பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நித்யா அந்தகாலத்துல பல நகைச்சுவைப்படங்கள் சூப்பர்ஹிட் ஆகிருக்கு… அவை எல்லாம் ரசிக்கும் வகையிலும் அனைவருக்கும் புரியும் வகையிலும் இருக்குனு சொல்றாங்க.. உண்மைதானங்க.. எதிரணி இதுக்கு என்ன சொல்லவர்றீங்க…
ஷேக் அண்ணா சொல்றதும் நியாயம் தானே… இப்ப டிவி ல அந்தகாலத்து படத்தையும், இப்போ வடிவேலு செந்தில் கவுண்டமணி காமெடியும் போட்டா எல்லாரும் இந்த காலத்துக்காமெடி தான விரும்பி பாக்குறாங்க.. அதுலயும் அடிவாங்குறது ஒரு தியாகம்னு சொல்றாங்க.. தான் அடி வாங்கினாலும் மத்தவங்கள சிரிக்க வைக்க முடியும்னு சொல்றாங்க… எதிரணி சீ்க்கிரம் வாங்க…
இன்னாமே மினியம்மா… இந்த காலத்துல நிலா சோறு ஊட்டினா பிள்ளைங்க சாப்பிடுமா?.. ஆனா டிவில வடிவேலு காமெடி போட்டா என்னமா பாத்துகினே வேகமா சாப்பிடுதுங்க.. கரெக்கிட்டுதாம்மே.
ரேணு அக்காலத்திற்கு வெற்றி முரசே கொட்டிட்டாங்க… எதிரணி எதிர்முரசு கொட்ட வாங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கொஞ்சம் இருங்கோ!

எங்க கர்ம வீரர் காமராஜர் வந்துருக்கார்!

‘ என்னா இங்க நடக்குதுங்கறேன்!

நமக்கு எப்போவுமே வடி வேலு காமெடிதான் புடிக்குங்குர்ரேன்!

சினிமால நடிக்கறதே கஷ்டம்ங்கறேன்!

அதுலேயும் எப்போவும் அடி வாங்கி நடிக்கறது ரொம்ப கஷ்டம்ங்கரேன்!

அதுவும் நல்லவருனூ சொன்ன ஒரே காரணத்துக்காக அவரு அடி வாங்கினதை பாத்து வயரு குலுங்க சிரிச்சு நமக்கு வயத்து வலி வந்துடுச்சுங்கறேன்!

எல்லா படத்துலயும் அவரு நடிக்கரத காட்டியும் அடி வாங்குவதே அதிகம்ங்கறென்!’’

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Ilaimarai kaayaaga irukkumvarai rasikka mudikirathu. Velichcap paduththinaal vakkiramaagavum,salipputhattuvathaagavum maarividukirathu. 10maatha kulantha paarkkalaam onrum puriyaatha vayathu valinadgththuuathu nam kadamaithaane?

Navarasaththai nadanaththil mattumallaamal Nagaicuvaiyilum kaauiyavarkal NSK,NAKESH avarkal.sarvar suntharaththin' vaayppu ketkum orukaatci pothaathaa? Pesaamal kulanthaikalai sirikka vaikka? Adivaanguvathu mattume kamadi aakaathu.

நவரசத்தை நாட்டியத்தில் மட்டும் தான் காட்ட முடியுமா? நகைச்சுவையிலும் காட்ட முடியும் என்று நிருபித்தவர்கள் நம்ம நாகேஷ் மற்றும் கலைவாணர் அவா்களே என்று ரேணு சொல்லிட்டாங்க....எதிரணி என்ன சொல்லப்போறீங்க. இந்தக்காலத்துல நவரசத்தை யாரும் காட்டவில்லையா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் என்னோட பெயர் கலைவாணி. என்னோட சப்போர்ட் இக்கால நகைசுவைக்கு தான். அந்த காலத்து நாகேஷ் மற்றும் கலைவாணர் போல இந்த காலத்து வடிவேலு மற்றும் விவேக் இருக்காங்க

வாங்க கலைவாணி
இந்த காலத்து நகைச்சுவைக்கு சப்போர்ட் பண்றீங்க.. வெறும் சப்போர்ட் மட்டும் போதாது.. எதிரணிக்கு பதிலடி கொடுக்க சரியான வாதங்களோட வாங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எதையுமே பிளான் பண்ணி பண்ணனும். பிளான் பண்ணாம செஞ்சா இப்படித்தான் எதிர் அணியினரே. அய்யோ... அய்யொ...

அன்புடன்
THAVAM

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நடுவர் அவர்களே, மற்றும் இந்த பட்டியில் கலந்து சிறப்பிக்க வந்த என் பாசத்திற்குரிய தோழர் - தோழிகளே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம். இன்றைய பட்டிமன்றத்தில் நான் எடுத்துக் கொண்டு வாதாடப் போவது நகைச்சுவையில் சிறந்தது அக்காலமே என்ற தலைப்பில். என் வாதங்களுடன் வருவேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தவமணி அண்ணா அப்ப ப்ளான் பண்ணி வந்திருக்கீங்க இக்கால நகைச்சுவைதான் சிறந்தது என்று... என்ன எதிரணி ப்ளான் பண்ணாம பண்றீங்களா??.. சீக்கரம் வந்து பதில் சொல்லுங்க..

கல்பனா அக்காலத்திற்கு வாதாட போறீங்களா... வாங்க வாங்க.. ஆமாம் அது என்ன அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நடுவர்..... இப்படி எல்லாம் சொல்லி காக்கா பிடிக்க முடியாது ஆமாம்... சீக்கிரம் வாத்தோட வாங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்