கவிதைப் போட்டியில் வென்றவர்களை இங்கே வாழ்த்தலாம் வாங்க..

கவிதை முடிவுகள் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் ஆப்சன் கொடுக்கவில்லை. அந்த பக்கம் மிகவும் பெரிதாக நீளும் என்பதால். அதேபோல், போட்டியில் கலந்து கொண்ட கவிதைகள் உள்ள பக்கத்திலும் பின்னூட்டம் ஆப்சன் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே மிகப் பெரிய பக்கமாக இருப்பதால்.

எனவே, கவிதைப் போட்டி சம்பந்தமான உங்கள் வாழ்த்துக்கள், விமர்சனங்களை இந்த இழையில் பதிவு செய்யவும்.

கவிதை முடிவுகளைப் பார்க்க கீழ்கண்ட பக்கத்திற்கு செல்லவும்.
<a href="http://www.arusuvai.com/tamil/node/16033"> http://www.arusuvai.com/tamil/node/16033</a>

கவிதைகளை பார்க்க கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும்.

<a href="http://www.arusuvai.com/tamil/node/16035" > http://www.arusuvai.com/tamil/node/16035 </a>

எனது கவிதையை பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என் பெயர் ராதிகா. அறுசுவை உறுப்பினர் தான். நானும் கவிதைப்போட்டிக்கு கவிதை அனுப்பினேன்.வரவில்லையா?? வேறு எதுவும் பிரச்னையா?? எனது ஜிமெயில் முகவரி: rathikav@gmail.com

ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

கவிதைப் போட்டியில் வென்ற/பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நட்புடன் ராதிகா

கவிதைப்போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக அனுப்பப்போகும் அட்மின் பாபு அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி.
அன்புடன்
ஜெமாமி

சிறிய பிழை அல்ல.. ஒரு பெரிய பிழை நடந்துவிட்டது. :-(

என்னுடைய கவிதையை போட்டிக்கு எடுத்துக்கொள்ளவில்லையே என்று ஒரு சகோதரி மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். என்னுடைய மெயில் பாக்ஸில் அவரது கவிதை இல்லை. அவரது பெயரில் கவிதை படித்த ஞாபகமும் இல்லை. கவிதைகள் வர வர, அவற்றை தனியே ஒரு ஃபைலில் காப்பி செய்து கொண்டிருந்தோம். முதலில் உங்கள் கவிதை வரவில்லையே என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். பிறகு ஒரு சந்தேகத்தின் பேரில் என்னுடை Spam mail folder ஐ பரிசோதித்ததில் அங்கே அவரது மின்னஞ்சல் இருந்தது. இன்னொரு அதிர்ச்சி. மற்றொருவர் அனுப்பிய கவிதையும் அங்கே இருந்தது. :-(

எப்போதுமே Spam mail folder ஐ check செய்துவிட்டு டெலீட் செய்வேன். கடந்த சில நாட்களாக அதை பார்க்கவேயில்லை. இது முழுக்க முழுக்க என்னுடைய தவறுதான். இப்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கின்றேன்.

அந்த இரண்டு கவிதைகளையும் நடுவர்களுக்கு அனுப்பி மதிப்பெண்கள் தரச்சொல்லி கேட்டு, ஒருவேளை அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அவர்களுக்கும் பரிசு கொடுத்துவிடலாம் என்று எண்ணுகின்றேன். தற்போது வெற்றி பெற்றவர்களில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களில் யாரேனும் அதிக மதிப்பெண்கள் எடுத்தால், அவர்களுக்கும் கூடுதலாக பரிசு வழங்கலாம் என்று நினைக்கின்றேன். உங்களின் ஆலோசனையும் தேவை.. வேறு ஏதேனும் சிறந்த வழி இருக்கின்றதா?

நான் மேலே உள்ள பதிவை கொடுக்கும் நேரத்தில் நீங்கள் பதிவு கொடுத்து இருக்கின்றீர்கள். உங்களது கவிதையும் மற்றொருவர் அனுப்பிய கவிதையையும் இப்போதுதான் பார்த்தேன். இது சம்பந்தமாக ஏதேனும் செய்ய இயலுமா என்று பார்க்கின்றேன்.

அவர்கள் இருவரின் கவிதையும் நடுவருக்கு அனுப்புங்கள், அவர்கள் வெற்றிபெற்றவர்களை விட அதிக மதிப்பெண் பெற்றால் அவர்களுக்கும் பரிசினை வழங்கலாம். அதில் தவறேதும் இல்லை. அவர்கள் வெற்றிபெற்றவர்களை விட குறைவாக பெற்றால் எதுவும் வேண்டாம் என்பது என் கருத்து. நடுவர்கள் மதிப்பெண் போட்ட பிறகு அவர்களுடைய கவிதையையும் மற்ற கவிதைகளோடு இணைத்து அறுசுவையில் போடுங்கள்.

அன்புடன்
பவித்ரா

நீங்கள் கூறியது போலவே கூடுதல் மதிப்பெண்கள் எடுத்தால் கூடுதல் பரிசு அளியுங்கள். ஏற்கனவே பரிசு யாருக்கு என்று அறிவித்தபடியால் அதில் மாற்றம் செய்யவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

Don't Worry Be Happy.

கவியரசி கவிசிவாவுக்கு வாழ்த்துக்கள் உண்மையாகவே உங்களின் கவிதை கண்களில் நீர் வரவழைத்துவிட்டது..ஸ்வீட் சீக்கிரம் குடுத்துருங்க...;)

இஷானி கவிதைகளை பற்றி ஏற்கனவே தெரியும்.. நான் உங்களை எதிர்பார்த்துதான் இருந்தேன். வாழ்த்துக்கள்.. ட்ரீட் எப்போ ;)

இது தான் என் முதல் கவிதை.. அதற்கு அறுசுவைக்கு தான் எனது மனப்பூர்வமான நன்றி. இந்த அளவு மார்க் போட்டு நடுவர்களுக்கும் நன்றி ;)

நல்ல ஒரு நடுநிலமையான தீர்ப்பு அளித்த நடுவர்களுக்கு நன்றி.. மேலும் கவிதை போட்டியில் கலந்துக் கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

முதல் ரெண்டு பரிசினை வென்ற கவிசிவா..இஷானி க்கு என் மன பூர்வமான வாழ்த்துக்கள்..மற்ற அனைவரின் கவிதைகளும் நல்லா இருந்தது..வாழ்த்துக்கள்..!!இதில் ஒரு சுவாரஷ்யம் என்ன வென்றால்..முதல் ரெண்டு பரிசுகளுமே வெளிநாட்டில் வசிக்கும் தோழிகளுக்கு! கவிதை தலைப்பு அவங்களுக்கு இன்னும் உணர்வு பூர்வமாகவும்,பொருத்தமாகவும் இருந்திருக்கும் இல்லையா??..மீண்டும் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!
அட்மின் சார் 60 மதிப்பெண் சொல்லி இருந்தார்..ஆனால் 50 மதிப்பெண்கள் tally தான் இருக்கு..நான் தான் சரியா ஒரு வேளை கவனிக்கலையோ??
வாழ்த்துக்களுடன்,
ஆனந்தி.

Madurai Always Rocks...

கரெக்ட் ஆனந்தி! நீங்கதான் சரியா பாக்கலை. A,B,C,D,E,F னு 6 நடுவர் இருக்காங்க!

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்