கவிதைப் போட்டியில் வென்றவர்களை இங்கே வாழ்த்தலாம் வாங்க..

கவிதை முடிவுகள் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் ஆப்சன் கொடுக்கவில்லை. அந்த பக்கம் மிகவும் பெரிதாக நீளும் என்பதால். அதேபோல், போட்டியில் கலந்து கொண்ட கவிதைகள் உள்ள பக்கத்திலும் பின்னூட்டம் ஆப்சன் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே மிகப் பெரிய பக்கமாக இருப்பதால்.

எனவே, கவிதைப் போட்டி சம்பந்தமான உங்கள் வாழ்த்துக்கள், விமர்சனங்களை இந்த இழையில் பதிவு செய்யவும்.

கவிதை முடிவுகளைப் பார்க்க கீழ்கண்ட பக்கத்திற்கு செல்லவும்.
<a href="http://www.arusuvai.com/tamil/node/16033"> http://www.arusuvai.com/tamil/node/16033</a>

கவிதைகளை பார்க்க கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும்.

<a href="http://www.arusuvai.com/tamil/node/16035" > http://www.arusuvai.com/tamil/node/16035 </a>

போட்டியில் வெற்றி பெற்ற கவி, இஷானி இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இருவருடைய கவிதையும் அருமை.

மேலும் இதில் இடம் பெற்ற அனைத்து கவிதைகளும் சூப்பர். கவிதை மழை பொழிந்த ரசிராஜா, முத்துகவி, ரம்யா, மது, ஆமினா, தேன்மொழி, ஷேக், ஆனந்தி, இந்து, கீதா, ஜெயலக்ஷ்மி, திருமதி.ஜெயசீலன், கீர்த்திநாதன்,
ராதிகா, ப்ளோரா ஜீவா அனைவருக்கும், நடுவர்களுக்கும் என்னுடைய வாழ்துக்கள்

//ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

கவிதைப் போட்டியில் வென்ற/பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

ராதிகா

உங்களின் இந்த வரிகளில்ல உங்க ரசிகையாகிவிட்டேன்!

கவிதை அருமை

ப்ளோரா உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் எதிர்பார்க்கவே இல்லை.

கவியரசி பட்டம் வென்ற கவிசிவாவுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். நல்ல உணர்வுப்பூர்வமா எழுதி இருக்கீங்க. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். நீங்க எல்லாம் இந்த பக்கம் வரமாட்டீங்கன்ற தைரியத்திலதான் நானெல்லாம் வாலாட்டிகிட்டு இருந்தேன் :-(

கவிதைப் போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட இளவரசி, முத்துகவி, ரம்யா, மது, ஆமினா, தேன்மொழி, ஷேக், ஆனந்தி, இந்து, கீதா, ஜெயலெஷ்மி, Mrs. ஜெயசீலன், மற்றும் கீர்த்திநாதன் அனைவருக்கும் பாரட்டுக்கள். அனைவரின் கவிதியுமே மிகவும் நன்றாக உள்ளது. மிகக் குறுகிய மதிப்பெண் இடைவெளியே. அடுத்தமுறை தவறாமல் கலந்து கொண்டு வென்றிட வாழ்த்துக்கள்.

சிறப்புப் பரிசைப் பெறும் ராதிகா மற்றும் ஃப்ளோரா ஜீவா -விற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். தவறுதலாக விடுபட்டதை தவறாக எண்ணாமல் தொடர்ந்து கலந்துகொள்ளுங்கள்.

இந்த அரிய வாய்ப்பை வழங்கிய பாபு அண்ணா அவர்களுக்கு பலகோடி நன்றிகள். பொதுவாக கவிதைப் போட்டியில் (எந்த போட்டியானாலும்) அடுத்தவர் கவிதைகளையும், அவர்க்ளுக்கான நடுவரின் மதிப்பெண்களையும் அறிவது இயலாது. இப்படித் தெரிய வரும்போது நம் கவிதையுடன் அடுத்தவர் கவிதையினை ஒப்பிட்டு பார்த்து நம்மை மேலும் மெருகேற்றிக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். அதை வழங்கிய அண்ணாவிற்கு மீண்டும் ஒரு நன்றி.

வேலைப் பளுவுக்கு இடையில் நடுவராக இருந்து சிறப்பித்து என் கவிதையையும் தேர்ந்தெடுத்த நடுவர்கள் செபா, ஜெயந்தி மாமி, சீதாலெட்சுமி, ஸாதிகா, இமா, மற்றும் நாகை. சிவா அவர்களுக்கும் நன்றி.

வாழ்த்துக்கள் வழங்கிய ஜெயலெஷ்மி, பவித்ரா, நித்யா, கோமு, ஷேக், ஜெ மாமி, ராதிகா, ரம்யா, ஆனந்தி, வினோஜா, ஆசியா, கௌரிலெஷ்மி, யாழினி, வானதி, பொன்னி, ரம்யாரமேஷ், வின்னி, கல்பனா, ரேணுகா, ஆமினா, இளவரசி, ஸாதிகா, மற்றும் மோகனா மாமி - அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

அன்புடன்,
இஷானி

விடுபட்ட கவிதைகள் சம்பந்தமான உங்களின் முடிவை வரவேற்கிறோம்.

கவிதை விடுபட்டவர்களுக்கு மிகுந்த வருத்தமாகவே இருக்கும். எனினும் ஆரம்ப நிலைகளில் இந்த மாதிரி தவறுகள் தவிர்க்க முடியாததுதான். நான் என்னுடைய கவிதையை அனுப்பும்போது கூட நினைத்தேன். ஏதாவது Acknowledgment இருந்தால் நன்றாக இருக்குமே என்று.

அடுத்தமுறை தளத்திலேயே கவிதை எழுதியவரின் பெயர்களை முன்னமே வெளியிடுவதாக கூறியிருக்கின்றீர்கள். நல்லதுதான். அது இந்த மாதிரி தவறுகள் ஏற்படா வண்ணம் தடுக்கும். எனக்கென்னவோ தளத்தில் வெளியிடுவதைவிட கவிதை உங்களுக்கு கிடைத்தவுடன் நீங்கள் அவர்களுக்கு “கவிதை கிடைத்தது” என Acknowledge பண்ணுவதே சிறந்ததாகப் படுகிறது. Acknowledgment கிடைக்காதவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கவிதைப் போட்டிக்கு கவிதை அனுப்பும் வழிமுறையிலேயே குறிப்பிட்டு விடலாம். இதனால் யார் யார் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்பது முடிவு வெளிவரும்வரை சஸ்பென்ஸ் ஆகவே இருக்கும். அதுவே கவிதையின் முடிவை எதிர்பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

இது என் suggestion பட்டுமே. நடைமுறைச் சிக்கல்கள் எனக்குத் தெரியாது. எது உங்களுக்கு எளிதானதோ, சாத்தியமானதோ அதனைப் பின்பற்றுங்கள்.

போட்டி நடத்துவதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி!

அன்புடன்,
இஷானி

ஆலோசனைக்கு நன்றி சகோதரி..

//இதனால் யார் யார் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்பது முடிவு வெளிவரும்வரை சஸ்பென்ஸ் ஆகவே இருக்கும்//

உண்மையிலேயே இதை மனதில் வைத்துதான் கவிதை அனுப்பியவர்களின் பெயர்களை மன்றத்தில் வெளியிடவில்லை. வெறுமனே 15 பேர் என்ற எண்ணிக்கையை குறிப்பிட்டேன். ஒருவேளை பெயர் குறிப்பிட்டு இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது.

//“கவிதை கிடைத்தது” என Acknowledge பண்ணுவதே சிறந்ததாகப் படுகிறது//

நல்ல ஆலோசனை. acknowledge செய்த பிறகு அதை விட்டுவிடக்கூடாது. :-) தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுமட்டுமின்றி, இந்த ஐடியை மன்றத்தில் பல இடங்களில் கொடுத்து இருப்பதால் Spambotsகள் அதை எடுத்து வரிசையாக junk mails அனுப்பி கொண்டிருக்கும். Spambots படிக்ககூடாது என்பதால்தான், நான் எப்போதும் மின்னஞ்சல் முகவரியினை பாதி ஆங்கிலத்திலும், பாதி தமிழிலும் கொடுப்பேன். ஆனால் மற்றவர்கள் என்னுடைய முகவரியை அப்படியே தெளிவான ஆங்கிலத்தில் ஆங்காங்கே கொடுத்துவிடுகின்றார்கள். :-(

இந்த Spam mail களை அப்படியே டெலிட் செய்யாமல், Spam முத்திரை குத்தி அரெஸ்ட் செய்வோம். மீண்டும் அதே முகவரியில் இருந்து மின்னஞ்சல் வரக்கூடாது என்பதற்காக. அப்படி செய்யும் சில நேரங்களில், வரிசையாக செலக்ட் செய்யும்போது, கவனக்குறைவால் நல்ல மெயில்களும் செலக்ட் செய்யப்பட்டு spam folder க்கு சென்றுவிடும். இப்படியும் சில நேரங்களில் நடந்து இருக்கின்றது. எப்படியோ இந்த முறை தவறு நடந்துவிட்டது. ஒரு போட்டியின்போது இப்படி நடந்துவிட்டதில் எனக்கு மிகவும் வருத்தம்..

இதுதான் முதல் போட்டி என்பதால, இதில் கற்றுக் கொண்டவற்றை வைத்து அடுத்த போட்டியை சிறப்பாய் நடத்தலாம் என்று நம்புகின்றேன். நீங்கள் சுட்டி காட்டி இருந்த மதிப்பெண்கள் விசயமாகவும் சில கருத்துக்களை உங்கள் அனைவரிடம் இருந்தும் பெற விரும்புகின்றேன்.

கவிதையை அனுப்பியவர் யார் என்பதே தெரியாமல், கவிதையை மட்டும் வைத்துதான் நடுவர்கள் மதிப்பெண்கள் கொடுக்கின்றனர். அதேபோல் எந்த நடுவர் கொடுத்த மதிப்பெண் என்று தெரியாத அளவில்தான் முடிவுகளும் வெளியாகின்றன. ஆனால், எந்த கவிதை எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றது என்று தெரிந்தால்தானே, முடிவில் எல்லோருக்கும் நம்பிக்கை வரும் என்பது எனது எண்ணம்.

மதிப்பெண்களை நான் மட்டுமே அறிந்து, இவர்தான் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவித்தால், அதனால் எதுவும் சந்தேகம் வரலாமே என்பதற்காகத்தான், அனைவரது மதிப்பெண்களையும் வெளியிட்டேன். போட்டியில் கலந்துகொண்டவர்கள் இதை எப்படி பார்க்கின்றனர் என்பது தெரியவில்லை. இது சம்பந்தமாக கவிஞர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். :-)

எனக்கு இந்த முறை பிடித்துள்ளது. இஷானி சொல்வது போல் நம்மை இன்னும் மெருகேற்றிக்கொள்ள உதவும்.

மதிப்பெண் அடிப்படையில் வரிசை படுத்தி போடாமல் பெயர்களை வெளியிட்டதற்கு மிக்க நன்றி அண்ணா....!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

போட்டியில் வென்று பட்டம் பெற்ற கவியரசி கவிசிவாவுக்கும், இஷானிக்கும் எனது வாழ்த்துக்கள். போட்டியில் இடம் பெற்ற எல்லா கவிதைகளுமே அருமை. நடுவர்களின் தீர்ப்பும் அருமை.

கவிதைப் போட்டிக்கு என தனியாக ஒரு மெயில் ஐடியை உபயோகப்படுத்தலாம். அதனை கவிதை அனுப்பும் முறையிலேயே குறிப்பிட்டுவிடலாம். நீங்கள் தான் நடைமுறைச் சிக்கல்களைப் பார்த்துக்கொள்ளவேண்டும். எனக்கு எதுவும் தெரியாது.

மதிப்பெண் வெளியிடும்முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பொதுவாக கவிதை வெளியாகும்போது நிறைய பாராட்டுக்கள் கிடைக்கும். சில விமர்சனங்கள் கிடைக்கும். பாராட்டுக்களில் சில உண்மையான பாராட்டுகளாகவும் சில ஊக்கத்திற்காக வழங்கப்பட்டதாகவும் இருக்கும். போட்டியில் கலந்துகொண்ட நம் கவிதையின் மதிப்பெண்களை நாம் பார்க்கும்போது (quantified criticism) நம்மைத் திருத்திக் கொள்ள, இன்னும் சிறப்பாக எழுத நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

உதாரணமாக, என் கவிதை யாரையும் பெரிதாக impress செய்யவில்லை. யாரிடமிருந்தும் தனித்து அதிக மதிப்பெண் பெறவில்லை. அதேபோல் யாரிடமிருந்தும் குறைந்த மதிப்பெண் பெறவில்லை. எல்லோருக்கும் ஓரளவு பிடித்துள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். இதுவே எனக்கு எப்படி மற்றவருக்கு பிடிக்கும்படி எழுதுவது என்று யோசிக்க வைக்கும். ஒவ்வொரு நடுவரிடமிருந்தும் அதிக மதிப்பெண் பெற்றுள்ள கவிதைகளைப் படித்து உணர வைக்கும்.

மொத்தத்தில் இந்த முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மற்றவர்களின் கருத்தையும் கேட்டு முடிவெடுங்கள். மீண்டும் உங்களுக்கு நன்றி. இதை எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகவே கருதுகிறேன்.

குறிப்பு: 30 வரிக்கு மிகாமல் என்பதையும் தீர்க்கமாகச் சொல்லிவிடுங்கள். அல்லது அந்த விதியை எடுத்துவிடலாம். விதி என்று வைத்துவிட்டு விதிமீறலை அனுமதிப்பது நல்லதல்ல. பின்னால் இது நீண்டுகொண்டே போய் 50 வரிகளில் முடியலாம். யாரும் தவறாக எண்ண வேண்டாம். யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல எனக்கு.

அன்புடன்,
இஷானி

அட்மின் அண்ணா

ஒரு சந்தேகம். இதை இங்கே கேட்பதற்கு மன்னிக்கவும்.

நம் சமையல் குறிப்புகளில் வரும் பிழைகள், ஏதாவது சேர்ப்பது, நீக்குவது என்ற ஆப்ஷன் இருக்கா?

இல்லை எனக்கு தான் தெரியலையா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//நம் சமையல் குறிப்புகளில் வரும் பிழைகள், ஏதாவது சேர்ப்பது, நீக்குவது என்ற ஆப்ஷன் ..//

நம் சமையல் குறிப்புகள் என்று நீங்கள் குறிப்பிடுவது, நீங்கள் கூட்டாஞ்சோற்றில் கொடுக்கும் சமையல் குறிப்ப்புகள் என்று எண்ணுகின்றேன். நீங்கள் நேரடியாக கொடுத்த குறிப்புகளை எடிட் செய்யலாம். நீங்கள் லாகின் செய்த பின்பு அந்த குறிப்பினை திறந்தால், பார்வையிடு, மாற்று என்று இரண்டு லிக்ங்க்ஸ் குறிப்பின் மேலே இருக்கும். அதில் 'மாற்று'வை கிளிக் செய்து மாற்றங்கள் செய்யலாம்.

மேலும் சில பதிவுகள்