பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ராதா... தாமதமா சொல்றேன்... பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

ரொம்ப அருமையா கொண்டு போயிருக்கீங்க பட்டியை. அழகு தலைப்பு... எல்லாரும் நல்லா பேசி இருக்காங்க. நான் தான் மிஸ் பண்ணிட்டேன் :(. எப்படி தீர்ப்பு சொல்லிருப்பீங்கன்னு தலைப்பை படிச்சதும் கொஞ்சம் குழம்பிட்டேன்... அப்படி ஒரு கஷ்டமான தலைப்பு. தீர்ப்பு சொன்ன விதம் கடைசியா இருக்கும் சில வரிகள் மனதை தொட்டது. சிறப்பா நடத்தினதுக்காகவும், நல்ல தீர்ப்பு சொன்னதுக்காகவும் வாழ்த்துக்கள் பல.

பங்கு பெற்ற தோழமைகள் அனைவருக்கும் நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இங்கு பட்டிக்கு வாழ்த்திய சுந்தரி, ஆமினா, இஷானி, யோகலஷ்மி மற்றும் வனிதா மேடம் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

பட்டி தொடங்கிய 2 நாட்களுக்கு பின்னர் பெரும்பாலானோர் அந்தக்காலத்திற்கே வாக்களித்தனர். இந்தக்காலம் பற்றி கருத்து சொல்ல வந்தவர்கள் மிகக் குறைவே. அதனால் பட்டியை பாதியிலேயே முடித்துவிடலாம் என்று எண்ணினேன். அதனால் தான் பட்டியில் ஒரு பதிவு போட்டேன். அதற்கு யாரும் பதில் கூற வில்லை. பிறகு நேரடியாக அட்மின் அவா்களிடமே கேட்டேன். அவா்கள் தான் வனிதா மேடம் ஊரில் இல்லை என்றும் சிறிது நாள் பொறுத்திருந்து பார்க்கவும் என்றும் கூறினார். அதனாலேயே மேலும் சிறிது நாள் போகட்டும் என்று விட்டுவிட்டேன். கடைசி வரை இந்தக்காலத்திற்கு போராடியவர்கள் முடிவு தெரிந்தே போராடினோம் என்று கூறினர். அவா்களின் வாதங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி. இங்கு அந்தக்காலம் தான் சிறந்தது என்று போராடிய அனைவருமே இந்தக்கால நகைச்சுவையை விரும்புபவர்கள் தான்.

எனினும் பட்டியை சிறப்பாக நடத்திச்சென்ற தோழர் தோழிகள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

முயர்ச்சியும் பொறுப்பும் ...... என்ரும் வீண்போகாது ராதா சிறப்பான தீர்ப்பு, நாங்கள்ளாம் நின்னு ஜெயிப்பவர்கள். எதிரணியினர் எங்கள் மூளையை நன்றாக வேளைசெய்ய வைத்தனர் நன்றி...

மு(அ)யர்ச்சியா?... நீங்க வேற ரேணு.. ஒரே அ(மு)யர்ச்சி தான் போங்க.. ஆனா நல்லபடியாக முடிந்தது. அதுவே கின்னஸ் சாதனை படைச்ச மாதிரி ஆகிடுச்சு...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்