பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நடுவர் அவர்களே அக்காலத்து நகைசுவையே சிறந்தது. //கருப்பு வெள்ளை
படத்தை வைத்தாலே பிள்ளைகள் பாக்கமாட்டேங்குதுங்களே.// ப்ளாக்&வொயிட் படம் வந்தாலே பொறுமையில்லாம நாமே ரிமோட்ட எடுத்து மாத்திடுவோம். இதுல பிள்ளைகளுக்கு எங்க பொறுமை இருக்க போகுது. நாம தான் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லனும் இது நல்ல படம், நல்ல காமெடி இருக்கு என்று. இப்போ உள்ள காமெடில யாராவது ஒரு ஆள் மெயின் கேரக்டர் இருந்துட்டு சைடு கேரக்டர் நடிக்கரவங்க ஒருத்தராவது அடிவாங்கமா நடிக்கமாட்டுறாங்க. அதுலயும் புரியாத கெட்ட வார்த்தைகளும் வந்துவிடுகிறது. இந்த காலத்துல என்ன நகைச்சுவை இருக்கு? என்ன கருத்த சொல்ல வர்றாங்க.

Padaththin kathai thaniyaaga, siripputhaniyaaga irunthaal rasikka mudiyaathu.ippothu varuvathu appadiththan. Aanal,sirippil vendiya kaatcikalai mattum vaiththu kathaiyodu onriya padangalai anthakaalaththil paarkalaam.EVARAIYUM sirikka vaikkum samayogitham avarkalukku irunthathu. Ippothayavarkalukku mulam eluthik kuduththaal jaan pesave 4take vaanguraanga

கவிதைப் போட்டி முடிவு அறிவிச்சிட்டாங்களாமே.. முகப்புல லிங்க் போட்டு இருக்காங்க..

(சும்மா ஒரு அனொன்ஸ்மெண்ட்க்குதான்.. குறுக்கே வந்ததுக்கு மன்னிச்சிடுங்க.. :-))

எதிரணி சொல்லுங்கப்பா திருவிளையாடல் காமெடிக்கு ஈடு இணை உண்டா? எத்தனை அறிவுப்புர்வமான கமெடி?..
// அடி வாங்கி தியாகம் செய்கிறார்களாம். நம் குழந்தையும்……….// கவிசிவா சொல்றதும் நியாயம் தான.. பிஞ்சு மனசுல நஞ்சு விதைக்கலாமா?
ஆச்சி மனோரமா இடத்தை யாரும் பிடிக்கலையேப்பா? நித்யா சொல்றதும் சரிதான.. எதிரணி சீக்கிரம் இவுங்க கேள்விகளுக்கு பதில் கொல்ல வாங்க

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

//இங்க எத்தனை பேரு அக்கால நகைசுவையை அதுல இருக்கிற கருத்த கேட்டு அது படி நடக்குறீங்க//
பாமா விஜயம் படத்தை பார்த்தீர்களா அதில் சொல்லவரும் கருத்தை(சிக்கனம்) அழகா, நகச்சுவையுடனும் சொல்லிருப்பாங்க அதை நாம் இப்போ அதை கடைபிடிப்பதில்லையா என்ன அது நாம் வாழ்க்கையில் நாம் செய்கிறோம் இல்லையா? நடுவர் அவர்களே

அன்புடன்
நித்யா

வினோஜா அக்காலத்திற்கு ஓட்டு போட்டிருக்கீங்க... அதானே நமக்கே மொதல்ல பொறுமை இல்லையே.. வாங்கப்பா எதிரணி.. என்ன பண்றீங்க.. அக்காலம் மெஜாரிட்டி ஆகிட்டே போகுதே....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

Nallathu irukkara idamthaan pechcuvarum. Ethir anila enna irukku pesa? Onnumillaathathukku sirikkuraanga. Appadi sirichcaa Maadi Viittu Maathula vara paiththiyampaanga.

எங்க வடிவேலு எவ்ளோ நல்ல கருத்தை சொல்லாம சொல்லிருக்கார்!

ஒருத்தன் அடி வாங்கினாலும் தப்பில்லை ஊர்ல இருக்கறவா நன்னாருக்கனும்!

அவர் காமெடி பன்னிருப்பார் பாருங்கோ!

முக்குக்கு முக்கு வெச்சு அடிச்சவாள்ளாம் பெரியாளா ஆயுடுவா!

அதனால அவர் ரொம்ப ராசியானவரா ஆயுடுவார்!

அவ்ர் ’ராசி’ அப்படி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Kaiyila Vaanginen Paiyila Podale Kaasu pona idam theriyala' paatla varumailayum ulaikkanumnu nagaicuvaiyoda manam valikkaamal solvaar NSK. But namma vadivelu adi uthai vaanginaalum paravaalla enna velavaanga paakkarayaanu oru siin varum. Ithai paaththu namma pasanga pesi somperiyaana niinga rasippingala?4 poduvingalla?

பட்டிய ஆரம்பத்துல இருந்து படிச்சுட்டு இருக்கேன்.
ஆனா உங்க பதிவைமட்டும் நான் படிக்கல. படிக்கமுடியல சாரி. எவ்வளவு பேர் படிக்கறாங்கனும் தெரியல. உங்க கருத்து இப்படி வேஸ்ட் ஆகலாமா.
கொடுக்கற வாதத்தை எல்லாம் குறிச்சு வைச்சு உங்களுக்கு தமிழ்ல டைப் பண்ண முடியும்போது போடலாமே.

நடுவர் அவர்களே மன்னிச்சுக்கோங்க....

அப்புறம் நடுவருக்கு பட்டிய சிறப்பா நடத்துறதுக்கு ஸ்பெசலா வாழ்த்துக்கள்!

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்