பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Ethir ani kuuriya paayaasa munthiriyaaga agkonrum igkonrumaaka iruppathaalthaan thigattaamal irukkirathu.adikkadi naakkinil pattaal kaduppaakiduvom.cinnak kalaivanar ovvonrilum karuththu solluvaar.athuthaan kodumai,nallavatrai sollaamal puriya vendaama?

வாங்க மீரா
நீங்களும் அக்காலம் தான் சிறந்ததுனு சொல்றீங்களா.. அக்காலம் அணி வலுவாகிட்டே வருது.. இக்காலத்திற்கு யாரும் இல்லையா.. என்னப்பா இது...

ரேணு
பாயாசத்துல இருக்கற முந்திரி மாதிரி நகைச்சுவை அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்தாதான் தித்திக்கும்னு சொல்றாங்க... எதிரணி என்ன ஆச்சு..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அந்தகாலத்தில் நகச்சுவையில் இரட்டையத்த வார்த்தைகள் இடம் பேராது ஆனால் இந்தகால நகைச்சுவையில் இரட்டையத்த வார்த்தைகள் அதிகமாக உபயோகப்படுத்துகின்றனர்.
அக்காலத்தில் கருத்துடன் நகச்சுவையும் கலந்தே இருக்கும்.
காதலிக்க நேரமில்லை, சபாஷ்மீனா, பாமாவிஜயம், சர்வர் சுந்தரம், கல்யாண கலாட்டா..... இப்படி நீண்டு கொண்டே போகும் இவை அனைத்துமே சூப்பர்ஹிட் படங்களே இதில் கதாநாயகர்களும் சேர்ந்தே அசத்திருப்பார்கள் இவை அனைத்தும் எல்லோருக்கும் புரியும்வகையில் ரசிக்ககூடியவகையில் இருக்கும் என்பதே என் வாதம், அக்காலத்து நகைச்சுவையை யாராலும் தட்டிக்கொள்ளமுடியாது.

அன்புடன்
நித்யா

நடுவர் அவர்களே..ஒன்று செய்யலாம்...அக்கால படத்தையும் இப்போதைய வடிவேல் மற்றும் கவுன்டமணி படத்தையும் குழந்தைகள் மற்றும் இக்கால பெரியவர்கள் முன்னால் போட்டு காண்பித்தால்..கண்டிப்பாக எல்லோரும் இக்கால நகைச்சுவையைதான் விரும்புவார்கள்...அக்கால நகைச்சுவையை விரும்புகிறவர்கள் என் அப்பா,அம்மா,முப்பாட்டன் காலத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அக்கால நகைச்சுவையை ரசிக்கமுடியும்!

அடி வாங்கி சிரிக்க வைப்பது என்பது ஒரு தியாகம்!தன் உடம்பில் ரணங்களை சுமந்தாலும் மற்றவர்கள் சிரிப்பதற்க்காய் அடி வாங்குவது ஒரு கலை!தியாகம்!

ஏன் எததனையோ படங்களில் நாகேஷ் மனோரமா பாட்டியிடம் அடி வாங்க வில்லையா நடுவர் அவர்களே?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்


கொஞ்சம் இருங்கோ! மினியம்மா ஏதோ சொல்லனுங்கறா!

‘இன்னாங்கோ எல்லாரும் நல்லருக்கிங்களா! நகைசுவைன்னா இன்னானு கேக்குறேன்!

சிரிக்க வெக்கனும்! சிரி சிரினு சிரிக்க வெக்கறது எங்க வடிவேலு அண்ணாத்தேதான்.

சொம்மா வுட்டா பேசிக்கினேருப்பாங்கோ!

10 மாச பாப்பாவ டிவி மின்னாடி போட்டு கைல ரிமோட்ட கொடுத்தா இன்னா பன்னும் தெர்யுமா!

ஒடனே காமெடி சானலதான் பாக்கும் !.

அதுவும் எங்க அண்ணத்தே வர்ர சானலுதான் பாக்கும்!

அவரு அடி வாங்க வாங்க இங்க புள்ள இன்னாமா துள்ளும் தெரியுங்களா!

கோந்தைகளுக்கு மின்னாடியெல்லாம் நிலா காட்டி சோறு வூட்டுவாங்க்கோ!

இப்போ அப்படி காட்னா ’என்னை ராக்கேட்ல கல்பனா சாவ்லா மாறி அங்க கூட்டிட்டு போ’னு கேக்குதுங்கோ!

நம்மள்ளால அது முடியுமாங்கோ!

இப்போ அதுங்களுக்கு சுளுவா சோறு ஊட்டிடலாம்!

அதனால எங்க வடிவேலு அண்ணத்தே காமெடிதான் ஒசத்தினு சொலிக்கிறேனுங்கோ!

மாமிக்கு அவுங்க கணிணியை நான் அடிக்கடி புடுங்கிக்கரேன்னு அவங்களுக்கு கோவம் வந்து என்னை செந்திலை கவ்ண்டமணி அண்ணாத்தே ஒதிக்கறா மாறி ஒதிக்கிறத்துகுள்ள நான் எஸ்க்கேப்பூ! ’’

அடராமா! சொல்லிட்டியா ! போறும் போ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

குழந்தைகளுக்கு ரெட்டைஅர்த்த வசனங்கள் எப்படி தெரியும் நடுவர் அவர்களே?
அப்படிப் பார்த்தால் ஆபாசம் என்பதை படங்களில் திணித்ததே அந்த காலத்தில்தான்!குறிப்பாக எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களை பார்த்தால் தெரியும் ஆபாசத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருந்துவிட்டு குய்யோ முறையோன்னு கதறுவது எந்த விதத்தில் நியாயம்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

Ivarkalaip polathaan ikkaala nagaicuvai idaiyil paranthuvidum.aanaal naangal methuvaaga ani sernthaalum,engal karuthuhugal nilaiththu nirkkum...tholigale vetri murasai kottungal Vetri namathe...

//அடி வாங்கி சிரிக்க வைப்பது என்பது ஒரு தியாகம்!தன் உடம்பில் ரணங்களை சுமந்தாலும் மற்றவர்கள் சிரிப்பதற்க்காய் அடி வாங்குவது ஒரு கலை!தியாகம்!//
மற்றவர்கள் மனதை புண்படுத்தமல் அனைவரையும் சிரிக்க வைபதே சிறந்த நகைச்சுவை

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

அப்ப நாகேஷ் மனோரம்ம பாட்டியிடம் அடி வாங்கியது யார் மனதையும் புண்படுத்தவில்லையா?என்ன கொடும சார் இது?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வேலை பளு..அப்புறம் வருகிறேன்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மேலும் சில பதிவுகள்