அரட்டை 2010 - பாகம் 28

தோழிகள், தோழர்களுக்கு...

எப்பவும் அரட்டைக்கு தான் முதல் இடம் அதிக பதிவும் இதுக்குத்தான் சோ இதையும் சீக்கிரமா அதிக பதிவுகளுடன் முடிக்க கேட்டுக்கரேன்...

என்னடா ஆரம்பிக்க ஆரம்பிச்ச ஒடனேயே முடிக்க சொல்றன்னு பாக்கறீங்களா? அதான் இது கில்லி மாறியாச்சே சும்மா பறக்குமே......

மீண்டும் பேசலாம்...

உண்மையாவே நான் இப்ப கிளம்பறேன் எல்லாருக்கும் டாட்டா...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அரட்டை இழை தெரியாம ஆரம்பிச்சுட்டேன் மன்னிக்கவும் அதனால 27ன்னு இருந்ததை பாகம் 28ன்னு மாத்திட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்...

நான் பேங்களூர் போய்ட்டு வந்து இதுல பதிவு குடுக்கறேன் இப்ப எஸ்கேப் இன்னுமா இருக்கன்னு கவி மேடம் அடிக்க வராங்க ஓகே ஓகே பாய்......

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.


GOOD MORNING!

காத்தால 4 மணிக்கு ஒங்களை பாத்ததுல நேக்கு ரொம்ப சந்தோஷம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

உங்க ஸ்பீடுக்கு என்னால அரட்டை அடிக்க முடியாது மாமி. அதுனாலதான் இந்த பக்கமே வர்றது இல்ல.

அறுசுவைல எல்லா இடத்திலேயும் புகுந்து கலக்கிகிட்டு இருக்கீங்க. சுருக்கமா நச்சுன்னு கருத்த சொல்லிட்டு போய்டுறீங்க.

அன்புடன்,
இஷானி

//அறுசுவைல எல்லா இடத்திலேயும் புகுந்து கலக்கிகிட்டு இருக்கீங்க. சுருக்கமா நச்சுன்னு கருத்த சொல்லிட்டு போய்டுறீங்க.//

இது கொஞ்சம் ஓவரான புகழ்ச்சியா இருக்கே! ;-)

அட்மின் சார் காதுல விழுந்ததுன்னு வெச்சுக்கோங்கோ அவ்வளவுதான்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

புகழனும்ங்கிறதுக்காக இல்ல மாமி. உண்மையத்தான் சொல்றேன். எங்க போனாலும் அந்த இடத்த ரொம்ப lively ஆ மாத்திடுறீங்க. அத நீங்க வலிய செய்றீங்களா? இல்ல தானாவே உங்களுக்கு அமைஞ்சதான்னு தெரியல. உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அது. உங்கள் குழந்தைகள், உறவுகள், நண்பர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

உங்களிடம் பேசியது இல்லையே தவிர, உங்கள் பதிவுகளைத் தவறாமல் படிப்பேன். மனதிற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

அன்புடன்,
இஷானி

நேக்கு மனுஷான்னா உயிர்!

எல்லார் கூடவும் பேசுவேன்!

தெரிஞ்சவா தெரியாதவான்னெ கெடையாது!

ரோட்ல பாத்து யாராவது பேசினானு வெச்சுக்கோங்கோ அவா கூட பேசிண்டேருப்பேன்!

மாமா கூட ராத்ரில கூட பேசிண்டேருக்கைய்யேனு கேலி பண்ணுவார்னா பாத்துக்கோங்கோ!ஹிஹிஹி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்ன, தனியா உட்கார்ந்து அறுசுவைல இருக்கற எல்லாக் குறிப்பும் படிச்சு கமண்ட் போடறீங்களா மோகனா?


ஒங்களை பாக்கனும்னு நெனச்சென்!

தனியா இருக்கரதை பாத்து ஓடி வந்துட்டேளே!

ஆஹா! இதுவல்லவோ நட்பூஊஊஊ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சிரிக்கப் பயமா இருக்கே.
என் குறிப்பு எதுக்குமே கமண்ட் போட மாட்டீங்களா?

எனக்கும் ஒரு கிண்ணம் பானகம் ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்