பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பவித்ரா சொல்வதும் சரிதானே... அந்தக்காலத்துல நகைச்சுவை படத்தின் கதையோடு ஒட்டி வந்தது.... ஆனால் இன்று படத்திற்கும் நகைச்சுவைக்கும் சம்பந்தமேயில்லாமல் பல படங்கள் வருகிறது... இதுக்கு எதிரணி என்ன பதில் சொல்லப்போறீங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சுந்தரி கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு சொல்லுறாங்கோ... அந்தக்காலத்து நகைச்சுவை அந்த ரகமாம்.....அதனால் தான் இன்றும மக்களால் ரசிக்கப்படுகிறதாம்... வாங்க வந்து பதில் சொல்லுங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

விவேக் உள்ளங் கைல சுந்தர்.C ஸ்குரு டிரைவர குத்தி வலிக்குதான்னு கேப்பார்!

வலிக்கல! வலிக்கலனு சொல்லிண்டே வலியை கண்ணுல காமிப்பார்!

இந்த நடிப்பு அந்தகால நகை சுவை நடிகர்கள்கிட்டே இருந்துதா!

விவேக்கும் சுந்தர்.C யும் காந்தி தாத்தாவோட புத்தகம் விக்க ஒரு நடிகையை கூட்டிவந்து எல்லா புக்கையும் வித்துடுவாங்கோ!

அவரும் சுந்தர்.Cயும் பண்ணினா மாறி அந்த காலத்துல ஒருத்தரும் பண்ணினதுல்லை!

இதுதான் இருக்கறதுலேயே ஹை லைட்!

வடி வேலுவை அடிச்சு ஒதைச்சு புழிஞ்சு கொடில காய போட்டா மாறி யாராவது செஞ்சுருக்காளா!

சொல்ல சொல்லுங்கோ!

எதிரணிகாரா வாயவே தொறக்க முடியாது!

ஏன்னா அதெல்லாம் ’’சும்மா!’’

எங்களோடதுதான்

‘’அட யம்மா யம்மா யம்மா யம்மா யம்மம்மாவாருக்கு!’’

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நீங்கள் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் அதற்கு நாங்கள் பதில் கூறினால் நாங்கள் அவர்களை காப்பி அடிக்கிறோம், அவர்களால் சுயமாக சிந்திக்க முடியவில்லை என்று கோஷம் போடுகிறார்கள் அதற்கு ஒரு தீர்வு நீங்கள்தான் சொல்ல வேண்டும். கதையோடு ஒட்டிவந்தால் தான் நகைச்சுவையா? படத்தோடு ஒட்டி வந்தால் போதுங்க. நகைச்சுவையை மட்டும் பாருங்கள். அது கதையோடு வந்தால்தான் பார்ப்பீர்களா?. அப்படி எந்த படத்தில் ஒட்டாத நகைச்சுவை வருகிறது?. சொல்லுங்கள். மீண்டும் வருவேன்.

அன்புடன்
THAVAM

///எதிரணி தோழர்கள் அவர்கள் சொன்னதை மறை பதற்கு ஏதேதோ சொல்லி குழப்பிவிட பார்கிறார்கள். எதிரணி நண்பர் பழைய கால பேச்சு வழக்கை பற்றி சொன்னதை தான் நான் இங்கு குறிப்பிட்டேன். ///
நாங்கள் எதையும் மறைக்கவும் இல்லை..ஏதேதோ சொல்லி குழப்பவும் இல்லை..உங்களால் முடியவில்லையென்றால் ஒரு காகிதத்தில் இந்த காலத்து காமடியே சிறந்தது என்று எழுதி கொடுத்துவிட்டு போங்கள்..விட்டு விடுகிறோம்.
///பாயிண்ட்ஸ் கிடைக்க வில்லையா.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கிணங்க பழமை என்று வுங்களால் சொல்லப்படும் காமெடிகள் அனைத்தும் இன்றும் மக்களால் ரசிக்கதகுந்தவைகள்தான். ///
பாய்ன்ட்ஸ் கிடைக்காமலா உங்களை தினற அடிக்கின்றோம்?உங்களுக்கு பதில் போடுகின்றோம்?இன்றளவும் மக்களால் ரசிக்கபடுகின்றன என்று போதுவாக சொல்ல வேண்டாம்...சில மனிதர்களால் என்று சொல்லவும்
///மேலும் பல இயக்குனர்கள் ப்ரீ டைமில் என்ன பண்ணுவீர்கள் என்று கேட்டால் பழைய சினிமாக்கள் நிறைய பார்ப்பேன் என அவர்கள் சொல்ல பார்த்திருக்கிறேன். மேலும் என் படத்திற்கு பழைய கமேடிகளே impressi///
பழைய படம் என்றால் நீங்கள் குறிப்பிடும் பழையகாலம் என்று அவர்கள் சொன்னார்களா? உங்கள் அணியிலிருந்துதான் ஒருவர் சொன்னார் நாங்கள் எங்களுக்கு முன் சென்றவர்களை காப்பியடித்துதான் நகைச்சுவை செய்கிறோம் என்று..நீங்கள் யாரிடம் பாடம் படித்தீர்களோ அவர்களிடம்தான் எங்கள் வடிவேலுவும் இயக்குனர்களும் பாடம் படித்தார்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நடுவர் அவர்களே!

படத்தோடு கூட ஒட்டி வருவதில்லை நடுவர் அவர்களே!அந்த காலத்தில் நகைச்சுவை என்பது படத்தின் கதையை ஒட்டியும் இருக்கும், அதே சமயம் நகைச்சுவையாளர்கள் அதிலேயே தம் திறமையை வெளிபடுத்துவார்கள். ஆனால் இன்றைய திரைப்படங்களில் நகைச்சுவையாளர்கள் தாங்களும் படத்தில் வரவேண்டும் என்பதற்காக வருகிறார்களே தவிர படத்தின் கதைக்கும் அவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.

ஆரியா என்ற தமிழ்ப்படம் ஒன்று, நேற்றுக்கூட டிவியில் பார்த்த ஞாபகம், அதில் நகைச்சுவையாளராக வரும் வடிவேலுக்கும் கதைக்கும் சுத்தமாக சம்பந்தமே இருப்பதில்லை. இன்றைய படங்களை பார்க்க சென்றால், அதில் இரண்டு கதைகள் இருக்கிறது, ஒன்று படத்தின் கதை, மற்றொன்று நகைச்சுவையின் கதை. இதென்ன கொடுமை நடுவர் அவர்களே!

பிச்சைக்காரிக்கு வாழ்க்கை கொடுத்தாரே விவேக், அந்த நகைச்சுவையும் அப்படிதான், படத்தின் கதை ஒருபுரம் இருக்க, இவருக்கும் அந்த பிச்சைக்காரிக்குமான கதை மற்றொரு புறம் இருக்கும்.

அன்புடன்
பவித்ரா

நடுவர் அவர்களே. நாங்கள் முன்பே கொடுத்த கருத்துக்கு அப்பொழுதே பதில் கூரத்தேரியாமல் இப்பொழுது அதை "காப்பி" அடித்து, அதற்கு பதிலாகவும் நாங்கள் கொடுத்த கருத்தையே "காப்பி" அடித்து நல்லா கவனீங்க நடுவரே "காப்பி" அடித்து இங்கே குறிப்பிட்டிருப்பது எங்கள் அணியினரா. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தராமல் எதையோ குழப்புவது யார் நடுவர் அவர்களே. இவர்கள் குடுப்பது பதிலுக்கு பதில் என்றால் நாங்கள் கொடுப்பதும் பதிலுக்கு பதில் தானே. திணறுவது யார் என உங்களுக்கே நன்றாக தெரியும் நடுவர் அவர்களே. கூறியதையே கூறிக்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல் இருப்பது யாருக்கு எனவும் உங்களுக்கே நன்றாக தெரியும். ஆகையால், இந்தகால நகைச்சுவையே சிறந்தது என தீர்ப்பினை இறுதியாகவும் உறுதியாகவும் கூறும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுவும் கடந்து போகும்.

அனைவரும் மிக அழகாக வாதாடுகிறீா்கள்.... தங்களின் வாதங்களைத்தொடருங்கள்.. அதன் பலன் நாளை பட்டி முடிவில் தெரியும்... நாளை பட்டி முடிவு அறிவிக்கப்படும்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

//படத்தோடு கூட ஒட்டி வருவதில்லை//

ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொழுது, உங்களுக்கென முக்கியத்துவம் கொடுத்து ஒரு தனி காபின் கொடுத்து ப்ரோமோஷன் கொடுத்தால் உயர்வு என சொல்லுவீர்களா அல்லது கும்பலோடு கோவிந்தாவாக இருங்கள் என கூறினால் அதை உயர்வு என சொல்லுவீர்களா. எப்படியும் நீங்கள் உழைப்பது கம்பனியின் வெற்றிக்கு தானே. அதுபோல் தனியாக காமெடி டிரேக் என்றால் அது நகைச்சுவைக்கு கொடுக்கும் மரியாதை தானே. குறிக்கோள் படம் வெற்றி அடையவேண்டும் என்பதுதான் இங்கு.

இதுவும் கடந்து போகும்.

நடுவர் அவர்களே!

தனியாக காமெடி ட்ராக் என்றால் எதற்காக அதை வேறு படத்தில் சொல்ல வேண்டும் அதை வைத்தே தனியா படம் எடுத்துவிடலாம் இல்லையா.

அந்த காலத்து படத்தில் இருந்தது போன்று இந்த காலத்தில் நகைச்சுவை சிறந்ததாய் இல்லை என்று கூறி, தீர்ப்பை எதிர்நோக்கி, என் வாதத்தை முடித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்