கவிதைப் போட்டியில் வென்றவர்களை இங்கே வாழ்த்தலாம் வாங்க..

கவிதை முடிவுகள் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் ஆப்சன் கொடுக்கவில்லை. அந்த பக்கம் மிகவும் பெரிதாக நீளும் என்பதால். அதேபோல், போட்டியில் கலந்து கொண்ட கவிதைகள் உள்ள பக்கத்திலும் பின்னூட்டம் ஆப்சன் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே மிகப் பெரிய பக்கமாக இருப்பதால்.

எனவே, கவிதைப் போட்டி சம்பந்தமான உங்கள் வாழ்த்துக்கள், விமர்சனங்களை இந்த இழையில் பதிவு செய்யவும்.

கவிதை முடிவுகளைப் பார்க்க கீழ்கண்ட பக்கத்திற்கு செல்லவும்.
<a href="http://www.arusuvai.com/tamil/node/16033"> http://www.arusuvai.com/tamil/node/16033</a>

கவிதைகளை பார்க்க கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும்.

<a href="http://www.arusuvai.com/tamil/node/16035" > http://www.arusuvai.com/tamil/node/16035 </a>

கவிதைப் போட்டியில் வென்று பரிசைத்தட்டிச்சென்ற கவிசிவாவுக்கும், இஷானிக்கும் வாழ்த்துக்கள்.

எனது கவிதையய் அங்கிகரித்து மதிபெண் இட்ட நடுவர் குழுவிற்கு நன்றிகள்.

Don't Worry Be Happy.

மன்னிக்கவும், நான் உங்க இழையை பார்க்கவில்லை, எப்பவும் போல முந்திரிகொட்டை மாதிரி புதுசா ஆரம்பித்துவிட்டேன், எல்லாரும் அங்க பதிவு போடவும் வந்தாச்சு, என்னை மன்னிச்சுடுங்க.

ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி தேடினேன், இழை கண்ணில் படவில்லை, அதான் ஆரம்பித்துவிட்டேன். மன்னிக்கவும் ப்ளீஸ்

அன்புடன்
பவித்ரா

நீங்கள் யாராவது தனி த்ரெட் ஆரம்பிப்பீர்கள் என்று நானும் சிறிது நேரம் பார்த்தேன். எல்லா வாழ்த்துக்களும் அரட்டை த்ரெட்டில் சென்று கொண்டிருந்ததால், இதை ஆரம்பித்தேன். அநேகமாக நான் ஆரம்பித்த நேரத்தில்தான் நீங்கள் தொடங்கியுள்ளீர்கள்.

(இதெல்லாம் குற்றங்கள் அல்ல.. எதற்கு இத்தனை மன்னிப்பு எல்லாம். என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள். ப்ளீஸ்.. )

கவிதை போட்டியில் கலக்கிய தங்களின்

’க” ’வி’’ தையின் ’’சி’’றப்பினால் முதல் பரிசை தட்டி வந்துட்டீங்கோ!
’வா’’ழ்த்துகள்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கவிதை போட்டியில் வெற்றி பெற்ற கவிசிவா மற்றும் இஷானிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

அன்புடன்
நித்யா

அருமையான கவிதை எழுதி பரிசை தட்டிச்சென்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நல்ல வேளை ஆமினா சொன்னா மாதிரி பொதுவா வெற்றி பெற்றோருக்கென்று நான் ஆரம்பித்தேன். ஆனா நிறைய பேர் இரண்டு முறை அங்கயும் இங்கயும் பதிவு போடறாங்க, நான் ஆரம்பித்ததை வேணா நீக்கிடுங்க, ஏன் என்றால் ஒரே பதிவு இரண்டு முறை வருகிறது.

(ஆமி சொன்னா மாதிரி அண்ணியோட செயின் எல்லாம் கேட்க மாட்டேன், பயப்பாடாதீங்க, நீங்களே கொடுப்பீங்கன்னு எனக்கு தெரியும்:))

அன்புடன்
பவித்ரா

கவிசிவா என்பது உமது வெறும் பெயெரென்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் கவியரசி ஆகி உமது பெயரை நீர் தக்கவைத்துக்கொண்டீர்!

இஷானி உங்களை நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்...வாழ்துக்கள் கவிசிவா அன்ட் இஷானி! நன்றி1

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

எல்லா கவிதைகளுமே நன்றாக இருக்கின்றன.

கவிசிவா, இஷானி இருவருக்கும் என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்.

போட்டியை நடத்தி பரிசுகளை அறிவித்துள்ள அட்மினுக்கு என் மனமார்ந்த நன்றி.

வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெமாமி

பி.கு.
பாபு, கதைப்போட்டி ஏதாவது உண்டா?

நன்றி நன்றி நன்றி இதைத் தவிர என் சந்தோஷத்தையும் அன்பையும் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை என்னிடம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்