பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

///நாங்களும் இதை தான் சொல்கிறோம் அந்த காலத்தில் கிராபிக்ஸ் போன்றா வசதிகள் கிடையாது.கலர் படம் கிடையாது இது போன்றா technical வசதிகள் இல்லாத காலத்தில் சொந்த நகைசுவையில் நடித்து வெற்றி காண்பதே வுன்மையான வெற்றி. ///

இது எப்படி இருக்கிறதென்றால் சார்லி ஒரு படத்தில் சொல்வார்"நானும் எங்க அப்பா மாதிரி டாக்டர் ஆக ஆசைபட்டேன்"என்று.பின்னால் சொல்வார்"அவரும் ஆசைபட்டார்.
இதபோல் இருக்கிறது இவர்களது கிராபிக்ஸ் கதை..கிராபிக்ஸ் வச்சு வில்லையும் அம்பையும் ,கங்காராவ்போல் சாப்பாட்டு விஷயங்களையும்தான் காண்பிக்க முடியும்!
///. இப்பொழுதெல்லாம் ஒரு நடிகர் வர வில்லை என்றாலும் பரவாயில்லை டூப் போட்டு படம் எடுத்துவிடுவார்கள்,டப்பிங்///
இதைதான் நானும் சொல்கிறேன்..அந்த காலத்தில் நகைச்சுவை நடிகர்களை மட்டும் நம்பியே இருந்தார்கள்?கால்சீட் கொடுத்து அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டால் டைரக்டர் பாடு அதோ கதிதான்!இன்றைக்கு அப்படிஅல்ல..நகைசுவை நடிகர்கள் இல்லையென்றால் கதாநாயகர்களே நகைச்சுவை முடித்து விடுவார்கள்.எம்.ஜீ.ஆரும்.சிவாஜியும் மக்கள் கலைஞர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் ரஜினி,கமல் போல் நகைச்சுவை பக்கம்கூட தலைவைத்து பார்க்கமுடியவில்லை.
//டயலாக் கூட நிறைய இருக்கும் அப்பொழுதுள்ள படங்களில்////
1000 பக்கத்துக்கு வசனம் பேசினால் அது நகைச்சுவையென்று யார் சொன்னது?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

// நீங்க எவ்வளவு குழப்பதிளிருக்கீங்கன்னு//

அம்மணி, குழப்பத்தில் இருப்பது நீங்கதானுங்கோ. இந்த காலத்தில் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி பேசனாதானுங்கோ நல்லா இருக்குங்கோ. அதைத்தான் நாங்கள் எல்லோரும் அப்பத்தில் இருந்தே சொல்றோமுங்கோ. இப்போ புரிஞ்சிக்கிட்டீகளா.

இதுவும் கடந்து போகும்.

நீங்களே சொல்றீங்க //அந்த காலத்தில் கிராபிக்ஸ் போன்றா வசதிகள் கிடையாது.கலர் படம் கிடையாது இது போன்றா technical வசதிகள்// கிடையாது அப்படீன்னு, அப்படீன்னா, நகைச்சுவை இந்த வசதிகளோடு வளர்ந்து இருக்கு அப்படீன்னு தானே அர்த்தம். So, திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு இக்காலத்தில் இன்னும் சிறப்பாக உள்ளது.

இதுவும் கடந்து போகும்.

எங்க வடிவேலு வண்டு முருகனை 6 நாள் வெச்சு அடிச்சாளே! இந்த மாறி அடி அந்த காலத்துல யாராவது வாங்கிருக்காளா?!

நாய் சேகர் 10 வருஷம் பல்தேக்காம இருந்து கின்னஸ் ரெக்கார்ட் பண்ணின்னா மாறி அந்த காலத்துல ஒருத்தரும் பண்ணலை!

எங்க கஞ்சா கருப்போட காமெடில மயங்கி டாக்டர் பொண்ணு அவரை கல்யாணம் பண்ணிண்டுருக்கா தெரியுமோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எனக்கு நல்லாவே தலை சுத்துது... என்ன மாதிரி ஆளுங்கப்பா நீங்க... மனுசன இப்படியா போட்டு மாத்தி மாத்தி குழப்புறது... இந்தப்பக்கம் போறதா... அந்தப்பக்கம் போறதானு தெரியாம பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு... என் கணவரை கூட விட்டு வைக்கல... அவரும் பல மாதிரி யோசிச்சு யோசிச்சு கூடக்கொஞ்சம் என்னைக் குழப்பிவிட்டுட்டாரு... நான் இனிமே என் அப்பா அம்மா மாமனார மாமியார் -னு எல்லார்கிட்டயும் கருத்துகேக்கனும் போல இருக்கே.......
சும்மா சொல்லக்கூடாது நல்லாவே சண்டை போடுறீங்கப்பா....

மோகனா அவா்களுக்கு தான் பட்டம் விடுறது போதாதுன்னு... வடிவேலுக்கு கொடுத்த பட்டமா லிஸ்ட் போட்டு சொல்றாங்க.... முடியலடா சாமி....

இந்த dvd.VCD எல்லாம் படாத பாடு படுது உங்கக்கிட்ட, அந்தக்காலம் அதெல்லாம் இல்லாமலே புகழின் உச்சிக்கு அந்தக்காலத்து காமெடி நடிகர்கள்“ போயிருக்காங்கன்னு சொல்றாங்க...
இவுங்க என்னடான்னா... இவ்வளவு போட்டிக்கு நடுவுல சிறந்த ஆளா வர்றதுதான் பெரிய விஷயம்னு சொல்றாங்க...
எனக்கு ரெண்டும் சரியா தான் இருக்கு... பேசாம இரண்டுமே சிறந்ததுன்னு சொல்லி எஸ்கேப் ஆயிடலாம்னு பாத்தா அதுக்கும் வனிதா டீச்சர் விட மாட்டாங்க போல... பட்டிமன்றக்கூட்டம நடக்குற இடத்துல வாசல்ல குச்சியோட நின்னுக்கிட்டு இருக்காங்க.......ம்ம்ம் என்ன பண்றது.. அடிவாங்குறதுன்னு முடிவாயிடுச்சு.. யார் அடிச்சா என்ன... எந்தப்பக்கம் திரும்பினாலும் இடி வாங்குறேனே..............

தவமணி, ஷேக், யோகலஷ்மி, மோகனா, கீதா இப்படி எல்லாரும் ரவுண்ட் கட்டி இந்தக்காலம் தான் சிறந்ததுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க...

அந்தப்பக்கம் சுந்தரி, பவித்ரா 2 பேரைத்தவிர வேற யாரையும் காணமே... எங்கப்பா போனீங்க... பாவம் பிள்ளைங்க இரண்டையும் இப்படியா தனியா தவிக்க விடுறது....

சரி... சண்டைய கன்டினியு பண்ணுங்க..என்னை முழு பைத்தியம் ஆக்குற வரைக்கும் விடாது கருப்பு மாதிரி விடாம பதிவு போடுங்க.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நடுவர் அவர்களே, எதிர் அணி கூடாரம் காலியாகிப் போச்சுங்கோ, எல்லோரும் இந்த கால அணில பத்திரமாக, சந்தோஷமாக இருக்கிறார்கள். கூடிய விரைவில் அவர்கள் இருவரும் வர இருப்பதாக பட்டிமன்ற வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

அன்புடன்
THAVAM

நம்ம அறுசுவை அன்பர்களுக்கு லொள்ளுக்கு கொஞ்சம் கூட குறைவே கிடையாதுடா சாமி.....

கூடாரம் காலியாம்லப்பா... எதிரணி எங்க போனீங்க... தவமணி அவா்கள் கிண்டல் பண்ணுறாருங்கப்பா.... சீக்கிரம் வாங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நடுவர் அவர்களே, உங்களுக்கும் எங்கள் அணி தோழர்களுக்கும், எதிரணி தோழர்களுக்கும் என் மனமார்ந்த மாலை வணக்கங்கள்.

நடுவர் அவர்களே, நீங்களே பாருங்க எதிரணியினருக்கு சொந்தமா அவங்க அணிக்கு சப்போர்ட் பண்ண கூட முடியல, நாங்க எங்க கருத்தை சொன்னதுக்கு அப்புறம் அப்படியே அதை காப்பி அடித்து காப்பி அடித்துதான் பதில் போடறாங்க, அதனால் தான் அவங்க காப்பி அடிக்கும் இந்த காலத்துக்கு ஆதரவு தருகிறார்கள்.

அடிக்கடி போட்டு பார்ப்பதால் பிடிக்காதது கூட பிடித்து விடும் நடுவர் அவர்களே!அந்த காலத்தில் நகைச்சுவை படத்தின் அங்கமாகவும் படத்தோடு சார்ந்தே அல்லவா வரும் நடுவர் அவர்களே ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை நடுவர் அவர்களே, நடிக்கும் படத்துக்கும் அதில் வரும் நகைச்சுவைக்கும் சம்பந்தமே இருப்பதில்லையே, திடீரென்று ஏதோ ஒரு இடத்தில் திடீர் திடீர் என்று நகைச்சுவை என்ற தோணியில் நகைச்சுவையாளர்கள் தோன்றி ஏதேதோ செய்து வருகின்றனர். இதற்கு பேர் நகைச்சுவை இல்லை நடுவர் அவர்களே!

இந்த காலத்து படங்களில் எதற்காக இப்ப இவர் வந்து இப்படி அடி வாங்கிக்கொண்டு இருக்கிறார் என்பது புலப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

எனவே, அந்த காலத்து நகைச்சுவையே சிறந்தது சிறந்தது சிறந்தது.

நன்றி, வணக்கம்.

நேரமின்மையினால் என்னுடைய வாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.நல்ல தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

அன்புடன்
பவித்ரா

அனைவருக்கும் மாலை வணக்கம். எதிரணி தோழர்கள் அவர்கள் சொன்னதை மறை பதற்கு ஏதேதோ சொல்லி குழப்பிவிட பார்கிறார்கள். எதிரணி நண்பர் பழைய கால பேச்சு வழக்கை பற்றி சொன்னதை தான் நான் இங்கு குறிப்பிட்டேன். எங்கள் அணி தோழி சொல்வது போல் தலைப்பை விட்டுவிட்டு எங்களுக்கு பதில் என்கிற பேரில் நீங்கள் எழுதுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள். ஏன் பாயிண்ட்ஸ் கிடைக்க வில்லையா.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கிணங்க பழமை என்று வுங்களால் சொல்லப்படும் காமெடிகள் அனைத்தும் இன்றும் மக்களால் ரசிக்கதகுந்தவைகள்தான். அதை ரசித்ததால் தான் இன்றும் பல directergal பழைய காமெடிகளை இமிடேட் செய்து தம் படங்களில் காமெடிகள் வுருவாக்குகிறார்கள். மேலும் பல இயக்குனர்கள் ப்ரீ டைமில் என்ன பண்ணுவீர்கள் என்று கேட்டால் பழைய சினிமாக்கள் நிறைய பார்ப்பேன் என அவர்கள் சொல்ல பார்த்திருக்கிறேன். மேலும் என் படத்திற்கு பழைய கமேடிகளே impression என வடிவேலு அவர்களே கூற கேட்டிருக்கிறேன். அவர்களே கூறும்போது நீங்களும் அதை ஒத்து கொள்வதில் தப்பேதும் இல்லை என்று நினைக்கிறன்.இப்போதும் சொல்கிறேன் பழைய காமெடிகளே சிறந்தது

எதிர் அணியினர் கூவுகிறார்களே காப்பி ... காப்பி என்று. பட்டி மன்றம் என்றால் என்ன? அவர்கள் சொல்லும் குறிப்புகளுக்கு மறு மொழியும், எங்கள் தரப்பு விளக்கங்களையும் சொல்வதுதானே பட்டி மன்றம். அவர்கள் பேசுவார்களாம், ஆனால் நாங்கள் பேசக்கூடாதாம். நடுவர் அவர்களே, இந்த பட்டி மன்றத்தை பார்த்துக் கொண்டிருக்கும் மக்களே நான் உங்களை பார்த்து கேட்கிறேன், இது நியாயமா?. நீங்களே சொல்லுங்கள். சார்லி சாப்ளினை பார்த்து சந்திரபாபு காப்பியடிக்கலாம். சந்திரபாபுவை பார்த்து நாகேஷ் காப்பி அடிக்கலாம். ஆனால் நாங்கள் காப்பி அடிக்க கூடாதாம். உண்மையை சொல்ல வேண்டும் எதிர் அணியினர். அந்த காலத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு இதையெல்லாம் சாப்பிட்டனர் இந்த காலத்தில் ரவா இட்லி, ரவா தோசை, பூரி, சப்பாத்தி இப்படி சாப்பிடுகிறோம். இதெல்லாம் காலத்திற் கேற்ற சாப்பாடு என்பவர்கள், நகைச்சுவையில் மட்டும் அந்த காலமே என கூப்பாடு போடுகிறார்கள். நல்ல தீர்ப்பு நடுவர் கையில் நாடுகிறோம் நாங்கள். வருவேன்

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்