பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஹாய் நண்பர்களே எங்க டீம் ஜெயிச்சிடுச்சு.ரொம்ப ஹாபியா இருக்கு. அதுவும் கலைவாணர் அவர்களின் நினைவுதினத்தில் தீர்ப்பு வழங்கியாதற்கு ராதாவிற்கு hats உப.இந்த ஒருவாரம ராதாவை பார்க்க பாவமாக இருக்கு வீட்டிலும் பிசியாக பட்டியிலும் பிசியாக எங்கள் வாதத்திற்கு இணையாக பதில் வழங்கி ஒரு சிறந்த நடுவர் என்பதை நிருபித்துவிட்டார்.ஓன்று தெரியுமா நண்பர்களே ஏன் குடும்பத்தில் அனைவரும் வடிவேலு ரசிகர்கள்.(நீங்க அடிக்க வருவது தெரிகிறது ஷேக்,மற்றும் தவமணி அண்ணா) அனைவரும் அருமையாக வாதாடினார்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இப்ப தான் பார்த்தேன். நல்ல அருமையா சொல்லிட்டீங்க! விளக்கங்கள் அருமை.

இவ்வளவு நாளா என்னை பட்டிக்கு வா என மிரட்டிய அனைத்து பாசக்கார தோழிகளாகிய பவி,கல்பனா,மாமி எல்லாரிடத்திலிருந்தும் எனக்கு விடுதலை கிடைச்சாச்சு! இதுல பவி தான் பட்டிக்கு வர் வேண்டியது தானே என ரொம்ப மிரட்டுனா :(

அவங்க கிட்ட சொன்னது தான் இங்கேயும் சொல்கிறேன். மன்னிக்கவும் ராதா. எனக்கு படங்கள் பார்க்க பிடிக்காது. 3 மணி நேரம் வேஸ்ட்டா ஒரு இடத்தில் இருப்பது சுத்தமா பிடிக்காது. மணிரத்னம்,ராம்கோபால் வர்மா படம்னா மட்டும் தான் பார்ப்பேன். காமெடிய உங்க அளவுக்கெல்லாம் எனக்கு ரசிக்க தெரியாது. அதை அழகா விவரிக்கவும் தெரியாது.

மற்ற பட்டிகளில் நம் அனுபவத்தை வைத்து ஏதாவது சொல்லிவிடலா. ஆனால் இங்கே கண்டிப்பாக விவரங்களுடன் வாதாட வேண்டும். வசனம்,நடிகர்,நடிகை,படம் என நிறையா இருக்கு. அந்த காலத்து படத்துல நான் ரசிச்ச காமெடி சர்வர் சுந்தரம் மட்டுமே! அதை தவிர வேறு எந்த படப்பெயரும் எனக்கு தெரியாது.

வடிவேலு,விவேக் ஜோக்கும் அப்படியே. ரசிப்பேன், சிரிப்பேன். ஆனால் அதே இடத்தில் அப்படியே மறந்துவிடுவேன். இது வரைக்கும் நான் அதிகமா சிரிச்சு ரசிச்ச காமெடியின் பட்டியல் எண்ணிவிடக்கூடியது தான்.

(காமெடி பத்தி தெரியாது என்பதை தான் இவ்வளவு வெளாவரியா சொல்றாங்களாம்).

அடுத்த பட்டிகளில் முடிந்த அளவு நேரமொதுக்கி வர முயற்சி செய்கிறேன்.

சிறப்பாக வாதாடிய அனைவருக்கும் நன்றி. குமார் அப்பாவுக்கு ஸ்பெஷல் நன்றி!

சிறப்பாக பட்டியை நடத்தி அருமையான தீர்ப்பும் சொன்ன ராதாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ராதா, முதலில் உங்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் நல்லபடியா நிறைவேறனும், இந்த வருஷம் மட்டும் இல்ல, உங்க வாழ்க்கை முழுவதும். தீர்ப்பை மிக அழகா சொல்லி இருக்கீங்க, இப்பதான் படிச்சேன். அந்த காலம்னு வாதிட்டாலும், நீங்க இந்த தீர்ப்பை தான் சொல்லணும் அப்படீன்னு ஆசைபட்டுகிட்டு தான் இருந்தேன். முதல்ல, இந்த பட்டிமன்றத்தில் நான் கலந்துக்குரதாகவே இல்லை. ஆனால், எல்லோரும் அந்தக்காலம்னு சொல்லவே, இந்தகாலத்து ஆளுங்கள பத்தி பேச ஆள் கம்மியா இருக்கேன்னுதான் களத்தில் குதிச்சேன், அப்புறம் பட்டிமன்ற விதி படி அதை maintain பண்ண வேண்டியதா போச்சு. ஆனால் கடைசியில் எதிரணி ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கிட்டாங்க. VINOJA கரெக்டா ஒரு இடத்தில் இதை குறிப்பிட்டு இருந்தாங்க. ஆனால் நாங்க எதிர்த்ததினால தான, அந்தக்கால பெருமை எல்லாம் வெளியில் வந்தது. எனக்கு NSK அய்யா, Nagesh அய்யா, மற்றும் அந்தகால எல்லோரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவங்க காமெடி வந்தா எத்தனை தடவை வேணும்நாளும் கண்கொட்டாமல் பார்பேன், ரொம்ப மரியாதையும் கூட, அதனாலதான் எங்க குரிப்பிடிருந்தாலும், ஐயா, சார் அப்படீன்னு குறிப்பிட்டிருந்தேன். எதிரணியினர் இன்னும் நிறைய அந்தக்கால பெருமைகளை கூறி இருக்கலாம்னு தோனுச்சு, ஏன்னா இன்னும் நிறைய இருக்கு.

NSK அய்யா நினைவுநாள் அப்படீன்னு நீங்க சொல்லிதான் தெரியும், அவருக்கு மரியாதை செய்யும் விதமா நல்ல தீர்ப்பு கொடுத்திருக்கீங்க. அவர் பற்றி ஒரு சில வார்த்தைகள். அவர் ஒரு வில்லுப்பாட்டு கலைஞர் (நல்லதம்பி படத்தில் கிந்தனார் வில்லுப்பாட்டு பாடி இருப்பார்.) அவர் சிறந்த கொடையாளர் கூட. அவர் எவ்வளவோ பண அளவில் கஸ்டங்கள சந்திச்சும், அந்த குணத்தை அவர் மாற்றிக்கவே இல்லை. சிறந்த போராட்ட குணம் உடையவரும் கூட, எவ்வளவோ சங்கடங்கல்லுக்கும் அலுக்காம பதில் கொடுத்தவர். அவங்கெல்லாம் ஒரு சகாப்தம்.

ஷேக் அண்ணா, தவமணி அண்ணா, கீதா எல்லாம் கூட என்னை மாதிரிதான்னு அப்பா எனக்கு தெரியாம போச்சு. முக்கியமா ஷேக் அண்ணா வாதங்கள் அவர் பொய்யா சப்போர்ட் பண்ண மாதிரியே தெரியல.

பவி உங்க கிட்ட மட்டும் சொல்றேன் உண்மையிலேயே காப்பி பண்ணி தான் பா போட்டேன். பட்டிமன்றத்தில் கலந்துக்கனும்னு ஆர்வம், அதே சமயத்தில் நேரமின்மை, வார்த்தைகள தான் காப்பி பண்ணேன். தப்பா இருந்தா சாரி பா.

அப்புறம் பாயிண்ட் பாயிண்ட்டா பேசின நம்ப சுந்தரி அக்காவுக்கும் என் வாழ்த்துக்கள்.

சரி மா, பட்டி முஞ்சாபோற இன்னாத்துக்கு இவ்ளோ பேச்சு அப்படீன்னு யாராவது வரரதுக்கு முன்னாடி, எஸ்கேப்.

இதுவும் கடந்து போகும்.

வாங்க யோகலெக்ஷ்மி உங்களையும் தேடிக்கிட்டு இருக்கேன். அடுத்த பட்டிக்கு நடுவர் தேவை. அரட்டை 33ல் அதுபற்றிய விவரங்கள் இருக்கு. வந்து உங்கள் வசதியையும் முடிவையும் சொல்லுங்கப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

///முக்கியமா ஷேக் அண்ணா வாதங்கள் அவர் பொய்யா சப்போர்ட் பண்ண மாதிரியே தெரியல.///நன்றி யோகலக்ஷ்மி சகோதரி...எனக்கு பட்டிமன்ற தீர்ப்பு முன்பே தெரியும்..இருந்தாலும் எதிரணியில் கலந்துகொண்ட ஒருவரை எதிரியாக நினைத்து எல்லா பதிவுகளையும் இட்டேன்..ஆனால் உண்மையில் அவர் என் இன்னொரு சககோதரி கூட...(ஜஸ்ட் தமாசுதான்.ஒருவேளை இந்த பதிவு பார்த்தா அவங்களே விளக்கமா சொல்லுவாங்க..ஹி ஹி ஹி)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரொம்ப சிறப்பா ரெண்டு பக்கமும் சிண்டு முடிஞ்சி விட்டு பட்டிமன்றத்தை நல்ல முறையில் நடத்திச் சென்றீர்கள். வாழ்த்துக்கள்.

பட்டியில் ஒரு பதிவாவது போடலாம் என நினைத்தேன். ஆனால் பழைய நகைச்சுவை காட்சிகள் சிலவையே தெரியும். புதிய நகைச்சுவையிலும் இங்கு குறிப்பிடவைகளில் பாதிக்குமேல் தெரியாது. எனவே எனக்கு இந்த பட்டியில் வாதாட தகுதி இருந்ததாக உணரவில்லை. மேலும் பட்டி ஏதாவது தொய்வாகச் சென்றிருந்தாலும் வீம்புக்காக ஏதாவது ஒருபக்கம் வாதாடியிருப்பேன். விரு விருப்பாக சென்றுகொண்டிருந்த பிட்டியில் ஒன்றுமே தெரியாமல் இடையில் குட்டையைக் குழப்ப விரும்பவில்லை.

சிறப்பாக நடத்திமுடித்தமைக்கு வாழ்த்துக்கள். தீர்ப்பும் நன்றாக இருந்தது.
பங்குகொண்ட அனைவருக்கும், பட்டியில் தொடர்ந்து கடைசி வரை தன் அணிக்காக போராடிய அனைவருக்கும், முனியம்மாவுக்கும் அவரின் கணவருக்கும் வாழ்த்துக்கள்.

மன்றத்தில் முதல் முறையாகக் கலந்துகொண்டு பட்டியில் அந்தக்கால நகைச்சுவையே என வாதாடிய கவிசிவாவின் அப்பாவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து வரும் பட்டிமன்றங்களிலும் கலந்து கொள்வார்கள் என் நம்புகின்றேன்.

அன்புடன்,
இஷானி

//எதிரணியில் கலந்துகொண்ட ஒருவரை எதிரியாக நினைத்து எல்லா பதிவுகளையும் இட்டேன்..//
நான் சொல்றேன், அது நாந்தான் நாந்தான் நானேதான். இருந்தாலும் இவ்வளவு கூடாது அண்ணா, நான் உங்களை என்ன பண்ணினேன சொல்லுங்க.

அன்புடன்
பவித்ரா

கவிசிவா அவர்களே, என் பெயரை குறிப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி. இப்பத்திக்கு எனக்கு வாதாட மட்டும் தான் தெரியும், தீர்ப்பு வேற யாராவதுதான் சொல்லணும். கல்பனா பொறுப்பை எடுத்துகிட்டு இருக்காங்க, அவங்க கண்டிப்பா ரொம்ப நல்லா செய்வாங்க, அடுத்து பவி நடுவரா இருக்கேன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு அப்புறம் யாரும் மாட்டலேன்னா நான் வரேன்.

இதுவும் கடந்து போகும்.

\\ எதிரணியில் கலந்துகொண்ட ஒருவரை எதிரியாக நினைத்து எல்லா பதிவுகளையும் இட்டேன்..ஆனால் உண்மையில் அவர் என் இன்னொரு சககோதரி கூட..//

பவி அது நான் தான்.என்னை தான் ஷேக் அண்ணா follow பண்ணி பதில் கொடுத்தார் என நினைக்கிறன்.அது யார் என சொல்லுங்கள் சகோதரரே

இதுக்கு ஒரு பட்டிமன்றம் வைக்கலாம் போலருக்கே :-)

கவி வாங்க. நடுவர் யாருன்னு தேர்ந்தெடுக்கனும்

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்