கவிதைப் போட்டியில் வென்றவர்களை இங்கே வாழ்த்தலாம் வாங்க..

கவிதை முடிவுகள் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் ஆப்சன் கொடுக்கவில்லை. அந்த பக்கம் மிகவும் பெரிதாக நீளும் என்பதால். அதேபோல், போட்டியில் கலந்து கொண்ட கவிதைகள் உள்ள பக்கத்திலும் பின்னூட்டம் ஆப்சன் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே மிகப் பெரிய பக்கமாக இருப்பதால்.

எனவே, கவிதைப் போட்டி சம்பந்தமான உங்கள் வாழ்த்துக்கள், விமர்சனங்களை இந்த இழையில் பதிவு செய்யவும்.

கவிதை முடிவுகளைப் பார்க்க கீழ்கண்ட பக்கத்திற்கு செல்லவும்.
<a href="http://www.arusuvai.com/tamil/node/16033"> http://www.arusuvai.com/tamil/node/16033</a>

கவிதைகளை பார்க்க கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும்.

<a href="http://www.arusuvai.com/tamil/node/16035" > http://www.arusuvai.com/tamil/node/16035 </a>

ஹாய் ராதிகா ! கவிதையில் நான் குறிப்பிட்டிருக்கும் மருமகள் என் அண்ணன் மகள். பிஞ்சு விரல்களும் அவளுடையதே! பேரனைப்பற்றி நான் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.

உங்கள் கவிதை நன்றாக இருந்தது :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிதை எழுதியவரே விளக்கம் கொடுத்துவிட்டார். அதையேத்தான் நானும் குறிப்பிட வந்தேன். கவிதையின் ஆரம்பம் முதலே அவர் புதுப்பெண்ணைப் பற்றியும், அவரது மனநிலைப் பற்றியும்தான் விவரித்துள்ளார். மருமகள் என்ற வார்த்தையை நீங்கள் வேறொரு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டுள்ளீர்கள். அதேபோல் இல்லாத பேரன் என்ற வார்த்தையையும் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து மின்னஞ்சல் வாயிலாக எங்களைத் தொடர்பு கொள்ளவும். மன்றத்தில் இதுபோன்ற விளக்கங்களைக் கேட்கும்போது சிலர் மனவருத்தம் கொள்ளலாம். நடுவர்களுக்குமே தர்மசங்கடம் உண்டாகும்.

ஹே.... முடிவு வந்தாச்சா? ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டு இருந்தேன். எதுக்குனு கேட்கிறீர்களா நமக்கு தான் எழுத தெரியாது எழுதினவங்களோடத படித்து ரசிக்கவாவது செய்யலாம்ல அதான். சூப்பர் கவிஅமுது படைச்சுட்டீங்க அட்மின். எல்லாருடைய கவிதைகளுமே ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒரு பெரிய கைதட்டல் உங்க எல்லாருக்கும். ஸ்பெஷலா இத அரெஞ்சு பண்ண அட்மினுக்கும். கேட்டுச்சா என் கைத்தட்டல். வாழ்த்துக்கள் கவிசிவா, இஷானி

நான் விளக்கி எழுதியது என்னுடைய குழப்பத்தை/எண்ணத்தை தெளிவுபடுத்த தானே அன்றி யாரையும் குறை சொல்லவதற்காக இல்லை. விளக்கம் தான் கேட்டேன். யாரையும் குற்றப்படுத்தவும் இல்லை. கேள்வி கேட்கவும் இல்லை.

மருமகள் - மகன் மனைவி
பிஞ்சு விரல்கள் - பேரன்/பேத்தி -- இல்லாததை சொல்லவில்லை. கவிதையை எல்லாரும் எழுதியவர் மனநிலையில் இருந்து படிக்க முடியாது. அவர் மனநிலையை ஊகிக்கவும் முடியாது.

படிக்கும் போது என்ன தோன்றியதோ, அதைப் பற்றி தான் எழுதினேன்

மன்னிக்கவும்

நட்புடன் ராதிகா

கவிசிவா, இஷானி இருவருக்கும் வாழ்த்துக்கள். கவிதைகள் மிகவும் ரசித்தேன். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாணி

இப்போ தான் பா அருசுவைக்கு வந்தேன் வந்தோன்ன கவிதை போட்டி முடிவு கண்ணில் பட்டது result டை பாத்துட்டு அதே சூட்டோட கவிதையையும் படிச்சுட்டு வந்துட்டேன் எல்லார் எழுதியிருந்த கவிதையும் நல்லா இருந்தது அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். specially கவி உங்க கவிதை படிக்கும் போது என் நெஞ்சம் கணத்தது. ரொம்ம நல்லாயிருந்தது. இஷானி அவர்கள் கவிதையும் மிகவும் அருமை இருவருக்கும் என் பாராட்டுக்கள்
பொன்னி

நன்றி ஜெயலெக்ஷ்மி!
நன்றி பவி!
நன்றி நித்யா!
நன்றி திருமதி. கோமு!
நன்றி ஜெ.மாமி(நடுவரே :D)
நன்றி ரம்யா!
நன்றி ஆனந்தி! உண்மைதான் நான் அனுபவித்ததை அனுபவிப்பதையே எழுதியிருந்தேன் :)
நன்றி வினோஜா!
நன்றி ஆசியா! நாங்கள் உங்கள் கவிதையை மிஸ் பண்ணிவிட்டோம் :(
நன்றி கௌரிலெக்ஷ்மி! உண்மைதான் என்னையும் எழுத வைத்த பெருமை பாபு அண்ணாவையே சாரும்
நன்றி யாழினி!
நன்றி வாணி!
நன்றி பொன்னி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்கள் இஷானி, கவிசிவா

தங்களுக்கு "தொடர்புக்கு" என்ற இணைப்பின் மடல் அனுப்பியுள்ளேன்.

தயவு செய்து பாருங்கள்..

வேறு இடங்களில் வந்த என் கவிதைகளை அறுசுவையில் இட விரும்புகிறேன். எந்த முகவரிக்கு எப்படி அனுப்ப வேண்டும் என்று சொல்லுங்கள்

நன்றி

நட்புடன் ராதிகா

உங்கள் மடலை பார்த்து பதில் கொடுத்துவிட்டேன். அதன்பிறகுதான் உங்களின் இந்த பதிவை பார்க்கின்றேன்.

வேறு இடங்களில் வெளியான கவிதைகளை அறுசுவையில் வெளியிடுவதில்லை. கவிதை என்று இல்லை. வேறு இடங்களில் வெளியான எதையும் அறுசுவையில் வெளியிடுவதில்லை. அதேபோல் இங்கே வெளியானவற்றையும் வேறு இடங்களில் வெளியிட அனுமதி இல்லை.

மேலும் சில பதிவுகள்