பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சாப்பிடுவதே சந்தோஷம் அதிலும் மற்றவர் வயிறு வீங்க சாப்பிடுவதை பாரக்கும்போது சிரிப்பு வராதா என்ன? கல்யாண சமயல்சாதம் காய்கறிகள் பிரமாதம் இதுவே எனக்கு போதுமென தேறிய நடிகர் காமெடி செய்தாறே பாருங்கள் அதை சிரிப்பு விகல்பமின்றி வரும்...

எதிர் அணியினர் ஏன் தான் இப்படி காமெடி பீஸ் ஆயிட்டாங்கன்னு தெரியல. தெருவில் பைத்தியத்தை பார்த்தால் பரிதாபம் வரனுங்க. அவனை பைத்தியமாக்கிய சமுதாயத்தின் மேல் கோபம் வரவேண்டும். அத விட்டு விட்டு அவங்க சிரிப்பாங்களாம். இதிலிருந்தே அவங்க பார்வை எவ்வளவு மோசமானதாக இருக்குன்னு பாருங்க. அந்த கால காமெடில இரட்டை அர்த்தம் இல்லையா?. நாகேஷ் சச்சுவின் நகைச்சுவைகளை பாருங்கள் தெரியும். பட்டிமன்றத்தின் கேள்வியை அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ள வில்லையா, அல்லது புரிந்து கொள்ளாதது போல நடிக்கிறார்களா தெரியவில்லை. அடுத்து நீலப் படம் வரைக்கும் பேசறாங்க. பையனையும் பெண்ணையும் ஒரே வீட்ல வடிவேலு ஏன் விட்டார் அவங்க மேல இருக்கும் நல்ல எண்ணத்தில் தானே. ஆனா அந்த பசங்க என்ன பண்ணினாங்க? அதற்கு வடிவேல் என்னங்க செய்வார். அதன் மூலம் பெற்றோர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கார் வடிவேல். அதெல்லாம் புரியாம சும்மா ஆபாசம் ஆபாசம்னு வாய் கிழிய கத்தாதீங்க. கடைசீல பாருங்க வள்ளுவர் வரைக்கும் வந்துட்டாங்க. அந்த காலத்திலேயே கனி இருக்கும் போது காயை பறித்ததால் தானே வள்ளுவர் அப்படி எழுதினார். நடுவர் அவர்களே இப்பொழுதும் சொல்கிறேன், அவர்களின் சமுதாயத்தின் மீதான பார்வை சரியில்லை. காமாலை கண்ணுக்கு எதை பார்த்தாலும் மஞ்சளாகத்தானே தெரியும். அவங்க பார்வை அப்படி . . . அதற்கு நாங்க என்ன பண்ண முடியும்.

அன்புடன்
THAVAM

அக்கால நகைச்சுவை தான் சிறந்தது, அந்த காலத்தில் நகைச்சுவை என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கு சிறந்த கருத்துக்களை சொல்வதாக இருந்தது, ஆனால் இக்காலத்தில் இரட்டை அர்த்த வசனங்கள், மேலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு மதிப்பு கொடுக்காமல் அவனை திட்டுவதுபோல் வசனங்கள் உள்ளது, மேலும் அந்த காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் , நாகேஷ், பாலைய்யா, தங்கவேல் ஏன் மனோரமா ஆசி, எம்,ஆர்.ராதா அவர்கள் கூட, ஆனால் அவர்களுக்கு இந்த காலத்துல இருக்கிறவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம்,பாராட்டுக்கள் எல்லாம் கிடைக்கல என்பது மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அக்கால நகைச்சுவை தான் சிறந்தது, அந்த காலத்தில் நகைச்சுவை என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கு சிறந்த கருத்துக்களை சொல்வதாக இருந்தது, ஆனால் இக்காலத்தில் இரட்டை அர்த்த வசனங்கள், மேலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு மதிப்பு கொடுக்காமல் அவனை திட்டுவதுபோல் வசனங்கள் உள்ளது, மேலும் அந்த காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் , நாகேஷ், பாலைய்யா, தங்கவேல் ஏன் மனோரமா ஆசி, எம்,ஆர்.ராதா அவர்கள் கூட, ஆனால் அவர்களுக்கு இந்த காலத்துல இருக்கிறவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம்,பாராட்டுக்கள் எல்லாம் கிடைக்கல என்பது மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா


மருத மலை படம் பாத்துருக்கேளா!

அதுல ஒரு கைதியை எங்க வடிவேலுவும்,அர்ஜூனும் கோர்டுக்கு கூட்டிண்டு போவா பாருங்கோ!

ஹ ஹ ஹா! ஹிஹி ஹீஈஈ!

இப்போ நெனச்சாலும் என்னால எழுத முடியல்லை! ஒரே சிரிப்பா வரது!

அவர் கருத்தை நேரடியா சொல்லறதில்லை!

இது மாறி செய்யக்கூடாதுனு செஞ்சே காமிக்கறார்!

இதை எதிரணிகாராளால புரிஞ்சுக்க முடியல்லை!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அவர்களின் அங்கீகாரத்தில்தான் இன்றயவர்கள் பிழைக்கிறார்கள். சின்னக் கலைவாணர், கறுப்பு நாகேஷ்,இவையெலலாம் அவர்களை இவர்களே அங்கீகரித்ததன் அடையாளங்கள்தானே.குற்றம் செய்பவனைவிட செய்யத்தூண்டுபவனே முழு குற்றவாளி அவ்விதத்தில் தவறான சிந்தனையை விதைக்கும் இவர்கள் குற்றவாளிகள்தானே?நீங்கள் சொல்லலாம் உங்கள் பார்வையில் தவறு என்று, நமக்கே பிரித்தறிதல் கடினமான விஷயம் இக்கால நகைச்சுவை இதில் நம் குழந்தைகளுக்கு என்ன தெரியும்?

எதிரணியினரே, நாங்கள் காமெடி பீஸ் ஆகவில்லை. அந்த பீஸ் நீங்கள் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொன்னதற்கு நாங்கள் பதிலளித்தோம் அவ்வளவுதான். பார்த்தவுடனே சிரிக்க வைப்பவன் பைத்தியக்காரன் தான் அவன் எந்த கருத்தையும் சொல்லவேண்டிய அவசியமில்லை. பார்த்தவுடன் அவன் தோற்றமே சிரிப்பை வரவழைக்கும். இன்னும் பேசினால் கேட்கவே தேவையில்லை. உங்களுக்கு தான் காமெடியில் கருத்து தேவையாயிருப்பதில்லையே.

அவனை பைத்தியகாரன் போல் ஆக்கியது நாங்கள் அல்ல. அவர்களுக்கு ஆதரவு தரும் உங்களைபோன்றவர்கள் தான்.ஒரு பைத்தியத்தை இன்னொரு பைத்தியம் துரத்திக் கொண்டு ஓடுமாம். கடைசியில் ஓடி முடித்தவுடன் நீ எதுக்கு என்னை துரத்துனன்னு முதல் பைத்தியம் கேக்குமாம், அதுக்கு ரெண்டாவது பைத்தியம் சும்மாதான் ஓடி பிடிச்சு விளையாடனும்னு இருந்துச்சி அதுக்கு தான் உன்னை துரத்தினேன்னு சொல்லுமாம். இதுக்கு பேரு நகைச்சுவையாம். இதுக்கு பின்னாடி ஒரு கூட்டமாம்.

அந்தகாலத்துல ரெட்டை அர்த்தம் வரும் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு ஒன்று அல்லது இரண்டு உதாரணம் காட்டலாம். ஆனால் இன்று உள்ள நகைச்சுவைக்கு உதாரணமே அவசியம் இல்லை. எல்லாமே அப்படித்தான் இருக்கு. உங்களை போன்றவர்களுக்கு அப்பப்ப குரலை உயர்த்தி குறளை எடுத்து விடத்தான் ஒன்று பத்தாதுன்னு 1330 எழுதி வச்சுட்டு போயிருக்காரு. அதை யூஸ் பண்ணலனா எப்படி? செல் வச்சிடாதா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவர் அவர்களே என் ஓட்டு அந்த கால நகைச்சுவைக்கே. வடிவேல்,செந்தில் அடிவாங்குவதும், கருத்து சொல்றேன்ன்னு அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்வதும் நகைச்சுவை ஆகது. அந்த காலத்துல இருந்த நகைச்சுவை நடிகர்கள் மாதிரி இப்போ இல்லை அதனால் ஏதோ வந்ததையும் போனதையும் பாத்து சிரிச்சிகிட்டிருக்காங்க. இது வீட்டிலிருந்தபடியே செய்ற laughter exersice மாதிரிதான் எனக்கு தெரியுது நிஜமாவே சிரிக்கவைப்பது அந்தகால நகைச்சுவையே எனக்கு contiuous aa வர நேரம் கிடைக்காது அதனால் அப்பப்போ வந்து பதிவை போடுகிறேன் நடுவர் அவர்களே

ponni

'பாதாள பைரவி'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி,மணாளனே மங்கையின் பாக்யம் படத்தில்வரும் 'கிங்கிணி மங்கிணி ' கேரக்டர் தாடி எங்க குருவே. . .ஹி ஹி ஹி. . .மோசம் போசசு குருவே. . .நினைக்கும் போதே சிரிப்பு வருதே . . .பெரியவர்கள் இவற்றை காட்டினால்தானே சிறியவர்கள் ரசிப்பார்கள் . . . .பெரியவர்களே பார்த்ததில்லை போல. . . .. .பார்த்து புத்தி நிறைய சிரிக்க சொலலுங்கள் நடுவர் அவர்களே


//பார்த்தவுடனே சிரிக்க வைப்பவன் பைத்தியக்காரன் தான் அவன் எந்த கருத்தையும் சொல்லவேண்டிய அவசியமில்லை. //

இதை நான் வன்மையா கண்டிக்கறேன்.

சர்க்கஸ்ல கோமாளியை பாத்துருப்பேள்!

அவர் செய்யருது எல்லாம் நமக்கு சிரிப்பாருக்கும்!

யார் இல்லேனாலும் சமாளிச்ச்சுடுவா கோமாளிய வெச்சு!

ஆனா அவாள்லாம் இல்லேனா ஒரு நிமிஷம் கூட சர்க்கஸ் நடக்காது!

அவாளுக்கு எல்லாம் தெரியும்!

அதனால அவாளை பயித்தியம்னு சொல்லறதா!

இந்தமாறி அசட்டு பிசட்டுனு பேசாதீங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்