பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஜெயலஷ்மி உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
ரேணு வெளியுரில் இருப்பதால் மொபைலில் இருந்து அடிப்பதால் இப்பிரச்சனை..
வெறும் வாழ்த்துக்கள் மட்டும் போதுமா?.. எந்த அணினு சீக்கிரம் முடிவு செய்து வாங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இக்கால நகைச்சுவை நடிகர்கள் நாம் இயல்பாக சொல்லி வரும் வார்த்தைகளை பயன் படுத்துகிறார்கள் என்று ஒரு அருமையான வாதத்தை முன் வைத்துள்ளனர். நடுவர் அவர்களே இதிலிருத்து என்ன தெரிகிறது? நாம் சாதரணமாக பேசக் கூடிய வார்த்தைகளையே நகைச்சுவையாக மாற்றுகிறார்களே, அவர்கள் கில்லாடிகள் தானே?. எவன் ஒருவனை பார்த்த உடனே சிரிப்பு வருகிறதோ அவனே நல்ல நகைச்சுவையாளன். எதிர் அணியினரை போன்று நாங்கள் அக்கால நகைச்சுவையை குற்றம் சொல்ல வில்லை. நகைச்சுவைல என்னங்க அர்த்தம் வேணும் கேட்டதையும் சிரிப்பு வரனும். அதுதானே நகைச்சுவை. எதிர் அணியினர் அதில் போய் கருத்து வேண்டுமாம். கருத்து கேட்டா சிரிக்க முடியுங்களா?. இரட்டை அர்த்தம் உள்ள வசனம் பேசுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர், நீங் ஏன் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கறீங்க அப்போ உங்க மேலதான் தவறு. உங்க மேல தவறை வைத்துக் கொண்டு அடுத்தவனை ஏன் குற்றம் சொல்கிறீர்கள். தப்பான கண்ணோட்டத்தில் பாக்காதீங்க. நாங்க தப்பான பார்வை பார்ப்பதில்லை நடுவர் அவர்களே. இரண்டரை மணி நேரம் படத்தில அவங்க சொல்ற கருத்தையே தாங்க முடியல... இதுல நகைச்சுவைலயும் கருத்து வேணுமாம். பாவங்க எதிர் அணியினர். அவங்களுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்க நடுவர் அவர்களே.

அன்புடன்
THAVAM

நகைச்சுவைல ஏங்க அந்த காலத்து நகைசுவைய பத்தி இன்னைக்கு நாம் பெருமையா பேசுறோம். ஏன்னா, அதுல ஒரு தெளிவு இருந்தது, கருத்து இருந்தது, நகைச்சுவையும் இருந்தது. அந்த காலத்து நகைச்சுவை கலைஞர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நகைச்சுவை திரைப்படங்கள் பண்ண மாட்டார்கள். நாம சொல்ல வர்ற கருத்து எந்த அளவுக்கு மக்களை சென்றடையுதுங்கறதுல மிகவும் உறுதியாக இருந்தார்கள். "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ" என்கிற பொன்மொழிக்கு ஏற்ப பழைய திரைப்பட நகைச்சுவைகளாக இருந்தாலும் அவற்றிற்கிருந்த மதிப்பு சிறிதும் குறையாமல் இன்றும் பொலிவுடனே விளங்குகிறது. நாங்க பேசித்தான் உங்களை சிரிக்க வைக்கனும்னு அவசியமில்லை பேசாமலே சிரிக்க வைப்போன்னு மக்களின் மனதில் பெரிய சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் சார்லி சாப்ளின் அவரை யாராவது மறக்க முடியுமா?

அந்தக்காலத்து நகைச்சுவை கலைஞர்கள் பணம் பையை நிறைத்தால் மட்டும் போது என்று நினைக்காமல் மக்களைப் பற்றியும் சிந்தித்து தான் நகைச்சுவை செய்தார்கள். இந்த கால நகைச்சுவை கலைஞர்கள் ஸ்கிரிப்ட் என்ன என்று கூட படிக்காமல், அது தன்னுடைய கவுரவத்தை தூக்கி விடுமா? இறக்கி விடுமா? என்றும் யோசிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு நடித்துவிட்டுச் செல்கின்றனர். அர்த்தமற்ற நகைச்சுவை. திரைப்படங்களில் தன்னோடு நடிக்கும் சக நடிகரை அவிச்ச முட்டை தலையா, அடுப்பு வாயா, தேங்காய் மண்டையா இதுபோன்று ஏக வசனத்தில் பேசுவார் இதற்கு பெயர் காமெடியாம். "வருவேன்ன்ன்ன்ன்ன் ஆனா வரமாட்டேன்" இதுல இருக்கும் அருமையான கருப்பொருள் என்ன என்று சொல்லுங்கள் எதிரணியினரே ! இதுபோன்ற அர்த்தமற்ற நகைச்சுவையை எங்களின் அந்தகால நகைச்சுவை நடிகர்களுக்கு பண்ணத் தெரியாது. பண்ணவும் மாட்டார்கள்.

"வந்துட்டான்யா, வந்துட்டான்" இது இந்த கால வாண்டுகள் பெரியவர்களை பார்த்து பேசும் டயலாக். இந்த கால சிறுவர்கள் இக்கால நகைச்சுவையால் சீரழிந்து போயுள்ளனர். அந்த காலத்திலும் நகைச்சுவை படங்கள் நிறைய வந்தன அவற்றை பார்த்து அக்கால சிறுவர்கள் சீரழிந்து போயிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த காலத்துல அறுத்து விட்ட கோழி மாதிரி கையை காலை இழுத்துக்கொண்டு பண்ணால் தான் காமெடி வரும் என்று பண்ணுகிறார்கள். அந்த காலத்தில் தலைமுடி அசைவை மட்டுமே வைத்து காமெடி செய்ய முடியும் என்று சாதித்து காட்டியவர் எம்.ஆர். ராதா அவர்கள். அடுத்தவனை அடி கொடுத்து துன்புறுத்தி காமெடி செய்கிறார்கள். ஆனால் அந்தகால நடிகர்கள் கஷ்டத்தை தாங்கள் சுமந்துக்கொண்டு அடுத்தவருக்கு மகிழ்ச்சியை மட்டுமே தந்தனர். தங்களுடைய நகைச்சுவையான நடிப்பில் நாட்டுப் பற்றையும் கலந்து தந்தனர்.

அந்தக்கால சந்திரபாபு மற்றும் நாகேஷை போன்று வில்லை போல உடல் வளைத்து நடனம் ஆடக்கூடிய காமெடி நடிகர்கள் இப்போது உண்டா சொல்லுங்கள் பார்க்கலாம். பெண் சிவாஜி என்று வர்ணிக்கப்படும் ஆச்சி மனோரமா பண்ணாத வேடங்கள் கிடையாது. அவரை அடிச்சுக்க இப்ப யாராவது இருக்காங்களா சொல்லுங்க. இப்ப வரும் காமெடி நடிகர்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் போன்றவர்கள் அவர்கள் நகைச்சுவை நடிப்பு ஒரு நாளோடு முடிந்து போகும் அதில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை. ஆனால் அந்த கால நகைச்சுவை நடிகர்கள் காலத்தினாலும் அழியாத கல்வெட்டுக்கள். தங்களின் பண்பான, தரமான நடிப்பால் இன்றும் நம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்கள்.

மீண்டும் வருவேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தவமணி அண்ணா தன்னோட கருத்தை ரொம்ப தெளிவா சொல்லிட்டாரு...

///இரண்டரை மணி நேரம் படத்தில அவங்க சொல்ற கருத்தையே தாங்க முடியல... இதுல நகைச்சுவைலயும் கருத்து வேணுமாம்.///

எதிரணியினரே படத்துல மத்தவங்க சொல்ற கருத்தே தாங்க முடியல... இதுல காமெடியனும் கருத்து சொன்னா என்னங்க அர்த்தம்... நாம என்ன கருத்து கேக்கவா படத்துக்கு போறோம்.. ஜாலிக்கு தான படத்துக்கு போறோம்....

சீக்கிரம் வந்து இதுக்கு பதில் சொல்லுங்க.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

////அந்தக்காலத்து நகைச்சுவை கலைஞர்கள் பணம் பையை நிறைத்தால் மட்டும் போது என்று நினைக்காமல் ................ அருமையான கருப்பொருள் என்ன என்று சொல்லுங்கள் எதிரணியினரே///
கல்பனா ரொம்ப சிறப்பா தன்னோட வாதத்தை சொல்லிட்டாங்க... எதிரணி பதில் சொல்லுங்க...

சார்லி சாப்ளின்-க்கு ஈடு உண்டா? அவரை மறக்க முடியுமா?....
ம்ம்ம் கல்பனா ஆவேசமா தன்னோட நீண்ட வாதத்தை கொடுத்துட்டாங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நடுவர் அவர்களே,
நாங்களும் ஒண்ணும் எதிரணியினரையோ அல்லது இந்த கால நகைச்சுவையையோ குத்தம் சொல்லவில்லை, நகைச்சுவை போட்டா நாங்களும் சிரிக்கதான் செய்வோம்.நீங்களே சொல்லுங்க, எதிரணியினர் பார்த்ததே இல்ல போல, இரட்டை அர்த்த வசனமுல்ல காமெடிகளை, ஒரு சின்ன பையன் இன்னொரு குட்டி பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுப்பதெல்லாம் காமெடியா? ஒரு படத்தில் சந்தேகம் கேட்கும் பையனையும் பொண்ணையும் ஒரு ரூம்ல போட்டு அடைத்து, காமெடிங்கற பேர்ல ஒண்ணு பண்ணுவாரே அதுக்கு பேர் தான் காமெடியா. இந்த மாதிரி காமெடி பார்த்து சிரிக்கத்தோணலை, பரிதாபம் தான் வருது.

நம் பேச்சு வழக்கில் கலந்துள்ளது என்பதற்காக சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. பார்த்தவுடனே சிரிப்பு வந்தா அவங்களுக்கு பெயர் நகைச்சுவைக்காரன் இல்லை, பைத்தியக்காரன்.

தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பது நாங்கள் இல்லை, நீங்க தான் வெளுத்ததெல்லாம் பால்ங்கற கதையா, சிரிக்க வச்சா, நகைச்சுவையாளன்னு நினைக்கிறீங்க. தெருவுல நாலு பேர் சண்டைபோட்டா சிரிப்பீங்களா, அதையே வடிவேலு செய்தால் காமெடியாம் நடுவர் அவர்களே! இந்த கொடுமைய எங்கன்னு போய் சொல்றதுன்னே தெரியல.

அதனால தான் சொல்றோம் அக்காலத்து நகைச்சுவையே சிறந்தது சிறந்தது சிறந்தது!

அன்புடன்
பவித்ரா

அக்காலமே சிறந்தது என்ற அணிக்கு பேஸ்மென்ட் ஸ்ட்ராங் ஆகிட்டே போகுது.அந்த அணி அவுங்க தரப்பு வாதத்தை ஆணித்தரமா சொல்லிட்டு இருக்காங்க...

எதிரணி என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க...

//// தெருவுல நாலு பேர் சண்டைபோட்டா சிரிப்பீங்களா, அதையே வடிவேலு செய்தால் காமெடியாம் நடுவர் அவர்களே! இந்த கொடுமைய எங்கன்னு போய் சொல்றதுன்னே தெரியல.//// --- பவித்ரா-க்கு பதில் சொல்லுங்கப்பா.....

அழகான கருத்தை சொல்றீங்க பவி, கல்பனா

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எதிரணியினரே, பார்த்தவுடனே சிரிக்க தூண்டுபவன் பெயர் பைத்தியக்காரன். தெருவில் அம்மணமாக ஒருவன் சென்றால் அவனை கலைநயத்தோடா பார்பார்கள் ? பார்ப்பவர்கள் தப்பான கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லையென்றால் ஏன் நீலபடம் மறைவாக பார்க்கப்படுகிறது. அதையும் பொதுவில் கலைநயத்தோடு பார்க்கலாம் அல்லவா? வீட்டுக்கு வரும் தோழர்களில் யார் யாரை எங்கே நிறுத்த வேண்டும் என்று ஒரு வரைமுறை உண்டு. ஒரு சிலரை ஹால் வரை அனுமதிக்கலாம்.இன்னும் ஒருசிலரை சமையறைக்கும் அனுமதிக்கலாம். இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக மிக உயர்ந்தவனை பூஜை அறை வரைக்கும் அனுமதிக்கலாம் . அந்த தகுதியை அந்த கால நகைச்சுவையே பெறுகிறது. இந்த கால நகைச்சுவை வராண்டாவிற்கு கூட அனுமதிக்காமல் தெருவிலேயே பார்த்து அனுப்பி விடலாம். அதன் தரம் அப்படி உள்ளது.

அந்த கால படங்களின் கருத்தை கேட்க முடியாமயா தேவதாஸ், ஹரிதாஸ் போன்ற காலத்தினால் அழிக்க முடியாத அற்புத படைப்புகள் நாள் கணக்கில் ஓடி சாதனை படைத்தன. ரொம்ப மோசமான சாப்பாட்டை (இன்றைய நகைச்சுவை) சாப்டே எதிரணியினர் பழக்கப்பட்டுவிட்டதால் (அன்றைய நகைசுவை) நல்ல ருசியான சாப்பாட்டை ஏற்க அவர்கள் நாக்கு மறுக்கிறது. இதைத்தான் வள்ளுவர் சொல்லிட்டு போயிருக்கார். "கனியிருப்ப காய் கவர்ந்தற்று"ன்னு. எப்ப திருந்தப் போறாங்களோ?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பிச்சக்காரிய வீட்டுக்கு வரவழிக்கரார்.பிடித்துவயத்த தீவிரவாதிய சிரிப்புக்காக தப்பிக்கவிடுவார் இது நகைசுவையாம். அக்காலத்தில் சிவாஜி பிச்சைகார வேசத்தில் எப்படி கலக்கினார்?பராசக்தில,மோட்டார் சுந்தரம் படத்துல நாகேஷ் காமெடியா திருடன பிடிக்கலயா?இல்ல அத பார்த்து சிரிப்புதா வரலயா?

நல்ல தலைப்பு ராதா. இந்த பட்டிமன்றத்துல என்னோட ஓட்டு அக்கால நகைச்சுவைக்கே.
அக்கால நகைச்சுவைல நகைச்சுவை மட்டும் தான் இருந்துச்சு. ஆனா இப்போ எந்த காமெடிய எடுத்தாலும் ஏதாவது ஒரு இரட்டை அர்த்த வார்த்தை, இரண்டு கெட்ட வார்த்தை, இல்ல யாரையாவது அடிக்கறது, இல்ல மனம் கஷ்டப்படுற மாதிரி பேசுறது இதுக்கு பேரு தான் நகைச்சுவையா?
கொய்யால, டுபுக்கு, கொங்காங்கோ என்ன வார்த்தைகள் இதுலாம், கேட்கவே ஏதோ மாதிரி இல்ல. இதுல சின்ன பிள்ளைகளையும் நகைச்சுவை பண்ண வைக்கிறேன்னு அலங்கோலம் படுத்திடுறாங்க.
அந்த காலத்துல N.S. கிருஷ்ணன், நாகேஷ், பாலயை, தங்கவேலு, M.R.ராதா, சந்திரபாபு, Y.G. மகேந்திரன், S.V. சேகர், நம்ம ஆச்சி, என்னத்த கண்ணையா, காத்தாடி ராமமேர்த்தி, இவங்களோட காமெடிலாம் பார்த்து ரசிக்காதவங்க யாருங்க இருக்கா? குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கலாம். வயறு குலுங்க சிரிக்கலாம். சிந்திக்கவும் செய்யலாம். இதில் எந்த இரட்டை அர்த்த வசனமோ, யார் மனதையும் புண்ப்படுத்தவோ இல்லையா ஆனாலும் அது ரசிக்கும்படியாதான் இருந்துச்சு.
இப்பவும் பண்றாங்களே காமெடிங்குற பேருல ஒரு கொலை அய்யோ தாங்க முடியலப்பா.
எல்லாத்திலயும் நகைச்சுவைலயும் சிந்திக்க வைங்கனு சொல்லலீங்க, அட்லிஸ்ட் சிரிக்கவாவது வைங்கனு தான். சொல்றோம். சிரிப்புங்குற பேருல எல்லாரையும் முகம் சுழிக்க வைக்குறது உங்களுக்கு நல்ல நகைச்சுவையா?

மேலும் சில பதிவுகள்