பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Vaatham orupuramaaga selkirathu.appothu sirippukku enru thani trek amaiththa padgngal migak kuraivu.eppothu athuve vaadikkai aagivittathu.oremaathiriyana padangalai evvalaùthaan poruththu paarppathu?aluththuvidum,ore saappaattai unndaal naa thuvanduvidume athu pola manamum aluththu vidum

ப்ளான் பண்ணாம எதுவும் பண்ணக்கூடாது, இப்பவே கண்ண கட்டுதே, என்ன கொடுமை சார் இது, இதெல்லாம் நாம் யூஸ் பண்ணிட்டு இருக்கோம், அதுக்காக இந்த காலம்தான் சிறந்ததுன்னு சொல்ல முடியாதே.

அந்த கால படங்கள் வந்த போது, எல்லாரும் தியேட்டர்ல போய்தான் படம் பார்க்க முடிந்தது, இப்போ இருக்கிற மாதிரி டிவியெல்லாம் ஜாஸ்தி கிடையாது. ஆனா, இப்போ காமெடிக்குன்னே தனியா சேனல் இருக்கு, அதில காமெடிய மட்டும் கட் பண்ணி போடறதுனாலதான் இந்த மாதிரியெல்லாம் குழந்தைகளிடம் பாப்புலரா இருக்கிறது.

ஒத்துக்க்றேன், நகைச்சுவை கொஞ்ச நேரம் ரிலேக்ஸா இருக்கதான் என்று, அதற்காக அவற்றை சிறந்ததுன்னு சொல்ல முடியுமா? அந்த காலத்தில் எத்தனை நகைச்சுவை, திருவிளையாடல் படத்தில் நாகேஷ் காமெடி மறக்க முடியுமா? அது எத்தனை அறிவுப்பூர்வமான காமெடியில்லையா?

சபாஷ் மீனா, கலாட்டா கல்யாணம், ஜம்புலிங்கமே ஜரா ஜரான்னு ஒரு பாடல் வருமே அந்த படம், அந்த காமெடிக்கெல்லாம் சான்ஸே இல்ல, இவற்றை மறக்க முடியுமா?

பாவம் எதிரணியினர் இந்தமாதிரி நல்ல காமெடியெல்லாம் பார்த்ததே இல்ல போல.

பாலையா எத்தனை பெரிய நடிகர், தில்லானா மோகனாம்பாள்ல பாலையாவோட காமெடிய பார்த்து சிரிக்காதவங்க இருக்க முடியுமா நடுவர் அவர்களே! கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

மீண்டும் வருவேன்.

அன்புடன்
பவித்ரா

ஹலோ அனிதாமேடம் சிந்திக்க வைக்க நிறைய ப்ரோக்ராம் இருக்கு. காமெடி பார்த்து சிரிக்கத்தான். சரி நான் ஒன்னு கேட்குறேன் கேட்கிறேன் . இங்க எத்தனை பேரு அக்கால நகைசுவையை அதுல இருக்கிற கருத்த கேட்டு அது படி நடக்குறீங்க

ஹாய் கலைவாணி சிந்திக்க வைக்காவிட்டாலும் பரவாயில்லை சிரிக்க வைக்கிறேன் என இரட்டை அர்த்தம் அல்லவா வருகிறது

Nii namathu anikku balam serththu vittiirkal. Villan nadikar Nambiyar than villath thanaththilum sirippu varavalaithtiruppare'NAANGALUM HEROTHAAN' Padaththil.NAKESH eetra tharumi vedam marakka mudiyuma? Ethi aniyinar verum poluthupokkaaga mattume paarppavarkal,nammaippol sinthippavarkal illaipola...

இரட்டை அர்த்த வசனங்கள் குழந்தைகளுக்கு புரியவா போகிரது என்கிறார்கள் எதிரணியினர்! குழந்தை புரியாமல் நான்கு பேர் இருக்கும் இடத்தில் நகைச்சுவை என்று நினைத்து அந்த வசனத்தை சொன்னால் நன்றாகவா இருக்கும்? அக்கால நகைச்சுவை குழந்தைகளை சென்றடைகிறதா என்கிறார்கள். பெரியவர்கள் இரட்டை அர்த்த வசனங்களை ரசிப்பதை தவிர்த்து தரமான அந்த கால நகைச்சுவையை பார்த்தால் குழந்தைகளும் பார்ப்பார்கள். அது அவர்களைச் சென்றடையும். அத விடுத்து அபத்தங்களை மட்டுமே குழந்தைகளுக்கு காண்பித்தால் குழந்தைகளுக்கு அது மட்டுமே சென்றடையும்.

அடி வாங்கி தியாகம் செய்கிறார்களாம். நம் குழந்தையும் நான்கு பேர் எதிரில் சிரிக்க வைக்கிறேன் என்று இன்னொருவனிடம் அடிவாங்கினால் ரசிப்போமா? இப்படி வன்முறையை பிஞ்சு மனதில் விதைத்துதான் ரசிக்க வைக்க முடியுமா?

இந்த கால நகைச்சுவைதான் சிறந்ததுன்னா எதுக்குங்க கருப்புநாகேஷ், சின்னக்கலைவாணர்னு பட்டமெல்லாம்? அந்தகால நாகேஷ் கலைவாணரின் நகைச்சுவை சிறந்ததாக இருப்பதால்தானே அவர்களின் பெயர்களை இவர்களுக்கு பட்டம்னு சொல்லிக் கொடுக்கறீங்க இல்ல அவங்களே போட்டுக்கறாங்க!

சிரிப்பின் வகைகளை சிரிச்சுக்காட்டி நம்மை சிரிக்க வைத்தவர் கலைவாணர்! இன்னிக்கு சின்னக்கலைவணர்னு சொல்லிக்கிட்டு கருத்து கந்தசாமியா ஒருத்தர் பேசியே கொல்றார். சிரிப்பு வரலை எரிச்சல்தான் வருது ஏண்டா அந்த நல்ல நகைச்சுவை நடிகரின் பேரைக் கெடுக்கறீங்கன்னு.

நடுவரே இன்னும் வருவேன் வாதத்தோடு :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பட்டிமன்றத் தோழிகள் அனைவருக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்.. தயவு செய்து பட்டியில் யாரும் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு எழுத கூடாது. அது பட்டிமன்ற விதி முறை. அதனால் அவா்களின் வாதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பதில் பதிவு போடவும்.
அதோ போல் அரட்டையும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்..
நன்றி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

http://www.arusuvai.com/tamil/node/13676

இந்த லின்க்ல போய் பாருங்க பட்டியின் ரூல்ஸ் இருக்கிறது.

நடுவரே நீங்க இல்லை என்றுதான் என்னுடைய இந்த பதிவு. தயவுசெய்து பட்டிமன்றத்தில் விதிமுறைகள் தெரியாதவர்கள் மேலே உள்ள லின்க் போய் பார்த்துட்டு வந்து உங்க பதிவுகளை போடவும்.

நடுவரே மீண்டும் ஒரு முறை குறிக்கிட்டதற்கு மன்னிக்கவும்.

அன்புடன்
பவித்ரா

நானும் பவியோட வாதத்தை எற்க்கிறேன் நம்ப என்.ஸ்.கிருஷ்ணண், தங்கபாலு, ஏ.கருணானிதி, நாகேஷ், பாலையா,எம்.ஆர்.ராதா..........இப்படி ஆண்கள் மட்டும் இல்லாமல் அந்தகாலத்தில் கலக்கிய நமது ஆச்சி மனோரம்மா இடத்தை இன்னும் யாரு பிடிக்கவில்லை என்பதே உண்மை.

அன்புடன்
நித்யா

Padaththin kathai thaniyaaga, siripputhaniyaaga irunthaal rasikka mudiyaathu.ippothu varuvathu appadiththan. Aanal,sirippil vendiya kaatcikalai mattum vaiththu kathaiyodu onriya padangalai anthakaalaththil paarkalaam.EVARAIYUM sirikka vaikkum samayogitham avarkalukku irunthathu. Ippothayavarkalukku mulam eluthik kuduththaal jaan pesave 4take vaanguraanga

மேலும் சில பதிவுகள்