ஆலோசனை கூறுங்கள்

எனக்கு இது 8 மாதம்.டெலிவெரி அக்டோபர் 20.எனக்கு இங்குதான் டெலிவெரி இந்தியா செல்லவில்லை.அம்மா
வரவிருக்கிறார்கள்.எனக்கு முதல் கொழந்தை ஆப்ரேஷந்தான்.அதனால் இப்பொழுதும் ஆப்ரேஷனாக் இருக்கும் என்று
அனைவரும் சொல்கிறார்கள்.ஆனால் நான் இம்முரை முதல் மாததில் இருந்து இப்பொழுது வரை எலலா வேலைகலையும்
நானேதான் செய்கிரேன்.மிகவும் கஷ்டப்பட்டு செய்கிறேண்.இம்முரை எனக்கு சுகப்பிரசவம் நடக்க வழி சொல்லுங்கள்.
ஆப்றேஷன் செய்து நான் பட்ட கொடுமை இன்னும் என்னால் மரக்க முடியாது

இந்தியாவில முதல் குழந்தை சிசேரியனா இருந்தா இரண்டாவது குழந்தைக்கு ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. அங்க நார்மலுக்கு சான்ஸ் கம்மி. அரபு நாடுகளில் நார்மல் டெலிவரிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. சிசேரியன் இரண்டாம் பட்சம்தான். ஸோ, தையிரியமா இருங்க. இப்ப எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க.

Don't Worry Be Happy.

ராதிகா இப்ப எதுவும் மனசு போட்டு குழப்பிக்க வேண்டாம். இது உங்க குழந்தையை தான் பாதிக்கும். ரிலாக்ஸா இருங்க. இரு வகை பிரசவத்தையும் சமாளிக்க கூடிய மனநிலையை பக்குவப்படுத்தி கொள்ளுங்கள்.

சுய பிரசவம் என்றாலும் நல்லது. சிசேரியன் என்றாலும் கவலை இல்லை என நினைத்துக்கொண்டே இருங்கள். தைரியத்தை வர வைத்துக்கொள்ளுங்கள். ஆப்ரேஷன் ஒன்றும் கஷ்ட்டமான முறை இல்லை. எனக்கும் சிசேரியன் தான். சுகப்பிரசவத்தில் எல்லாரும் துடிப்பதை பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக இருக்கும். வலி இல்லாமல் குழந்தை பெற்றெடுத்தேன் என்ற மனநிலையை கொண்டுவந்ததால் எனக்கு எதுவும் கஸ்ட்டமாக தெரியவில்லை. அதன் பிறகு மதமதப்பு தெளியும் போது அவர்கள் மருந்து கொடுத்து வலியை குறைப்பார்கள். வலி சிறிது சிறிதாக வந்து தான் உச்ச நிலை அடைவதால் நமக்கு தாங்கிகொள்ள தெரிந்துவிடும். 2 நாள் தான். 3 வது நாள் முழுவலியும் போய்விடும்.

தலை திரும்புதல், கொடி சுற்றுதல், அக்கி குடித்தல் போன்ற எந்த தொந்தரவும் சிசேரினில் பிறக்கும் குழந்தைக்கு இருப்பதில்லை என்பதால் நிறைய தாய்மார்கள் இப்போது சிசேரியன் செய்துக்கொள்ள தான் விருப்புகிறார்கள்.

உங்கள் ஆசையை நான் உதாசீனப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். இரண்டுமே நல்ல முறை தான். எதையும் ஏற்கும் மனப்பக்குவம் கிடைக்க தான் சிசேரியன் பற்றிய ப்ளஸ் சொன்னேன். சுக பிரசவம் அடைய வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ராதிகா

தவறாக நீங்கள் நினைக்கவில்லை என்றால் நான் ஒன்று சொல்லலாமா?

ஆலோசனை கூறுங்கள் என நீங்கள் கொடுத்த தலைப்பை சுக பிரசவம் நடக்க வழி கூறுங்கள் என மாற்றுங்கள். அப்போது தான் பின்னாளில் தேடுபவர்களுக்கு எளிதாக இருக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு ராதிகா,
'அனைவரும் சொல்வது' ஒரு புறம் இருக்கட்டும், உங்களையும் உள்ளே இருக்கும் உங்கள் குழந்தையையும் கவனிக்கும் வைத்தியர் மட்டுமே அறிவார் உங்களுக்கு எது நல்லதென.

//நானேதான் செய்கிரேன்.மிகவும் கஷ்டப்பட்டு செய்கிறேண்.இம்முரை எனக்கு சுகப்பிரசவம் நடக்க வழி சொல்லுங்கள்.// என்கிறீர்கள். அப்போ போன தடவை 'சிரமப்பட்டு வேலை செய்யாததால் தான் ஆப்பரேஷன் பண்ணப் போகிறோம்,' என்று சொல்லிவிட்டுச் செய்தார்களா? இல்லை அல்லவா? அதற்கு வேறு காரணம் இருந்தது. அதுபோல் இம்முறை அதே காரணம் அல்லது வேறு புதிய ஒரு காரணம் கூட சொல்லக் கூடும்.

சிசேரியன் என்பது தாய்மாரை வருத்துவதற்காகவோ வைத்தியசாலைகள் பணம் சம்பாதிப்பதற்காகவோ ஏற்படுத்தப்பட்டவை அல்ல. குழந்தைக்கோ, தாய்க்கோ அல்லது இருவருக்குமோ இயற்கைமுறைப் பிரசவத்தால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்னும் சந்தர்ப்பத்தில் மாற்றாக மேற்கொள்ளப்படுவது.

//ஆப்றேஷன் செய்து நான் பட்ட கொடுமை இன்னும் என்னால் மரக்க முடியாது// புரிகிறது. இது எல்லோருக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரி இராது. கவலைப் படாதீர்கள். இயற்கையாகப் பிரசவித்தும் //நான் பட்ட கொடுமை இன்னும் என்னால் மறக்க முடியாது.// என்று நினைவுகூருபவர்கள் இருக்கிறார்கள்.

சிசேரியன் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் அப்படிச் செய்ய இயலாது போய் இயற்கையாகப் பிரசவித்துப் பின்னால் பலகாலம் (கிட்டத்தட்ட 20 வருடங்கள்) பலவிதத்தில் சிரமம் அனுபவித்த ஒருவரை எனக்குத் தெரியும்.

பயப்படாமல் இருங்கள். சாதாரணமாக இருங்கள். வைத்தியர் சொல்வதைக் கேளுங்கள். நல்லதே நடக்கும்.

எனக்கும் முதல் குழந்தை சிசேரியன் தான் .இரண்டாவதும் சிசேரியன் சவுதியில் பிறந்தது,ஆனால் என் தோழிக்கு நார்மல் . அதனால் மனதை போட்டு குழப்பாதீங்க.ஆமினா&புனிதாசொல்வது சரி

ராதிகா வாழ்த்துக்கள்......
உங்களுக்கு சந்தேகம் இருப்பின் உங்களின் மருத்துவரிடம் எதை பற்றி ஆலோசித்து பாருங்க! எல்லா வேலையும் செய்தாலே நார்மல் டெலிவரி ஆகும் இல்லை வேலை செய்யதவர்களுக்கு ஆபிரஷன் என்று அர்த்தம் இல்லை.
முதல் குழந்தை நார்மல் இல்லை என்றால் எதனால் என்ற காரணம் உங்களுக்கு தெரிந்தால் இரண்டாவது நார்மலா இல்லையா என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.
முதலில் ஆபிரஷன் செய்து இரண்டாவது நார்மலாக இருக்க நிறைய வாய்ப்புள்ளது. முதலில் குழந்தையின் பொசிஷன் breech இல்லை cephalic என்று தெரிந்து கொள்ளவும். முதலில் செய்த ஆபிரேஷன் தழும்பு குறுக்கில் சிறியதாக இருக்க வேண்டும் (transverse incision......தமிழில் சரியாக சொல்ல தெரிய வில்லை), pelvis எலும்பு சிறியதாக இருக்க கூடாது போன்று நிறைய இருக்கிறது.
உங்கள் மருத்துவர் தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல சிறந்தவர். எதையும் போட்டு குழப்பாதீர்கள். ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ennoda anupavathil irundhu solren neenga c section panikonga.na first delivery normal venun ninachen but enaku c section than achu.first normal delivery ku injection potanga nala pain um vanthathu konja neram kalichu baby yoda heart beat ketanga illa udanae operation panni baby ya aduthirlam sonanga ana nadanthathu ennana operation um panni baby yum died.na kulanthaiyum illama operation panna kastatha anupavichien so prefer c section thatz safe for u and baby.na ungaluku ithu oru suggestion than solren pa payapada vendam be bold pa.all the best pa.

ராதிகா வாழ்த்துக்கள் உடம்ப நல்லா பாத்துகோங்க எனக்கு அந்த அளவிற்க்கு அனுபவமில்லை, பயப்டாதிங்க, உங்க குட்டி ரியாமா எப்படி இருக்காங்க அவங்ககிட்ட வரப்போர குட்டி குழந்தைக்கிட்ட பேசுங்க அனுபவசாலிகள் நிறையா சொல்லிருக்காங்க கேட்டுக்கோங்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

ராதிகா நீங்க AMH ல தான டெலிவரி பார்க்க போறீங்க. அங்க டாக்டர்ஸ் கிட்ட CONSULT பண்ணுங்க. முதல் டெலிவரி ஆபரேஷன் பன்னதுக்கான காரணம் சொல்லி செகண்ட் டெலிவரி நோர்மல் ஆறதுக்கு என்ன பண்ணலாம்னு ஆலோசனை கேளுங்கள். AMH LA MATERNAL TREATMENT நல்ல குடுப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். உங்களுக்கு எது நல்லதோ அதை தான் பண்ணுவாங்க. பயப்பட வேண்டாம், நீங்க நிறைய தேவை இல்லாத விசயங்களை நினைச்சு உங்களை குழப்பிகிரிங்க. ALWAYS THINK POSITIVE. BE HAPPY AND ENJOY WITH REYA AND UR NEW BABY. உங்க அம்மா எப்போ பஹ்ரைன் வருவாங்க.
TAKE CARE

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்