கவிதைப் போட்டியில் வென்றவர்களை இங்கே வாழ்த்தலாம் வாங்க..

கவிதை முடிவுகள் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் ஆப்சன் கொடுக்கவில்லை. அந்த பக்கம் மிகவும் பெரிதாக நீளும் என்பதால். அதேபோல், போட்டியில் கலந்து கொண்ட கவிதைகள் உள்ள பக்கத்திலும் பின்னூட்டம் ஆப்சன் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே மிகப் பெரிய பக்கமாக இருப்பதால்.

எனவே, கவிதைப் போட்டி சம்பந்தமான உங்கள் வாழ்த்துக்கள், விமர்சனங்களை இந்த இழையில் பதிவு செய்யவும்.

கவிதை முடிவுகளைப் பார்க்க கீழ்கண்ட பக்கத்திற்கு செல்லவும்.
<a href="http://www.arusuvai.com/tamil/node/16033"> http://www.arusuvai.com/tamil/node/16033</a>

கவிதைகளை பார்க்க கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும்.

<a href="http://www.arusuvai.com/tamil/node/16035" > http://www.arusuvai.com/tamil/node/16035 </a>

கவிசிவா, இஷானி வாழ்த்துக்கள்.போட்டியில் கலந்து கொண்ட எல்லோருக்கும் பாராட்டுக்கள்

கவிதை போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற கவிசிவா,இஷானி அவர்களுக்கும்,சிறப்பு பரிசு பெற்ற ராதிகா,ப்ளோரா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கலக்குறீங்க அண்ணா.. இனிமே தான் ஒன்னொன்னா படிக்கப்போறேன்.. படிச்சுட்டு வந்து சொல்றேன்.. எல்லாருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,
சந்தனா

வாங்க வாங்க! என்ன இந்த பக்கம். அலங்காரத் தாரகை மாதிரி இங்கையும் ஒன்னு அனுப்பி இருக்கலாமே? தொடர்ந்து வர முயற்சியுங்கள்

அன்புடன்,
இஷானி

எல்லாரும் கலக்கிட்டீங்க (எங் கண்ணத் தான் :) )

முத ரெண்ட படிச்சவுடனே கண் கலங்க ஆரம்பிச்சிடுச்சே.. அப்புறம் வாறேன் மிச்சத்தப் படிக்க..

கவி சிவா.. வாழ்த்துக்கள்.. மனசுல இருக்கறத புலம்பித் தள்ளிட்டீங்க :)) இத மட்டும் உங்க பிறந்த வீட்டுல பாத்தாங்க, அழுது வச்சிடுவாங்க.. :((

இஷானி.. ம்ம்.. ரொம்ப நல்லாயிருந்ததுங்க.. வரிக்கு வரி.. எனக்கும் பொருந்தி வந்தது.. தனித்து உண்ண வெறுத்து.. ம்ம்.. உண்மைதான்..

//இழப்பு இருப்பு கணக்கெடுப்பில்
இன்றளவும் - இருப்பை
இரைகொள்கிறது என் இழப்பு//

அப்போ இழந்தது தானே அதிகம்? :)))))))))))))))))))))

ஓடிடறேன்.. அடிக்க வராதீங்க..

இப்படிக்கு,
சந்தனா

அச்சச்சோ.. ஓடறதுக்குள்ளாற எட்டிப் பிடிச்சிட்டாங்களே :))

இப்படிக்கு,
சந்தனா

கொஞ்ச நாள் கழிச்சு நானே வரலாம்ன்னு இருந்தேன்.. கவிசிவா இழுத்தாந்துட்டாங்க :) அப்ப நீங்களும் படிச்சாச்சா :))

இப்படிக்கு,
சந்தனா

இன்னும் அந்த பட்டிய மறக்கலயா?

அன்புடன்,
இஷானி

இல்ல.. அந்த வரிகள, அப்புறம் உங்க பேர பாத்ததும் டக்குன்னு மனசுல வந்தது :))

இப்படிக்கு,
சந்தனா

சரி.. இங்க அரட்ட நடத்துனா அண்ணன் கோச்சுக்கப் போறாரு.. இந்த வாட்டி கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு.. அடுத்த வாட்டி முன்னாடியே பாத்து யோசிக்க ஆரம்பிக்கறேன்..

பரிசெல்லாம் கொடுக்கறீங்க அண்ணா.. எப்படிப் பாராட்டறதுன்னே தெரியல..

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்