பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

யார் எந்த பெயரில் மன்றம் ஆரம்பித்தாலும் அந்த மன்றத்திற்கு நிரந்தர கொ ப செ நான்தானுங்கோ கோகோகோ.

அன்புடன்
THAVAM

அண்ணாக்கு இல்லாத பதவியா... கண்டிப்பா கொ ப செ அப்படின்னாலே அது நீங்க தான்.. கவலை வேண்டாம்......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நடுவர் அவர்களே தங்களின் பிறந்த நாள் அன்று நல்ல தீர்ப்பு தந்துவிட்டீர்கள். நன்றிகள் கோடி. பட்டிமன்றத்தை அருமையாக வழிநடத்திச் சென்றீர்கள். வாழ்த்துக்கள். எங்கள் அணியில் வாதாடிய தோழிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். குறிப்பாக கடைசி வரை நின்று வாதாடிய சுந்தரி, பவிக்கு என் வாழ்த்துகள். எதிரணி தோழர் தோழிகளும் திறம்பட தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

எனக்கு பழைய சினிமா காமெடி பற்றி அந்த அளவுக்கு அனுபவம் இல்லை. அதனால் என்னால் தொடர்ந்து கலந்து கொள்ளமுடியவில்லை. அடுத்த நடுவராக என் பெயரை கைப்புள்ள பவி தெரியாத்தனமாக வழி மொழிந்துவிட்டார். தோழிகளே ! மன்னிக்கவும் என்னால் நடுவராக இருக்க முடியாது. என் பிரச்சனை இதுதான். இந்திய நேரத்திற்கும், காங்கோ நேரத்திற்கும் 4.30 மணிநேர வித்தியாசம் உண்டு. நான் பட்டியின் நடுவராக இருக்கும்போது காலையில் எழுந்து பார்ப்பதற்குள் பதிவுகள் மலையென குவிந்திருக்கும். நான் அவற்றிற்க்கு பதில் பதிவு தந்து முடிப்பதற்குள் அடுத்த பதிவுகள் கியூ கட்டி வரிசையில் நிற்கும்.தோழிகளே, உங்களுக்கே தெரியும் இதற்கு முன்பு நடந்த பட்டியின் வாதங்களை கூட நான் லேட் நைட்டில தான் அனுப்பியிருப்பேன். எனக்கு அப்போது தான் நேரம் கிடைக்கும். நான் இன்னும் நடுவராக வந்தால் தினமும் எனக்கு சிவராத்திரி தான். அந்த நேரத்தில் நீங்க தூங்கி முழிச்சி கையில் காபி கப்போடு இருந்திருப்பீங்க. தோழிகளே, நான் பிள்ளைகுட்டி பெத்தவ. ரெண்டு வாண்டுகள் வேற இருக்கு. அதனால என்னோட நிலைமைய யோசிச்சு பார்த்து யாராவது நல்ல மனசு பண்ணி அடுத்த நடுவரா வர சம்மதம் சொல்லுங்க. அப்படி யாராவது முன் வந்தீங்கன்னா உங்களுக்கு பல்லி மிட்டாய்க்கு பதில் எலி மிட்டாய் தருவேன்னு உறுதி கூறுகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி... நீங்கள் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது. ஆனாலும் அடுத்த பட்டிக்கு யாரும் நடுவராக முன்வரவில்லையே... யாரேனும் ஒருவர் முன்வரலாமே.. தோழிகளே ஏன் தயக்கம்பா....கவிசிவா கூட பட்டிமன்ற சிறப்பு இழைல கேட்டுருக்காங்க மறுபடியும்... விரைவில் யாரேனும் ஒருவர் முன்வாருங்கள்... நன்றி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா பட்டிமன்ற தீர்ப்பு எப்படி சொல்லி சமாளிக்க போறேனு சொல்லிட்டு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள். எங்கள் அணியில் தொடர்ந்து வாதாடிய பவிக்கு ஸ்பெஷல் நன்றி. சுந்தரிக்கும். எதிர் அணியினரும் கடைசி வரைக்கும் தன்னுடைய வாதங்களை எடுத்துரைத்தனர். அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.

நான் எழுதின தீா்ப்ப எல்லாரும் பொறுமையா படிக்கிறீங்களே.. பரவாயில்லையே... வினோஜா உங்க பாராட்டுக்கு நன்றி... எங்க பட்டிக்கு தீா்ப்பு சொல்லலைன்னா வீட்டுக்கே வந்திருப்பாங்க குச்சி எடுத்துக்கிட்டு... அப்ப எல்லார்கிட்டயும் வடிவேலு மாதிரி அடிவாங்கனும்.. இப்ப யாராவது ஒரு அணி தான அடிக்கும்.. அதான் தைரியமா தீா்ப்பு சொல்லிட்டேன்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த பட்டிக்கு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

ராதா

பட்டியை திறமையாக எடுத்து சென்றீர்கள். வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டுக்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கீதா, ரம்யா இருவருடைய பாராட்டுக்கும் மிக்க நன்றிப்பா.... ரம்யா நான் எங்க எடுத்துக்கிட்டு போனேன்.. என்னையும் சேர்த்துல்ல இழுத்துக்கிட்டு போச்சு... ரம்யாவின் நிலைமை போன பட்டிக்கு என்ன என்பதை இந்த பட்டியில் நான் அறிந்து கொண்டேன்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பட்டி மன்ற தீர்ப்பை முன்னரே தெரிந்து வாதாடியவர்கள் நானும் தவமணி அண்ணாவும்....இருந்தாலும் ஸ்வாரஸ்யம் போய்விட கூடாதென்ற ஒரே காரணத்திற்காக கடைசி வர ஆதரவு தந்த யோகலக்ஷ்மி மேடம்,தவமணி அண்ணா,சங்கீதா மேம்,மோகனா மாமி,சாந்தினி மேம் மற்றும் எதிரணியில் பவித்ரா,சுந்தரி மற்றும் பட்டிமன்றத்தில் கலந்து சிறப்பித்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
நடுவர் சகோதரி ராதா மிக அருமையாக தன் பங்கினை செய்து முடித்தார்..நன்றி ராதா.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்