பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நடுவர் அவர்களே, எதிர் அணியினரை அவங்க எடுத்துக் கொண்ட தலைப்புக்கு ஆதரவா பேசச் சொல்லுங்கள் ஆனால் அவங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரியே பேசறாங்க. அந்த காலத்தில் DVD, VCD, PC, LAPI, இப்படி ஏதும் இல்லை என்பது சின்ன குழந்தைக்கும் கூடத் தெரியும் ஆனால் அந்த காலத்தில் வருடத்திற்கு 50 படங்கள் வெளியாவதே அதிகம். ஒரு தியேட்டர்ல ஒரு படம் ஒரு மாதத்திற்கும் குறையாமல் ஓடும். அப்பொழுது மக்களுக்கு வேறு பொழுது போக்குகள் இல்லை. அதனால் ஜெயிப்பது சுலபம். மக்கள் மனதில் வேறு படம் வரும் வரை மறக்க மாட்டார்கள். ஆனால் இப்போ அப்படிங்களா அதே நடிகர்கள் அதே வசனங்களை இப்போ பேசி நடித்தார்கள் என்றால் அதை திருட்டு DVD யில் கூட யாரும் பார்க்க மாட்டார்கள். இப்போ டிரென்ட்க்கு தகுந்த மாதிரிதான் நடித்தாக வேண்டிய கட்டாயம், இப்போதைய நகைச்சுவை நடிகர்களுக்கு. அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து ஞானப்பறவை திரைப்படம் யாகவா புரெடெக்க்ஷன்ஸ் தயாரிப்பு 1991 ஆம் ஆண்டு வெளி வந்த படம். அதில் பெரிய தேவராக நடிகர் திலகம் அவர்கள், கதா நாயகி மனோரமா ஆச்சி அதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம் ஆனால் அதில் அவர் நகைச்சுவை செய்யவே இல்லை, என்பதே நான் சொல்ல வருவது. ஒரு நகைச்சுவை நடிகை முழு படத்திலும் நகைச்சுவையாக நடிக்க வேண்டும் அதுதானே நகைச்சுவைக்கு வெற்றி. மனோரமா அந்தப் படத்தில் நகைச்சுவை நடிகை இல்லை குணச்சித்திர நடிகை. அடுத்து பேசாமல் நடித்தார் கமல்ஹாசன் பேசும் படம் எனும் நகைச்சுவை படத்தில், அதில் நடித்த யாருமே வசனம் பேசவில்லை ஆனால் நாமெல்லாம் சிரித்தோம். அதை போல வசனமே இல்லாத அந்தகால நகைச்சுவை படம் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். உடனே நீங்க ஊமைப் படங்களை சொல்லக் கூடாது அவை திரைப்பட கால கட்டத்தின் ஆரம்பகால திரைப்படங்கள். அதில் பேக்கிரவுன் மியூசிக் பாட்டு எதுவுமே இருக்காது. இசை பாட்டு இவையெல்லாம் வந்தபின் வந்த படங்களை இருந்தால் சொல்லுங்கள். இனிமேலாவது தெளிவான கருத்துக்களை கூறுங்கள். எங்கள் அணிக்கு வாதாட நாங்கள் இருக்கிறோம். வருவேன்.

அன்புடன்
THAVAM

\\நாகேசையும் ,ரங்காராவையும்(அப்படின்னா யாருன்னு என் பெரிய பொண்ணு கேட்கிறது)எப்படி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தாரோ?இதுதான் 2010 தின் மிகச்சிறந்த காமடி நடுவர் அவர்களே.//

ஒருதடவை நாகேஷ் அவர்களின் படங்களையும்,ரங்கா ராவின் மாயா பஜார்ரையும் வுங்க குழந்தைகளுக்கு போட்டு காண்பியுங்கள்.அப்பொழுது வுங்க குழந்தை இவர்கள் யார் என தெரிந்து கொள்ள ஆசை padum. இவ்வளவு நல்ல படங்களை நம் அப்பா ஒரு தடவை கூட காண்பிக்கவில்லையே என வுங்கலையே கோபிக்கும்.மாயா பாஜாரில் ரங்கா ராவின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. வுண்மை கடோத்கஜனை நியாபக படுத்திவிடுவார்,அருமையாக நடித்திருப்பார்.

\\DVD, VCD, PC, LAPI, இப்படி ஏதும் இல்லை என்பது சின்ன குழந்தைக்கும் கூடத் தெரியும் ஆனால் அந்த காலத்தில் வருடத்திற்கு 50 படங்கள் வெளியாவதே அதிகம்.//

நாங்களும் இதை தான் சொல்கிறோம் அந்த காலத்தில் கிராபிக்ஸ் போன்றா வசதிகள் கிடையாது.கலர் படம் கிடையாது இது போன்றா technical வசதிகள் இல்லாத காலத்தில் சொந்த நகைசுவையில் நடித்து வெற்றி காண்பதே வுன்மையான வெற்றி. இப்பொழுதெல்லாம் ஒரு நடிகர் வர வில்லை என்றாலும் பரவாயில்லை டூப் போட்டு படம் எடுத்துவிடுவார்கள்,டப்பிங் கூட வேறுயாராவது பேசிவிடுவார்கள் ஸ்டார் அந்தஸ்து கிடைத்துவிட்டால் போதும் என்று நினைகிறார்கள்.அந்த கால நகைசுவை நடிகர் ஆவதற்கு கூட அவர்கள் ரொம்ப கஷ்டபட்டிருக்கிரார்கள்.டயலாக் கூட நிறைய இருக்கும் அப்பொழுதுள்ள படங்களில்.என்ன தான் சொல்லுங்கள் அந்த கால நகைசுவையே சிறந்தது,இனிமையும் கூட.

குழந்தைகள் கிட்ட அந்த கால காமெடியா?. காண்பிக்கவா?, நடுவர் அவர்களே, ஏங்க இவங்க இப்படியெல்லாம் காமெடி பண்றாங்க. முதல்ல அவங்கள அவங்க குழந்தைகளுக்கு போட்டு காண்பிக்க சொல்லுங்க. அப்போ என்ன நடக்கும் தெரியுமா?, குடும்பம் மொத்தமும் தொலைக்காட்சி முன்னால் ... ஆமாங்க குறட்டை விட்டு தூங்குவாங்க. ஆரோக்கியமான உறக்கம் வேண்டுமா?. அந்தகால நகைச்சுவை DVD கேசட்களை கையில் எடுத்து பாருங்கள் போதும், இரவு 8 மணிக்கே ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் நிச்சயம். கடவுளே ... கடவுளே ...

அன்புடன்
THAVAM

ஆஹா, லிஸ்ட் workout ஆகுது பா.

//அந்த காலத்து நகைச்சுவைதான். யாரையும் பார்த்து காப்பி அடிக்காத நகைச்சுவை. //

நாடகத்தில் இருந்து அவங்க சினிமாவுக்கு காப்பி அடிக்கலையா, அரைத்த மாவையே அரக்கலையா. எங்க ஆளுங்க ஏற்கனவே நீங்கா இடம் பிடிச்சிட்டான்களே.

//என்னத்த கண்ணையா//

சரிங்க நீங்களே, அவர் இந்த காலத்தில் அவர் வடிவேலு அண்ணாச்சி ஓடு செய்த காமெடியை தான நியாபகமா குரிப்பிட்டிருக்கீங்க. அந்த காலத்தில் அவர் செய்த காமெடி நியாபகம் வரும் ஆனா வராது இல்லீங்களா. (உங்களுக்கு அவரை பற்றி தெரியவந்ததே கூட இந்த காமெடி மூலமாக இருக்கலாம்???)

//டிவில போட்டு போட்டு காண்பிப்பதால//

எங்கே, என்னவோ உலகத்திலேயே தமிழ் திரைப்பட காமெடி சேனல் தான் ஒண்ணுதான் டிவில காற்றது போல, வேற வழியே இல்லாம அதை பார்பதுபோலவும் திணிக்கிறாங்க, திணிக்கிறாங்க அப்படீன்னு சொல்றீங்க. Remote இருக்குல்ல, வேற சேனல் மாற்றவேண்டியதுதான. பார்கறத எல்லாம் பார்த்துட்டு, நல்லா சிரிச்சிட்டு, அப்புறம் வந்து குறை சொல்றீங்களா.

ஏதோ இந்த காலத்தில் தமிழ் பேசல, தமிழ் பேசல அப்படீன்னு சொல்றீங்களே. சந்திரலேகா படத்தில் "அகிலியோ பகிளியாமா" அப்படீன்னு ஒரு பாட்டு வந்திருக்கு, அது என்ன பாஷைனே தெரியாது அப்படீன்னு எங்க அம்மா சொல்றாங்க. அது மட்டும் இல்லாமா, ராஜா கால படங்களில் மட்டும்தான் தூய தமிழ் பேசி இருப்பாங்க. அதற்கு பின் வந்த சமூக திரைப்படங்களில் ஆங்காங்கே இங்கிலீஷ் இருக்கும், பின் இன்னும் பேச்சு வழக்கு அந்த காலத்திலேயே பார்க்கலாம், அப்புறம் மெட்ராஸ் பாஷை கூட "வா வாத்தியாரே ஊட்டாண்ட, நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்" இது என்ன பாஷை சொல்லுங்க. சோ, அந்த கால நகைச்சுவையாளர்கள் அன்றைய பாஷைல பேசினாங்க, இந்த கால நகைச்சுவையாளர்கள் இன்றைய பாஷைல பேசிறாங்க. அவ்வளவுதான்.

அதனால் தான் சொல்கிறோம், இந்த காலமே சிறந்தது சிறந்தது சிறந்தது.

இதுவும் கடந்து போகும்.

நடுவர் அவர்களே, பயப்படாம கமெண்ட் சொல்ல வாங்க. உங்களுக்கு நாங்க பாதுகாப்பா இருக்கோம்.

அன்புடன்
THAVAM

இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைங்கோ.......அதுதாங்கோ கொஞ்சம் பிஸி.... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து உங்க எல்லாருக்கும் பதில் போடுறேங்கோ......அது வரைக்கும் எல்லாரும் சமத்தா சண்டை போட்டுண்டு இருப்பேளாம்.........சரியா........யாரு நன்னா சண்டை போடுறீங்களோ.... அவுங்களுக்கு இன்னோரு போனஸ் பாயிண்ட் உண்டுங்கோ.........ஓடியாங்கோ ஓடியாங்கோ....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எதிரணிகாரா பேசரது சின்னபுள்ளதனாமானாருக்கு!

நேக்கு கோவம் வராது !வராது ! வரவே வராது! நான் அழுதுடுவேன்!

’கருத்து’ ’கருத்து’னு கத்திண்டேருக்கா!

எங்க விவேக் ‘கருத்து கந்தசாமி’யா கலக்கி ஊரையே ஓட ஓட வெரட்டிருக்காரே!

அது மாறி அந்தகாலத்துல பண்ண தில்லான ஆளு யாராவது இருக்காளா!

இதோ அவரோட கருத்துகள் ‘’ ஒரே மாவை வேக வெச்சா இட்லி, கல்லுல

போட்டா தோசை,குழில கொஞ்சமா குட்டியா பண்ணினா பனியாரம், சட்டில

ஊத்தினா ஊத்தாப்பம் ‘’ இதெல்லாம் லோகத்துக்கு சொன்ன முதல் தமிழன்

எங்க விவேக்குதான்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

\\ பழைய படங்களில் நகைச்சுவையில் மற்றும் உரையாடல்களை கவனித்தீர்களானால் "எங்கே சென்றீர்கள்?, நீ அவர்களை பார்க்கவில்லையா?,"இது போன்ற தமிழ் இருக்கும்!//
அந்த கால சினிமாக்கள் பற்றி நம் எதிரணி நண்பர் சொல்லியிருந்தார்.இது போலே வசனங்கள் இப்பொழுது இருந்தால் படமே ஓடாது என்றார்.அதற்கு பதில் நாங்கள் கொடுபதற்குள் அவர்கள் அணியிலிருந்தே தோழி பதிலளித்துள்ளார் பாருங்கள்.

\\அந்த கால நகைச்சுவையாளர்கள் அன்றைய பாஷையில் பேசினாங்க,இந்த கால நகைச்சுவையாளர்கள் இன்றைய பாஷையில் பேசுறாங்க.//

வுங்க அணியிலிருந்தே கேள்வியும் கேட்டு வுங்க அணியிலிருந்தே பதிலும் சொல்லிட்டீங்க.இதிலிருந்து தெரிய வில்லையா நீங்க எவ்வளவு குழப்பதிளிருக்கீங்கன்னு.பழைய நகைசுவையே சிறந்ததுன்னு தெரிஞ்சுக்கோங்க.

///வுண்மை கடோத்கஜனை நியாபக படுத்திவிடுவார்,அருமையாக நடித்திருப்பார்.///
வயிறு புடைக்க கொட்டிகிட்டு,திங்க முடியாம ஏப்பம் விடுவதா சிறந்த காமடி?உண்மை கடோத்கஜன் போல நடித்தாரா?இதோ பாருப்பா....கடத்கஜனை நேரில் பார்த்தமாதிரி உண்மை கடோத்கஜன்,டூயூப்லிகேட் கடோத் கஜனுக்கிட்டு?இத திண்ணி பன்டார நடிகர்களையா குழந்தைகளுக்கு காட்டுவது?ஏற்கனவே சரியா சாப்பிடமாட்டேங்கிறது!இவங்கள பார்த்துட்டு பின்னால் வேப்பிலை அடிக்கவெண்டிய சூழ்நிலை ஆகிவிடும்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்