கொடுமை என்றால் என்ன

ஹாய் தோழிகளே உங்களிடம் உலகில் மிக கொடுமையானது எது என்று கேட்டால் உங்கள் பதில்
என்னவாக இருக்கும்.அதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.என் கருத்து மிக மிக கொடுமை தனிமை,பசி.

மிகக் கொடுமையானது.... அவரவர் வசிக்கும் சூழ்நிலையை பொறுத்தது. பசி - இது தான் பெருங்கொடுமை. சிலருக்கு தனிமை, சிலருக்கு பணம், சிலருக்கு குடைச்சல் குடுக்கும் உறவினர்கள். எனக்கு என்னவென்று கேட்கிறீங்களா? தூக்கம் வராதது தான் கொடுமையா இருக்கு. இல்லாவிட்டால் அதிகாலை 5 மணிக்கு எழுந்து, இப்போ உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருப்பேனா??
வாணி

நல்லாருக்கீங்களா? உங்க உடம்பு எப்படி இருக்கு? என்னை போறுத்தவரைக்கும் தனிமைங்கறது அவங்கவங்க மனச பொறுத்ததுங்க ஏன்னா எனக்கு தனிமை தான் ரொம்ப புடிக்கும் இப்ப அப்படி தனிமை கிடைக்கறதில்லை. நான் தனியா இருக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருப்பேன்... மற்றவங்களுக்கு எப்படியோ தெரியலை. ரொம்ப கொடுமையான விஷயம் பசியும், தகுதி இருந்தும் வேலை கிடைக்காம இருக்கறதையும் தான் சொல்லுவேன் மற்ற தோழிகள் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

யார் மேல் அதிகமா பாசம் வச்சுருக்கோமோ, அவங்களோட பிரிவு!

கணவனின் சந்தேகப்பார்வை

காதலன்/காதலி யின் ஏமாற்றம்

உண்மை நட்பு இழத்தல்

ஏழமை

பசி,பட்டினி

பிறரிடம் கேட்கும் பிச்சை

இப்படி நிறையா சொல்லலாம். என்னை மிகவும் பாதித்த கொடுமை என்றால்

முதலில் சொன்ன பாய்ண்ட் தான் :(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் வானி நீங்க யுஸ் ல எங்க இருக்கிங்க.என் friend boostenla இருக்கா.

இளமையில் வறுமை.அதன் காரணமாக கூலியாக கொத்தடிமையாக
மாற்றப்படும் குழந்தைகள்.அதே போல் பிள்ளைகளால் கைவிடபட்ட முதியோர்கள்
ஏங்க நல்ல தலைப்பை ஆரம்பிச்சுட்டு அதிலே அரட்டை அடிக்காதீங்க.

ஹாய் லதாவினி முதலில் உங்களூக்கு ஒணம் நல்வாழ்த்துக்கள்.நான் நல்லா இருக்கேன் பா.
நீங்க இந்தியாவுல இருக்கிறதால் உங்களூக்கு தனிமை புடிசிருக்கு ஆனா என்னை பொல்
முகம் தெரியாத ஊர்ல இருக்கும்பொழுதுதான் புரியும்.இது என் கருத்து தப்பா நினைக்காதிங்க.

என்னைப் பொறுத்த வரை கொடுமை என்பது அவரவர் மன ஓட்டத்தைப் பொறுத்தது. எந்த தீமையிலும் உள்ள நன்மையை காணத் தெரிந்து விட்டால் எதுவுமே கொடுமை இல்லை :-).

சமூகக் கொடுமைகளை மட்டும் மனம் ஏற்க மறுக்கிறது :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//கொடிது கொடிது வறுமை கொடிது;

அதனினும் கொடிது இளமையில் வறுமை;

அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;

அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;

அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பதுதானே //

இது நான் சொல்லலை!

ஒளவை பாட்டி சொன்னது!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

உங்க வாழ்த்துக்கு நன்றிங்க ரேயம்மா... சரிதான் நீங்க சொல்றது ஆனா மனசலவுல நாம என்ன நினைக்கறோமோ அதுபடி தான் நம்ம எல்லா செயல்களும் இருக்கும் நீங்க தனியா இருக்கோம்கற எண்ணத்தில ஊரிப்போய்ருக்கீங்கன்னு நினைக்கறேன் இப்படி சொல்லறதுக்கு தப்பா நினைக்க வேணாம். நான் கொஞ்ச மாசத்துக்கு முன்ன பெங்களூர்ல இருந்தேன் அங்க யாருமே எனக்கு இல்ல ஒருத்தர்கிட்ட கூட நான் போய் பேசினதும் இல்ல அப்ப நான் 5மாசம் வேற... லவ் மேரேஜ்கரதால என் சொந்தங்கள்னு யாருமே இல்லை பேசிக்கிட்டது கூட இல்லை... இருந்தாலும் நம்ம கவலை குழந்தையை பாதிக்கக்கூடாதுன்னு மனசலவுல என்னை தேத்திக்கிட்டேன் ஜாலியா கேம்ஸ் விளையாடுவேன் பாட்டு ஓடிட்டே இருக்கும்... நல்லா பாடுவேன் நான் அதனால அத ரெக்கார்ட் பன்னி அத நானே கேப்பேன் எனக்கு டைம் ஏன் இவ்ளோ சீக்கிரமா போகுதோன்னுதான் இருக்கும்... இன்னும் நிறைய விஷயங்கள என்னை நான் ஈடுபடுத்திக்கிட்டப்ப எனக்கு டைப் போறதே தெரியாது. எல்லாரும் ஒரே மாறியே இருக்கமாட்டாங்கதான் இருந்தாலும் எல்லாமே நம்ம கைல தாங்க இருக்கு... அப்பல்லாம் அறுசுவை பத்தி தெரியாது இப்பவும் நினைப்பேன் அப்பவே தெரியாம போய்ருச்சேன்னு தெரிஞ்சுருந்தா இன்னும் சந்தோஷமா இருந்துருப்பேன்... பெரிய பதிவா போய்ருச்சு....

கவலை வேணாம் தனிமையை தூக்கி போட்டுட்டு ஜாலியா லைஃப்ப என்ஜாய் பன்னுங்க ரேயம்மா... ஓகே...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

வாணி சொன்னது போல ராத்திரி தூக்கம் வராதது கொடுமையிலும் கொடுமைங்க. இப்போ இங்க மணி காலைல ஆறு. இன்னும் நான் தூங்கல.. என் கணவர் நல்லா குறட்டை விட்டு தூங்குறார். பொறாமையா இருக்கு.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்