கமலோட கோவைசரளா ஜோடி சேர்ந்து காமெடில கலக்கிருப்பதபத்திங்கோ.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நகைச்சுவை என்றால் அது அந்த காலத்து நகைச்சுவைதான். யாரையும் பார்த்து காப்பி அடிக்காத நகைச்சுவை. வடிவேலு, விவேக் காமெடியெல்லாம் அரைத்த மாவையே அரைப்பது போன்ற நகைச்சுவை. இவங்களால அந்த காலத்து நகைச்சுவையாளர்கள் மாதிரி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதென்பது முடியாத காரியம்.

என்னத்த கண்ணையா என்று ஒரு நகைச்சுவை நடிகரை நம்மால் இன்று வரை நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறதென்றால் அவர்கள் மக்கள் மனதில் நிற்குமாறு நகைச்சுவை செய்துள்ளனர்.அந்த என்னத்த கண்ணையாவோட டயலாக் தாங்க ”வரும் ஆனா வராது” கூட.

இந்த எதிரணிக்கிட்ட போய் என்னத்த சொல்லி, என்னத்த புரியவைப்பது நடுவர் அவர்களே!அந்த காலத்தில் வந்த படங்களின் எண்ணிக்கை மிக குறைவு நடுவர் அவர்களே! இந்த காலத்தில் அப்படி இல்லை, ஒரு நாளுக்கு ஒரு படம் வெளிவருது போல, அதுல வர நகைச்சுவையை மட்டும் டிவில போட்டு போட்டு காண்பிப்பதால் தான் மக்கள் அதில் திணிக்கப்பட்டுள்ளனரோ தவிர, சிறந்ததாக அதை கருத முடியாது.

நடுவர் அவர்களே, ஞான பறவை ஒரு படம் இருக்கு,அதுல நடிகர் திலகத்து ஜோடியா நடிச்சது நம்ம ஆச்சிதானுங்கோகோகோ!

நடுவர் அவர்களே! இந்த காலத்துல தானே படம் எடுக்கறதும் சரி, ஓடறதும் சரி ரொம்ப சுலபம், எதிரணியினர் சொன்ன மாதிரி DVD, VCD அது இதுன்னு எல்லாம் இருக்கு, வேணும்னா நகைச்சுவை காட்சிகள் அடங்கிய DVD வாங்கி கூட பார்க்கலாம், அந்த காலத்தில் அப்படி இல்லையே நடுவர் அவர்களே, படம் எடுப்பதும் சரி, ஓடுவதும் சரி சுலபம் இல்லை,ஆனாலும் அதிலும் வெற்றி கண்டவர்கள் எங்கள் நகைச்சுவையாளர்கள்.

இந்த காலத்து ஊடகங்கள் மூலம் நீங்க நகைச்சுவையை மக்களிடம் திணித்துள்ளனர், ஆனால் அந்த காலங்கள் அப்படி இல்லை, ஊடகங்கள் இல்லாத நிலையிலும் அந்த கால நடிகர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க முடிந்தது, ஊடகங்கள் மட்டும் இருந்திருந்தால் சொல்லவா வேண்டும். ஊடகங்கள் இல்லாமலே இத்தனை உச்சத்தில் இருக்கிறார்கள் அந்த காலத்து நடிகர்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களது நடிப்பு மட்டும். இந்த காலத்து நடிகர்களின் புகழுக்கு காரணம் ஊடகங்கள் மட்டுமே நடிப்பு இல்லை.

அதனால் தான் சொல்கிறேன், அந்த காலமே சிறந்தது சிறந்தது சிறந்தது.

அன்புடன்
பவித்ரா

பவித்ராவின் கருத்துக்கு எதிர்கருத்து யாரு கூறப்போறதுங்கோ.........

///நகைச்சுவை என்றால் அது அந்த காலத்து நகைச்சுவைதான். யாரையும் பார்த்து காப்பி அடிக்காத நகைச்சுவை.///
உங்க நகைச்சுவை எல்லாம் காப்பி அடிச்ச நகைச்சுவை தான... எதிரணி பதில் சொல்லுங்க...

ஊடகங்கள் முலமா நகைச்சுவை திணிக்கப்படுகிறது தானே...அந்தக்காலத்துல அது இல்லாமலே எவ்வளவு பெரிய புகழ் அடைந்திருக்கிறார்கள்......அப்ப அந்தக்காலம் தான சிறந்தது.............

ஆகவே இந்தக்கால நடிகர்களின் புகழுக்கு ஊடகம் தான் காரணம்.. அப்படின்னு சொல்றாங்க..... வாங்க வந்து உங்க பதிலடிய கொடுங்க..........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

//// இவங்களால அந்த காலத்து நகைச்சுவையாளர்கள் மாதிரி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதென்பது முடியாத காரியம்.///
நீங்கா இடம் பெற்றதென்றால் பழைய ஆட்களில் அது சார்ளின் சாப்ளின் மட்டுமே..பாதிபேர் மண்டையை உதறி நால் ஆகிறது....தேசத்தலைவர்களையே நாம் அவர்களது பிறந்தநாள் அல்லது இறந்த நாளில்தான் நினைவுகூறுகிறோம்..(விடுமுறை கிடைக்கிறதே அந்த காரணத்திற்காக மட்டும்)இதில் நாகேசையும் ,ரங்காராவையும்(அப்படின்னா யாருன்னு என் பெரிய பொண்ணு கேட்கிறது)எப்படி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தாரோ?இதுதான் 2010 தின் மிகச்சிறந்த காமடி நடுவர் அவர்களே.
முன்னாடி பாத்திங்கன்னா கல்யாண வீடு சடங்கு வீடுகளுக்கு திரைகட்டி பழைய பாடாதி படம் போடுவார்கள்...வேண்டா வெறுப்பாக பார்க்கும்போது யாராவது ஒருவரை நினைவில் வைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது..இப்போது அதற்கும் தடை வந்துவிட்டது..இதில் எப்படி நீங்கா இடம் பிடித்தாராம்?
///என்னத்த கண்ணையா என்று ஒரு நகைச்சுவை நடிகரை நம்மால் இன்று வரை நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறதென்றால் அவர்கள் மக்கள் மனதில் ///

அது யாரையா கண்ணையா?பொன்னையா?ஒரு சிறு திருத்தம்.அவரை நினைவில் வைத்துக்கொள்வது நம்மால் என்று சொல்வது தவறு..என்னால் என்று சொல்லச்சொல்லுங்கள்..
///அந்த காலத்தில் வந்த படங்களின் எண்ணிக்கை மிக குறைவு நடுவர் அவர்களே! இந்த காலத்தில் அப்படி இல்லை, ஒரு நாளுக்கு ஒரு படம் வெளிவருது போல, அதுல வர ///

ஆமாம் குறைவுதான் ஆனால் ஒரு படம் வந்தாலும் இப்ப வருகிற பத்து படங்களுக்கு பழைய படங்கள் சமம் நடுவர் அவர்களே..25 ரீல் 30 ரீல் என்று அந்த கொடுமைக்கு அளவே கிடையாது...ஒரு படம் போட்டாலும் விடிய விடிய ஓடும் நடுவர் அவர்களே..அந்த கொடுமையை பார்க்கவேண்டுமென்றால் ஒன்று நாம் போதையிலிருக்க வேண்டும்.இல்லையென்றால் சின்னக்குழந்தைகளாக இருக்கவேண்டும்..
////எதிரணியினர் சொன்ன மாதிரி DVD, VCD அது இதுன்னு எல்லாம் இருக்கு, வேணும்னா நகைச்சுவை காட்சிகள் அடங்கிய DVD வாங்கி கூட பார்க்கலாம், ///

அப்படி பார்கிறது சிறந்தது இல்லையா?அந்த காலத்தில் பாத்திங்கன்னா முழு நகைச்சுவை படம் ரொம்ப கம்மி..அதிக காமடி படத்தின் ஊடே வரும்..பழைய படம் என்றாலே ஒரு கூப்பாடுதான் அழுகைதான்!பேருக்குதான் நகைச்சுவைன்னு படத்தில் இருக்கும்..அதிலும் பாதி அழுகை பாதி சிரிப்பு..ஏற்கனவே மனுசன் நொந்துபோய் வருவான்...இதுல இந்த கொடுமை தேவையா?கொடுமை கொடுமைன்னு.......போனா அங்கே ஒரு கொடுமை தல விரிச்சி ஆடுச்சாம்! அழவேண்டும் என ஆசை இருந்தால் வீட்டில் 30 கிலோ உள்ளி உறித்து அழுதுகொண்டே இருக்க வேண்டியதுதானே தியேட்டருக்கு ஏன் படம் பார்க்கபோக வேண்டும்?அந்த வகையில் தனியாக dvd vcd யில் காமடி பார்ப்பது சிறந்தது இல்லையா?

///நடுவர் அவர்களே, ஞான பறவை ஒரு படம் இருக்கு,அதுல நடிகர் திலகத்து ஜோடியா நடிச்சது நம்ம ஆச்சிதானுங்கோகோகோ!///
அப்பாடி ஒரு வழியா பாட்டி இல்ல யார்கிட்டயோ கேட்டு கண்டு பிடிச்சாச்சா?ஆனால் நடுவர் அவர்களே அந்த படத்தில் சிறு துளி கூட மனோரம்மா ஆச்சி காமடிபண்ண வில்லை..கமல் அப்படி அல்ல..முழுக்க முழுக்க காமடி செய்து மாபெரும் வெற்றி கண்டார்...நமது டாபிக் என்னவென்றால் காமடியில் வெற்றி அடைந்தாரா என்பதே!
///இந்த காலத்து ஊடகங்கள் மூலம் நீங்க நகைச்சுவையை மக்களிடம் திணித்துள்ளனர், ஆனால் அந்த காலங்கள் அப்படி இல்லை, ஊடகங்கள் இல்லாத நிலையிலும் அந்த கால நடிகர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க முடிந்தது, ஊடகங்கள் மட்டும் இருந்திருந்தால் ///
இத பாருடா?இந்த காலத்தில் படம் வந்த ஒரே வாரத்தில் திருட்டுத்தனமாக வீடியோ வந்து விடுகிறது..ஆகவே அதிக மக்கள் தியேட்டருக்கு சென்று பார்ப்பதில்லை,,அதையும் மீறி இந்த கால நகைச்சுவை நடிகர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதே சிறந்தது!திருட்டு வி.சீ.டி.அப்போது இருந்திருந்தால் தெரிந்திருக்கும் சேதி!துண்ட காணோம் துணியக்காணோம்னு எல்லோரும் ஓடிருப்பாங்க...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இப்போது தான் ஊடகங்கள் இருக்கிறதே. எதிரணியினரை கூப்பிட்டு பழைய நகைச்சுவை படங்களை ஒலி/ஒளி பரப்பலாமே. முதல்ல அவங்க பார்ப்பாங்களான்னு கேளுங்க. என்ன காப்பி பண்ணீட்டாங்க , டீ பண்ணீட்டாங்கன்னு. என்ன பரிட்சையா எழுதுறாங்க. நாம சாப்டுற சாப்பாட்டுலேருந்து எல்லாமே நம்ம அம்மாட்டேயிருந்து காப்பி அடிச்சதுதான். அதுக்காக அது நல்லாயில்லைன்னு சொல்ல முடியுமா? படம் பார்ப்பது பொழுது போக்குக்காக மட்டுமே. அதை யாரும் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயமில்லை.நம்மை சுற்றியுள்ள குடும்ப வாழ்க்கையில இருந்து நல்லதை எடுக்க மாட்டாங்களாம். சில மணி நேர காமெடியை பார்த்து கெட்டு போவாங்களாம்.என்னத்தை சொல்ல?இக்கால் திரைப்பட நகைச்சுவை வார்த்தைகளை தான் பயன்படுத்துவாங்களாம். ஆனா அது சிறந்தது இல்லையாம்.

//ஷ்.............ஷப்பா.........இப்பவே கண்ணக்கட்டுதே...........//

ஆமா இது இக்கால நகைச்சுவைதானேங்க.
(பி.கு. மைனஸ்லாம் போட்டுறாதீங்கோஓஓஓஓஓஓஓஓஓஓ)

மேலும் சில பதிவுகள்