அருசுவை தோழிகள் மீது வருத்தம்

நான் வெளி நாட்டில் வசிக்கும் தோழி.என் ஒரே ஆருதல் அருசுவை எனக்கு தனியாக இருக்கிரோம் என்ரு நான் நினைக்கும்
பொது அருசுவை தோழிகள் உள்ளார்கள் என்ரு நினைத்து சந்தோஷப்பட்டேண்.அப்படி நினைது நான் என் கருத்துகலை
பதிவு பொட்டென் ஆனால் யாருமே என்னிடம் பேசுவதில்லை நான் பார்த்திருக்கிரென் புதிய தோழிகள் அனைவருக்கும் உடனடி பொடும் நீங்கள் என்னை மட்டும் ஒதுக்குவது ஏன் என்ரு சொல்லுங்கள்

உங்க பதிவ பார்த்தா பதில் போட கூடாது என்பதெல்லாம் கிடையாது, நான் உங்க பதிவ பார்த்திருக்கிறேன், ஆனால் அதற்கு பதில் என்னிடம் இல்லாததால் உங்களுக்கு பதில் போட்டிருக்க மாட்டேன், நிறைய சமயங்களில தோழிகள் உங்களுக்கு பதில் போட்டிருக்கிறார்களே, நான் பார்த்ததுண்டு ராதிகா.

அன்புடன்
பவித்ரா

என்ன ராதிகா இப்படி சொல்லிட்டீங்க?

உங்க மேல தான் இப்ப எனக்கு வருத்தம் :(

உங்க கேள்விக்கு எத்தனை பேர் பதில் போட்டார்கள் சொல்லுங்கள்!

நீங்கள் அரட்டை அரங்கத்தில் பேசியிருந்தால் கண்டிப்பாக பேசி இருப்போம். ஆனால் நீங்கள் பக்ரைன் தோழிகள் இழையிலேயே பேசுவதால் அங்கு பதில் கொடுக்க முடியவில்லை.

சீதாம்மா கூட உங்கலுக்கு பதில் சொன்னார்கள். திரும்ப திரும்ப கேட்கப்படும் கேள்விகளால் திரும்ப திரும்ப பதி சொல்ல சிலர் சளிப்படைவதால் தான் உங்கள் பல கேள்விகளுக்கு பதில் இல்லை:)

கர்ப்பமாக இருக்கிறீர்கள். இந்த நிலையில் இத்தகைய தனிமை உங்களை கொடுமை படுத்தும் தான். குழந்தையுடன் நேரத்தை செலவழியுங்கள். வேண்டாததை போட்டு மனதை குளப்பிக்கொள்ள வேண்டாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ராதிகா ஏன் இந்த கோபம்? உங்க கேள்விகளுக்கு பல இடங்களில் பதிலளிக்கப்பட்டிருப்பதை பவியைப் போலவே நானும் பார்த்திருக்கிறேனே :-)

ராதிகா ஒரு கேள்விக்கு பதில் வரலேன்னா யாருக்கும் பதில் தெரியலன்னு அர்த்தம். இல்லேன்னா அந்த கேள்வி சம்பந்தமில்லாத இடத்துல இருக்குன்னு அர்த்தம். அதுவும் இல்லேன்னா அந்த கேள்விக்கு ஏற்கெனவே எங்கேயோ பலமுறை பதில் அளிக்கப்பட்டிருக்குன்னு அர்த்தம். ஏன்னா ஒரே மாதிரி கேள்விக்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்வதுங்கறது கொஞ்சம் கஷ்டமான விஷயம். எல்லாருமே இருக்கும் வேலைகளுக்கு இடையில்தான் இங்கே பதிவுகள் போடுகிறோம்.

ஒருமுறை உங்களுக்கான பதில் கிடைக்கவில்லையெனில் மீண்டும் ஒரு புது இழை ஆரம்பிப்பதற்கு பதில் அதே இழையில் மீண்டும் கேட்டால் யாருக்காவது தெரிந்தால் சொல்வார்கள் சரியா. எல்லாத்தையும் பாசிட்டிவ்வா எடுக்கப்பாருங்க ஓகே.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ராதிகாவுக்கு என்ன வருத்தம் நாங்க எல்லோரும் இருக்கோம்முலா..... பக்ரேன் தோழிகள் யாரும் இல்லையா பரவாஇல்லை அரட்டைக்கு வாங்க ராதிகா நிறைய தோழிகள் இருக்காங்க கொச்சுக்காம வாங்கபா நாம்மேல்லாம் அருசுவை சகோதிரிகள் இல்லையா கோபப்படாம வங்கோ, வாங்கோ, வங்கோ......

அன்புடன்
நித்யா

ராதிகா, நானும் ஒருகாலத்துல (2 மாசத்துக்கு முன்னாடி அப்படீங்கறதா நாங்க இப்படி பில்டப் குடுத்துதான் சொல்லுவோம் ஆங்ங்...) உங்கள மாதிரிதான்ப்பா, யாரும் கண்டுக்க மாட்றாங்க,யாரும் கண்டுக்க மாட்றாங்கன்னு சொல்லிட்டு திரிஞ்சேன். அப்புறமா தான் பொறுத்தது போதும் பொங்கியெழுன்னு என்னை அவங்களோட ஐக்கியப்படுத்திகிட்டேன். அறுசுவைங்கிறது கடல் போலப்பா. நாம இதுல ஒவ்வொரு தோழியா தோண்டி தோண்டி எடுக்க முடியாதுப்பா. நீங்க வெளிய வாங்க முதல்ல, அப்புறமா பாருங்க. உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம். கூட்டுப்புழு வாழ்க்கைலருந்து வெளிய வாங்க. எத்தனை பட்டாம்பூச்சிகள் ஆனந்தமா திரிஞ்சிட்டு இருக்கோங்கறத பாருங்க. நீங்க அரட்டைக்கு வந்து உங்ககிட்ட யாராவது பேசலைன்னு மட்டும் என் கிட்ட கம்ப்ளைன் பண்ணுங்க போதும். மீதிய நான் பார்த்துக்கறேன் ;) என்கிட்ட கைவசம் உப்புமா, பிரியாணி இப்ப லேட்டஸ்டா சாம்பார்லாம் இருக்கு. ( எல்லாம் மிகவும் பழமைவாய்ந்த சரக்குகள் பா) நம்ம தோழிகள் அதுக்குதான் பயப்படுவாங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கு உங்கள் மீது எப்பொழுதும் கோவம் இல்லை என் வருத்ததை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.
என் பதிவு உங்கலை இந்த அளவுக்கு காயப்படுதி இருக்கிரதுக்கு முதலில் என்னை மன்னித்து விடுங்கள்.
எனக்கு உங்கள் மீது அதிக எதிர்ப்பார்ப்பு வைத்து விட்டென் அதனால்தான் அப்படி கேட்டு விட்டென் என்னை மன்னித்து விடுங்கல்.மன்னிப்பீர்களா

நான் தனிமையில் இருப்பதால் என் மன குமுரலை உங்களிடம் கேக்க தெரியாமல் கேட்டு விட்டென் மன்னிது விடுங்கள்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு

OUT OF SIGHT OUT OF MEMORY என்று

அப்பப்ப அரட்டைக்கு வந்துட்டுப்போங்க. நான் கூட கொஞ்சநாள் அறுசுவைக்கு வரல. இப்ப மறுபடியும் வந்து புது வரவுகளோட கும்மி அடிச்சிக்கிட்டிருக்கேன். அறுசுவை பொது சொத்து. (பாபு அறுசுவை உங்களதுதான்) நம்ப எல்லாருக்கும் உரிமை உண்டு.
அன்புடன்
ஜெமாமி

ஒழுங்க தெனமும் அரட்டைக்கு ஆஜார் ஆயிடுங்க. எல்லாத்தையும் பண்ணிட்டு சும்மா மன்னிப்பு எல்லாம் கேட்டா அப்புறம் கல்பனாவை நான் புடிச்சு வைச்சுக்கமாட்டேன். மீந்துபோனதெல்லாம் உங்களுக்கு பார்சல் பண்ணிடுவாங்க. ஆமா, சொல்லிபுட்டேன்.

Don't Worry Be Happy.

கேட்டேளே ஒரு கேள்வி!

நல்ல வேளை! நான் பொழைச்சேன்!

இல்லேனா ஒருவார இட்லிலேந்தும் ஊசிபோன சட்னிலேந்தும் நேக்கு விடுதலை

வாங்கி கொடுக்க ஆர் இருக்கா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்