பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வணக்கதிற்குரிய நடுவர் அவர்களே
என்னுடைய ஓட்டு அக்கால நகைச்சுவைக்கே, தலைப்பை பார்த்ததுமே அக்காலம் என்றுதான் தோன்றியது. அந்த காலத்தில் நகைச்சுவையை பொழுதுபோக்கிற்காக மட்டுமில்லாமல் அதில் மக்களை சென்றடைய நல்ல கருத்து இருக்கும் நடுவர் அவர்களே!

சந்திரபாபு அவர்களுடைய காமெடி பத்தி சொல்லவா வேணும். குழந்தைகள் முன்னால் வடிவேல் காமெடிய போட்டா சிரிக்கதான் செய்வாங்க, அவங்க முன்னாடி நீங்க யார்க்கிட்டயாவது அடி வாங்கினாலும் அவங்க சிரிப்பாங்க.

நகைச்சுவை சிரிப்பதற்காக மட்டுமல்ல நடுவர் அவர்களே, சிந்திப்பதற்காகவும் தான். இந்த கால நகைச்சுவையில் ஆபாசம் தான் அதிகம் கலந்துள்ளது. இதை பார்த்துதான் அவர்கள் கெட்டுபோகின்றார்கள்.

சிறந்தது அக்காலத்து நகைச்சுவையே.

மீண்டும் வருவேன்

அன்புடன்
பவித்ரா

//நடுவர் அவர்களே..ஒன்று செய்யலாம்...அக்கால படத்தையும் இப்போதைய வடிவேல் மற்றும் கவுன்டமணி படத்தையும் குழந்தைகள் மற்றும் இக்கால பெரியவர்கள் முன்னால் போட்டு காண்பித்தால்..கண்டிப்பாக எல்லோரும் இக்கால நகைச்சுவையைதான் விரும்புவார்கள்...அக்கால நகைச்சுவையை விரும்புகிறவர்கள் என் அப்பா,அம்மா,முப்பாட்டன் காலத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அக்கால நகைச்சுவையை ரசிக்கமுடியும்!//

அக்காலத்திரைப்படம் தொலக்காட்சியில் வந்தால் எந்தக்குழந்தைதான் பார்கின்றது கருப்புவெள்ளை படம் வைத்தாலே உடனே பசங்க ரிமோட்ட எடுத்து மத்திடுராங்க அவர்கள் அதை பார்க்க ஆரம்பிக்கவே இல்லை பின்பு எங்கிருந்து ரசிப்பது..

//அடி வாங்கி சிரிக்க வைப்பது என்பது ஒரு தியாகம்!தன் உடம்பில் ரணங்களை சுமந்தாலும் மற்றவர்கள் சிரிப்பதற்க்காய் அடி வாங்குவது ஒரு கலை!தியாகம்//

மற்றவர்களை அடித்து அதில் நாம் சந்தோஷப்படுவது என்ன சிறிப்பு வேண்டிகிடக்கு வளரும் குழந்தைகளுக்கும் இப்படி ஒரு சந்தோஷத்தை தந்தால் அவர்களும் மற்றவர்களை கஷ்டப்படித்தி அதில் சுகத்தைகாண்பார்கள். இது சரியா?...........

அன்புடன்
நித்யா

அடடா பவி பாத்ததுமே அக்காலம் தான சிறந்ததுனு தோனிடுச்சா?
//நகைச்சுவை சிரிப்பதற்காக மட்டுமல்ல நடுவர் அவர்களே, சிந்திப்பதற்காகவும் தான்// எதிரணி என்ன சொல்லப்போறீங்க பவித்ராவோட வாதத்துக்கு...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆமாம் ஆமாம்.. கருப்பு வெள்ளை படத்தை வைத்தாலே பிள்ளைகள் பாக்கமாட்டேங்குதுங்களே... நித்யா சொல்றது சரிதானே.. பார்த்தா தானே ரசிக்க முடியும்....

//மற்றவர்களை அடித்து அதில் நாம் சந்தோஷப்படுவது என்ன சிறிப்பு வேண்டிகிடக்கு வளரும் குழந்தைகளுக்கும் இப்படி ஒரு சந்தோஷத்தை தந்தால் அவர்களும் மற்றவர்களை கஷ்டப்படித்தி அதில் சுகத்தைகாண்பார்கள். இது சரியா?...........//

நித்யாவின் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கப்பா எதிரணியினரே...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

Ikkaalaththavar anaivaraiyum samaalikka(iidukatta)NSK oruvare pothum. Naangallaam asaraama adippavarkal..

அந்த கால நகைசுவைல கருத்து இருக்கும். ஆனா அத எல்லாராலேயும் உடனே புரிந்து கொள்ள முடியாது . இக்கால நகைச்சுவை யதார்த்தமா இருக்கும் , அன்றாடம் வாழ்கையில் நடப்பவை. அதுமட்டுமல்ல டிவி பார்ப்பது எதுக்கு கொஞ்ச நேரம் ஜாலியா பொழுது போக்க அத சந்தோசமா செய்வோமே

“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “//

நகைச்சுவை உணர்வு அக்காலத்திலும் இருந்தது. இன்றும் இருக்கிறது.
யாரும் மறுக்கமுடியாத உண்மைதான்.

ஆனால் சிறப்பாக இருந்தது எப்போது?
அக்காலத்தில்தான் என்பது என் கட்சி.

இப்ப கட்சியை சொல்லிட்டேன்.
விரைவில் விரிவான பதிவைப்போடறேன்.

தோழிகளோட வாதங்களையெல்லாம் பாத்துட்டு பதிவு போடறேன்.
அன்புடன்
ஜெமாமி

கலைவாணி சொல்றதும் நியாயம் தான.. பொழுது போக்குக்கு தான டிவி பாக்குறது. அத சந்தோஷமா பாப்போம். அது இக்கால நகைச்சுவைல தான கிடைக்குது.. எதிரணி என்ன சொல்லப்போறீங்க

வாங்க ஜெயந்தி மாமி.. நீங்க அக்காலத்திற்கு ஓட்டுப்போட்டிருக்கீங்க.. ஓகே விரைவில் வாதங்களோட வாங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் பவித்ரா ராம் நீங்கள் என்ன ஈரோடு, திருச்செங்கோடு என்று எங்கள் ஊர் பெயர்களை சொல்றீங்க நான் திருச்செங்கோடுப்பா நீங்கள் எந்த ஊர்.உடனே பதில் போடுங்கப்பா ஆவல் தாங்க முடியலை
எனது கருத்து அக்கால நகைச்சுவையே ஏனென்றால் இப்பொழுது ஒரே அடி, கடி, இரட்டைஅர்த்தம், இவைகள்தான் ஆனால் அக்காலத்தில் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தார்கள்

வாங்க அனிதா அக்கால நகைச்சுவை சிறந்ததுனு சொல்லிருக்கீங்க.. ஓகே வாதங்களோட வாங்க..
ஆனால் அரட்டை இங்கு வேண்டாமே ப்ளீஸ்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்