புதுமனை புகுவிழா எப்படி செய்யவேண்டும்

புதுமனை புகுவிழா எப்படி செய்யவேண்டும்,எல்லா முறைகளையும், சம்ப்ரதாயங்களையும், மேலும் எந்த நாள்,நட்சத்திரம் சிறந்தது போன்ற உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு போடுங்கள்.

ஹேமா புதுமணை புகுவிழா இனிதாய் அமையா வாழ்த்துக்கள்
அவரவர்களுகேன்றே பாரம்பரிய பழக்கம் இருக்கும் அது போல் செய்ய வேண்டும்,

முதல் நாள் யாகம் வளர்த்து, மோது கட்டி இழுத்து தீட்டை கழிப்பார்கள், கிரஹகப்பிரவேசம் அன்று கணபதி ஹோமம் செய்வார்கள் இப்படி நிறைய உண்டு ஹேமா, ஒரு சில பேர் வரும் விருந்தினர்க்கு(உறவினர்களுக்கு) புடவை, வேஸ்டி சட்டை எடுத்து தருவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஒவ்வோருவருக்கும் அது வேறுபடும்.
நீங்கள் உங்கள் குடும்பத்து பெரியவர்களிடம் கேட்டு செய்வது சிறப்பு.

நமது தோழிகளுடைய கருத்துக்களையும் கேட்போம் ஹேமா,

அன்புடன்
நித்யா

ஹேமா, எங்கு புதுமனை புகுவிழா கொண்டாட்டம்... இங்கா? அல்லது இந்தியாவிலா.. இங்கு என்றால் நான் உங்களுக்கு அனைத்தையும் தெளிவாக கூறுகிறேன்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நவம்பர் மாதம்னு சொன்ன நியாபகம். அதுக்கு இப்பவே ரெடி ஆகிட்டீங்களா? சேலம் பக்கத்தில் தான உங்க ஊருனு சொன்னீங்க. அப்போ அங்க பக்கத்துல இருக்குற ஐயர் கிட்ட கேட்டா என்னென்ன செய்ய வேண்டும்னு நல்லா தெளிவா சொல்லுவாங்களே.
பொதுவா, கிரஹப்ரவேசம் என்பது விடியற்காலையிலேயே செய்து விடவேண்டும். கணபதி ஹோமம் வளர்த்து பூஜை செய்து பசு மாடு, கன்றுக்கு பூஜை செய்து வீட்டின் உள் அழைத்து வருவார்கள். அதன் பின் நம்ம வீட்டை நல்லபடியா கட்டி முடித்துக் கொடுத்த தொழிலாளர்களுக்கு துணிமனிகள் எடுத்துக் கொடுத்து மரியாதை செய்வார்கள். அப்பறம் வழக்கம் போல நம்ம நண்பர்கள், சொந்தபந்தங்கள் அக்கம்பக்கத்தினரை கூப்பிட்டு விருந்துக் கொடுப்பார்கள்.
எனக்கு தெரிந்ததை சொன்னேன் ஹேமா அதை தவிர நீங்க உங்க வீட்டு வழக்கம் என்னவே அதை உங்க மாமியார், மாமனார், அம்மா, அப்பா கிட்ட கேட்டு செய்ங்க.

இந்தியாவில் தான்பா, நான் என்ன நினைக்கிறேன்னா எல்லாருக்கும் ஒரு வழக்கம் இருக்கு இருந்தாலும் கொஞ்சம் நல்லா சிறப்பா சுவாமிக்கு பூஜை பண்ணனும்னு ஆசை அவ்வளவுதான்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி மறக்காமல்,மறுக்காமல் அனைத்துத்தோழிகளும் கிரகப்ரவேஷத்திற்க்கு வந்துவிடுங்கள்பா

ஆமாப்பா இப்பவே ரெடியாயிட்டு இருக்கேன் அக்டோபர்ல ஊருக்கு போறேன்பா, ஏன்னா என் ஆத்துக்காரருக்கு லீவு அதிகமா கிடைக்காது அதனால சில முன் ஏற்பாடுகளை என் வீட்டு பெரியவர்களுடன் சேர்ந்து நானும் பார்க்கவேண்டும், அப்படி செய்துவைத்துவிட்டால் அவருக்கும் அதிக அலைச்சல் மற்றும் வேலை பளு குறையும் அதான்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி மறக்காமல்,மறுக்காமல் கிரகப்ரவேஷத்திற்க்கு வந்துவிடுங்கள்பா

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மாமி இங்க வந்து பதிவு போடமாட்டிங்களா? உங்களுக்குதான் சில ஆச்சார,அனுஷ்டானங்களெல்லாம் தெரியும்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹேமா மேடம்,
எனக்கு பூஜை பற்றி தெரியாது
வரும் விருந்தினர்களை நன்கு உபசரியுங்கள்
அவர்களை அட்டென்ட் செய்ய தனியே முக்கிய ஆட்களை உதவ செய்யுங்கள்
அவர்கள் அனைவரையும் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு நன்றி உரைத்து ஒரு கடிதமும்,அவர்களுடைய புகைப்பட copy ஒன்றையும் அனுப்புங்கள் உங்களை எப்போதும் மறக்க மாட்டார்கள் குறை இருப்பினும் மறைந்து விடும்
எங்கள் திருமணத்தில் இதை தான் அப்பா செய்தார் நல்ல response !!

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்