கவிதைப் போட்டியில் வென்றவர்களை இங்கே வாழ்த்தலாம் வாங்க..

கவிதை முடிவுகள் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் ஆப்சன் கொடுக்கவில்லை. அந்த பக்கம் மிகவும் பெரிதாக நீளும் என்பதால். அதேபோல், போட்டியில் கலந்து கொண்ட கவிதைகள் உள்ள பக்கத்திலும் பின்னூட்டம் ஆப்சன் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே மிகப் பெரிய பக்கமாக இருப்பதால்.

எனவே, கவிதைப் போட்டி சம்பந்தமான உங்கள் வாழ்த்துக்கள், விமர்சனங்களை இந்த இழையில் பதிவு செய்யவும்.

கவிதை முடிவுகளைப் பார்க்க கீழ்கண்ட பக்கத்திற்கு செல்லவும்.
<a href="http://www.arusuvai.com/tamil/node/16033"> http://www.arusuvai.com/tamil/node/16033</a>

கவிதைகளை பார்க்க கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும்.

<a href="http://www.arusuvai.com/tamil/node/16035" > http://www.arusuvai.com/tamil/node/16035 </a>

பாராட்டுக்கள் கவியரசி கவிசிவா மற்றும் இஷானி. கலக்கிட்டீங்க கலக்கலான கவிதைகளை கொடுத்து. எல்லாருடைய கவிதைகளுமே அருமை.
//////இழப்பு இருப்பு கணக்கெடுப்பில்
இன்றளவும் - இருப்பை
இரைகொள்கிறது என் இழப்பு!

இராமனோடு என்வாழ்க்கை
அசோகவனத்தில்! - அர்த்தமின்றி
அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது//////
இஷானி திரும்ப திரும்ப படிச்ச வரி இது.

பவி சொன்னது போல ஒவ்வொருத்தங்க சில வரிகளில் மனதை ரொம்பவே கவர்ந்தது ஒவ்வொன்னுதியும் கொடுத்த பதிவு பெருசா நீண்டுக் கொண்டே போகும் அதான் கொடுக்கல.

பரிசு மழையில் நனையும் இருவருக்கும் என் வாழ்த்து, 'வெண்கொற்ற குடை' ஆகட்டும்.

சிரிப்பே சிறந்த மருந்து

//கலக்குறீங்க அண்ணா.. இனிமே தான் ஒன்னொன்னா படிக்கப்போறேன்.//

இன்னுமொரு எங்கேயோ கேட்ட குரல் :-) வாங்க சந்தனா.. வாங்க..

//கொஞ்ச நாள் கழிச்சு நானே வரலாம்ன்னு இருந்தேன்..//

நல்லவேளை.. சில பேர் மாதிரி, அவங்க சொன்னாங்களேன்னு வந்து எட்டிப் பார்த்தேன்..(உள்அர்த்தம்: இல்லேன்னா இந்த கருமத்தை நான் ஏன் வந்து பார்க்குறேன்..:)) இவங்க கூப்பிட்டாங்களேன்னு வந்தேன்னு சொல்லாம, அட்லீஸ்ட் கொஞ்ச நாள் கழிச்சாவது வரலாம்ணு இருந்தீங்களே.. ரொம்ப சந்தோசமா இருக்கு. :-)

கொஞ்ச நாள் எப்ப கழியும்னு(இதை தப்பா அர்த்தம் பண்ணிக்காதீங்க:) 'நாங்க'ளும் ஆவலோட எதிர்பார்க்கிறோம். :-)

நன்றி. நன்றி..! இங்கேயும் எட்டிப்பார்த்து உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கு.

அட்மின் அண்ணா சந்தனா இன்னிக்கு மாட்டிக்கிட்டாங்க. நிறையா பேர் சத்தமில்லாம வந்து நோட்டம் விட்டுட்டு போறாங்களாம். நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்தது :). நீங்களும் கவனிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்:)

போட்டுக் கொடுத்த உடன் என்னா நிம்மதி :))))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ஜெய்லானி! தேடிப்பிடிச்சு வந்துட்டீங்களே! ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நன்றி மஹேஷ் யுவா! ஆளை பார்க்கவே முடியறதில்ல?!
நன்றி சாந்தினி! உண்மைதான்பா தினம் தினம் அனுபவிக்கிறோமே :(
நன்றி லக்ஷ்மிஸ்ரீ! இஷானியின் கவிதையில் எனக்கும் அந்த வரி மனதைத் தொட்டது
நன்றி தேன்! என்ன அடிக்கடி காணாம போயிடறீங்க?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிதையினைப் படித்து வாழ்த்து கூறிய சந்தனா, சகோ. தவமணி, மகேஸ்வரி, சாந்தினி, லக்ஷ்மிஸ்ரீ, மற்றும் தேன்மொழி அனைவருக்கும் என் இதயம்கனிந்த நன்றிகள்.

அன்புடன்,
இஷானி

நக்கல் தொனிக்குது வரவேற்புல :))

நினைவு வைத்துள்ளதுக்கு நன்றி அண்ணா.. அடுத்த போட்டிக்கு குதிச்சிடறேன் (கடல்ல) :)

இப்படிக்கு,
சந்தனா

பாப்பாவை பார்க்க மாலை சீக்கிரமே வீட்டுக்கு செல்வதால் ஆபிஸில் டைம் கிடைக்கும்போது அறுசுவைக்கு வருவேன்.

சந்தனா உங்களையும் பார்க்க முடிவதில்லை?

அன்புடன்
மகேஸ்வரி

கவிதை போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
சிறப்பான தீர்ப்பு வழங்கிய நடுவர்களுக்கு என் பாராட்டுகள்.
பரிசுப் போட்டியை சிறப்பாக நடத்திய அட்மினுக்கு என் நன்றிகள்.

இயற்கையை ரசிப்போம்!
இளைய தலைமுறையை காப்போம்!!

கவிதைப் போட்டியில் பரிசுபெற்ற கவிசிவா, இஷானி இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

உற்சாகமாகப் பங்கேற்ற சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். அடுத்து வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாகக் கவிதை எழுத வாழ்த்துகிறேன்.

அறுசுவை உறுப்பினர்களின் கவிதை எழுதும் திறனை ஊக்குவிக்கவென்று அழகாக ஓர் போட்டியை அறிவித்துப் பரிசுகளையும் அறிவித்துத் திறம்பட நடாத்தி வைத்த அட்மின் அவர்களுக்கும் அவரோடு துணையாக நின்று உழைக்கும் அறுசுவை டீமுக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி.

முதலாவது கவிதைப் போட்டிக்கு நடுவர்களாகப் பணியாற்றிய மூத்த அறுசுவை உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்.

மேலும் சில பதிவுகள்