பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நடுவர் அவர்களுக்கு நன்றி, நாங்க ஜெயிச்சிட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அண்ணா அடிக்க மாட்டாருன்னு தெரியும்.. அதுனால தான் தீா்ப்பை தைரியமா சொன்னேன்... அடிச்சா அண்ணிக்கிட்ட சொல்லிக்கொடுத்துடுவேனுல்ல...

தங்களின் நன்றிக்கு நன்றி......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நீங்க சொல்றது முற்றிலும் உண்மை, நாடோடிகள், பஞ்சதந்திரம், பிதாமகன், பறவை முனியம்மா பாப்பையாவ வச்சு ஒரு காமெடி வரும் பாருங்க, சான்ஸே இல்ல. எனக்கு வடிவேலுவை விட விவேக் ரொம்ப பிடிக்கும், ஆனாலும் வடிவேல் மிகச் சிறந்த நடிகர்.பெண் வேடமிட்டு வந்து கோவை சரளாவோடு சண்டை போடுவதெல்லாம். நான் அதிக நேரம் பார்ப்பதே ஆதித்யா, சிரிப்பொலிதான். என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த சேனல்களில் பழைய நகைச்சுவையும் காண்பித்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்
பவித்ரா

கவிசிவா உங்க பாராட்டுக்கு நன்றிப்பா... ஆத்தா பாசாயிட்டோம்...(படிச்சு சிரிச்சுக்கிட்டே பதிவு போடுறேன்)..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சாந்தினி... முதல்ல உங்க பாராட்டுக்கு நன்றி... நான் ஏற்கனவே எல்லாரும் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதுல பறந்துகிட்டு இருக்கேன்.. இதுல நீங்க வேற இப்படி எல்லாம் சொன்னா நான் நேரா பறந்து விண்வெளிக்கே போயிடுவேன்.... (காசு பணம் செலவில்லாம...)

சாந்தினி நீங்கள் கூறியது போல் பிரித்து போடலாம் என்று பார்த்தால் முடியவில்லை. நான் டாக்குமென்டில் அடித்து காப்பி பண்ணி போட்டேன். டாக்குமென்டில் சரியாக இருந்தது. ஆனால் இங்கு வரிசையாக வந்துவிட்டது... சிரமம் பாராமல் படித்ததற்கு நன்றி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆமாம் பவி, இந்தக்கால நகைச்சுவையை பெரிதாக குறை கூற முடியாது... அனைத்துமே அனைத்திலுமே நல்லவிதமாக அமைவது என்பது முடியாத காரியம். ஒருசில குறைகள் இருந்தாலும் இந்தக்கால காமெடி குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கத்தானே செய்கிறது.... சிறந்தது பழைய காமெடி, அதிகம் சிரிக்கவைப்பது புதிய காமெடி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹேமாவுக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ஆனந்தத்துல கத்துறது என் வீடு வரைக்கும் கேக்குது.... ஹேமாவின் நன்றிக்கு நன்றி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்களின் முதல் பதிவைப் பார்த்து விட்டு தான் அந்த (பி.கு) கொடுத்தேன்.. நீங்கள் சரி செய்து விட்டதால் அந்த குறிப்பை நீக்கி விட்டேன் பா.. அதற்குள் எனது முதல் பதிவைப் பார்த்து விளக்கி விட்டீர்கள் நீங்கள்.. :)

அப்படியே பறந்து வந்து எனக்கும் சுந்தரிக்கும் ட்ரீட் தந்து விடுங்களேன்.. :) (சுந்தரியும் நானும் ஒரே ஊரில் இருக்கிறோம்)..சுந்தரி அவர்களின் குழந்தைகளும் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள் அல்லவா.. ;)

ட்ரீட் தான... கொடுத்துட்டாப் போச்சு... வீட்ல இருந்து என் கையால சமைச்சு எடுத்துட்டு வரேன்... எனக்கு ஒன்னும்மில்லப்பா... ரிஸ்க எடுக்கறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி அப்படின்னா.... வாங்க வாங்க... ட்ரீட் கொடுக்க நான்ரெடி....

ஆமாம்பா... சுந்தரி பசங்க எனக்கு வாழ்த்து தெரிவிச்சுருக்காங்க... தேங்க்ஸ் சுந்தரி... பசங்க வாழ்த்து எப்பவுமே ஸ்பெஷல் தான்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஒரு வாரம் இங்க வந்த நகைச்சுவை பட பட்டியல் பாத்து மனசுல ஓட்டி சிரிச்சுகிட்டே இருந்தேன். பழைய பட காமெடி அம்மா அப்பாகூட உக்காந்து பாக்குறது ஒரு அலாதி இன்பம். எப்படினா அந்த சமயத்தில ஏன் அந்தக் காட்சி வந்தது, இவரு ஏன் அப்படி குறிப்பிட்டு பேசுனாருனு எல்லாம் சொல்லுவாங்க. காமெடிய ரசிச்சுட்டே ஓ இதுக்குதான் அப்படி பேசுனாங்களானு அவங்களோட திறமைய வியந்தும் பாப்போம். அப்ப எந்த அரசியலா இருந்தாலும் கருத்து சொல்ற உரிமை எல்லாருக்கும் இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்தக்கால நியாபகம் நெஞ்சிலே வந்ததே...........

ஆனாலும் நடுவருக்கு என்மேல ஸ்பெசல் பாசமோ, வாதாடாமயே பேர லிஸ்ட்ல போட்டிங்க. தேங்க்ஸுங்கோ.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்